அகரம்: ENGLISH
Showing posts with label ENGLISH. Show all posts
Showing posts with label ENGLISH. Show all posts
Grammar Patterns -1 றில் ஐந்து மற்றும் ஆறாவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். இன்று அவ்விரண்டு வாக்கியங்களையும் விரிவாக கற்கப் போகின்றோம்.

இந்த ஆங்கிலம் வலைத்தளத்திற்கு நீங்கள் புதிதாக வருகைத் தந்தவரானால் உங்கள் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 1 லிருந்தே தொடருங்கள். முக்கியமாகக் "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். அதுவே இந்த ஆங்கில பயிற்சியைத் தொடர எளிதாக இருக்கும்.

சரி இன்றைய பாடத்திற்குச் செல்வோம்.

5. I will do a job
நான் செய்வேன் ஒரு வேலை.
நான் செய்கிறேன் ஒரு வேலை. (சற்றுப் பிறகு)

6. I won’t do a job. (will + not)
நான் செய்ய மாட்டேன் ஒரு வேலை.

மேலுள்ள 5, 6 வரிகளைப் பாருங்கள். இவை சாதாரண எதிர்கால வாக்கியங்களாகும். இவற்றை ஆங்கிலத்தில் "Simple Future Tense" என்று கூறுவர். இந்த Form ல் தன்னிலை, முன்னிலை, படர்க்கை மற்றும் ஒருமை, பன்மை எல்லாவற்றிற்கும் "will" என்றே பயன்படுத்தப்படுகிறது.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb
/You /He /She /It / We / You /They + will + do a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் உள்ளது.

Negative
Subject
 + Auxiliary verb + not + Main verb
/You /He /She /It /You /We /They + won’t + do a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb
Will + /you /he /she /it /you /we /they + do a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும் "Auxiliary verb" துணை வினை வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள்.

இவற்றை சரியாக விளங்கிக் கொண்டோமானால் நாமாகவே மிக எளிதாக கேள்வி பதில்களை மாற்றி அமைத்துக் கொள்ளலாம் என்பது உங்களுக்கே புரியும். கீழுள்ள உதாரணங்களைப் பாருங்கள்.

Will you do a job?
நீ செய்வாயா ஒரு வேலை?
Yes, I will do a job
ஆம், நான் செய்வேன் ஒரு வேலை.
No, I won’t do a job. (will + not)
இல்லை, நான் செய்யமாட்டேன் ஒரு வேலை.

Will you speak in English?
நீ பேசுவாயா அங்கிலத்தில்?
Yes, I will speak in English.
ஆம், நான் பேசுவேன் ஆங்கிலத்தில்
No, I won’t speak in English. (will + not)
இல்லை, நான் பேசமாட்டேன் ஆங்கிலத்தில்.

Will you go to school?
நீ போவாயா பாடசாலைக்கு?
Yes, I will go to school.
ஆம், நான் போவேன் பாடசாலைக்கு.
No, I won’t go to school. (will + not)
இல்லை, நான் போகமாட்டேன் பாடசாலைக்கு.

இப்போது மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் வாக்கியங்களை நீங்களாகவே கேள்வி பதிலாக மாற்றிப் பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.
நீங்கள் எழுதிப் பயிற்சி செய்யும் போது அவற்றை வாசித்து வாசித்து எழுதவும். அவ்வாறு வாசித்து வாசித்து எழுதும் பொழுது அவை தானாகவே உங்கள் மனதில் பதிந்து, உங்களின் வாசிக்கும் ஆற்றலையும், ஆங்கில அறிவையும் அதிவேகமாக வளர்த்துக்கொள்ள உதவும். அதேவேளை எழுத்தாற்றலையும் எளிதாக பெற்றுவிடலாம்.

சரி பயிற்சியைத் தொடருங்கள்.

1. I will open the door.
நான் திறப்பேன் கதவை.

2. I will apply for vacancies.
நான் விண்ணப்பிப்பேன் தொழில்களுக்காக.

3. I will speak in English fluently.
நான் பேசுவேன் ஆங்கிலத்தில் வாக்கு வன்மையாக. (தடங்களின்றி)

4. will ask for an increment.
நான் கேட்பேன் ஓர் (பதவி/சம்பளம்) உயர்வு.

5. I will ask for a transfer.
நான் கேட்பேன் ஒரு இடமாற்றம்.

6. I will celebrate my birthday.
நான் கொண்டாடுவேன் எனது பிறந்தநாளை.

7. I will consult Dr. Sivaram.
நான் (மருத்துவ) ஆலோசனை பெறுவேன் மருத்துவர் சிவராமிடம்.

8. I will control my temper.
நான் கட்டுப்படுத்துவேன் எனது கோபத்தை.

9. I will negotiate the auto charges.
நான் பேரம் பேசுவேன் முச்சக்கரவண்டிக் கட்டணத்தை.

10. I will stop smoking.
நான் நிறுத்துவேன் புகைப்பிடிப்பதை.

11. I will help him.
நான் உதவுவேன் அவனுக்கு.

12. I will open a current account.
நான் திறப்பேன் ஒரு நடைமுறைக் கணக்கு.

13. I will obey your rules and regulations.
நான் கீழ்படிவேன் உங்களுடைய சட்டத் திட்டங்களுக்கு.

14. I will pick up this work.
நாம் பற்றிக்கொள்வேன் இந்த வேலையை.

15. will resign from the job.
நான் இராஜினமா செய்வேன் வேலையிலிருந்து.

16. I will correct the mistakes.
நான் சரிப்படுத்துவேன் பிழைகளை.

17. I will play football.
நான் விளையாடுவேன் உதைப்பந்தாட்டம்.

18. I will do my duty.
நான் செய்வேன் எனது கடமையை.

19. I will follow a computer course.
நான் பின்பற்றுவேன் ஒரு கணனி பாடப் பயிற்சி.

20. will forget her.
நான் மறப்பேன் அவளை.

21. I will solve problems.
நான் தீர்ப்பேன் பிரச்சினைகளை.

22. I will speak English in the office
நான் பேசுவேன் ஆங்கிலம் காரியாலயத்தில்.

23. will go to university.
நான் போவேன் பல்கலைக்கழத்திற்கு.

24. I will translate English to Tamil.
நான் மொழிமாற்றுவேன் ஆங்கிலத்தை தமிழுக்கு.

25. will give up these habits.
நான் விட்டுவிடுவேன் இந்த தீயப்பழக்கங்களை.

26. will study for the exam.
நான் படிப்பேன் பரீட்சைக்காக.

27. I will do my homework.
நான் செய்வேன் எனது விட்டுப்பாடம்.

28. I will become stronger.
நான் பலசாலியாவேன்.

29. I will become chief executive of Hong Kong.
நான் நிறைவேற்று தலமை அதிகாரியாவேன் ஹொங்கொங்கின்.

30. will become prime minister of India.
நான் பிரதமராவேன் இந்தியாவின்.

31. I will take treatment for my hand.
நான் எடுப்பேன் சிகிச்சை எனது கைக்கு.

32. I will introduce him to you.
நான் அறிமுகப்படுத்துவேன் அவனை உனக்கு.

33. I will untie this knot.
நான் அவிழ்ப்பேன் இந்த முடிச்சை.

34. I will build my dream house.
நான் கட்டுவேன் எனது கனவு வீட்டை/மாளிகையை.

35. I will co-operate with others.
நான் ஒத்துழைப்பேன் மற்றவர்களுடன்.

36. will discuss about this problem.
நான் கலந்தாலோசிப்பேன் இந்தப் பிரச்சினையைப் பற்றி.

37. I will drop you in Vavuniya junction.
நான் இறக்குவேன் உன்னை வவுனியா சந்தியில்.

38. I will buy a bens car.
நான் வாங்குவேன் ஒரு பென்ஸ் மகிழுந்து.

39. I will bank the money.
நான் வைப்பிடுவேன் வங்கியில்.

40. I will come up in my life.
நான் முன்னேறுவேன் வாழ்க்கையில்.

41. I will draw salary US$ 100,000 monthly.
நான் பெறுவேன் சம்பளம் ஒரு லட்சம் டொலர் மாதாந்தம்.

42. I will fly to America.
நான் (விமானத்தில்) பறப்பேன் அமெரிக்காவிற்கு.

43. will go to Europe.
நான் போவேன் ஐரோப்பாவிற்கு.

44. I will invite my friends for festival.
நான் அழைப்பேன் எனது நண்பர்களை பண்டிகைக்கு.

45. I will improve my English knowledge.
நான் வளர்ப்பேன் எனது ஆங்கில அறிவை.

46. I will practice English at night.
நான் பயிற்சி செய்வேன் ஆங்கிலம் இரவில்.

47. will become wealthy.
நான் செல்வந்தனாவேன்.

48. I will get married after few months.
நான் திருமணம் முடிப்பேன் அடுத்தச் சில மாதங்களில்.

49. will become chief executive.
நான் நிறைவேற்றுத் தலமை அதிகாரியாவேன்.

50. will become famous in the world.
நான் பிரசித்திப்பெறுவேன் இந்த உலகில்.

Homework:

A. மேலே நாம் கற்றச் சொற்களை You, He, She, It, We, You, They போன்ற சொற்களைப் பயன்படுத்தி வாக்கியங்கள் அமையுங்கள்.

B. மேலே உதாரணமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்வி பதில்களைப் பார்த்து இந்த 50 வாக்கியங்களையும் கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள்.

C. இன்று நாம் கற்ற (Simple Future Tense) சாதாரண எதிர்கால சொற்களைப் போல் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் எதிர்காலத் எண்ணங்கள், நோக்கங்களாக என்னென்ன செய்ய விரும்புகின்றீர்களோ, அவற்றை ஆங்கிலத்தில் "will" எனும் துணைவினையுடன் எழுதிப் பயிற்சி செய்யுங்கள்.


ஆங்கில உரையாடல்களின் போது இலகுவாகவும் வேகமாகவும் பேசுவதற்கு ஆங்கில "short form" சுருக்க உச்சரிப்பு பயன்பாடுகள் முக்கியாமானது. எனவே நீங்களும் சிறப்பாக ஆங்கிலம் பேச விரும்புவராயின் இதுப் போன்ற "short form" முறைகளைப் பின்பற்றி ஆங்கிலத் தொனிக்கேற்ப பேசிப் பழகுங்கள்.

Affirmative short form 

I will - I'llYou will - You'll 
He will - 
He'llShe will - She'llIt will - It'llWe will - We'll
You will - You'll
They will - They'll


Negative short forms

இந்த எதிர்கால எதிர்மறையாக பயன்படும் துணைவினைகளின் "Sort Forms" களை மூன்று விதமாக வகைப் படுத்தியுள்ளனர்.
I will not - I'll not - I won'tYou will not - You'll not - You won'tHe will not - He'll not - He won'tShe will not - She'll not - She won'tIt will not - It'll not - It won't
We will not - We'll not - We won't
You will not - You'll not - You won'tThey will not - They'll not - They won't


won’t என்பது will + not இன் சுருக்கமாகும். (Short form of will + not)

want - "வேண்டும்" எனும் பொருளிலும் ஒரு சொல் இருப்பதால் இரண்டையும் குழப்பிக்கொள்ளாதீர்கள். (இரண்டுக்கும் வேறுப்பாட்டை அவதானிக்கவும்.)

குறிப்பு: 

ஆங்கிலத்தில் எதிர்காலச் சொற்பிரயோகங்களாக ஆறு வெவ்வேறு விதமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது அவை:

1. Future “will”
2. Future “going to”
3. Present continuous used as future.
4. Future Continuous
5. Future perfect simple
6. Future perfect continuous

இருப்பினும் நாம் இன்றையப் பாடத்தில் Future “will” அதாவது சாதாரண எதிர்காலத்தைப் பற்றி மட்டுமே கற்றோம். மற்றவைகளை எதிர்வரும் பாடங்களில் கற்கலாம்.

சாதாரண எதிர்காலம் Future "will"

இதன் பயன்பாட்டை மூன்று விதமாகப் பிரித்துப்பார்க்கலாம்.

1. எண்ணமிடல், நோக்கம், எதிர்ப்பார்ப்பு போன்றவற்றைக் கூறுதல்.

I will come tomorrow. - நான் வருவேன் நாளை
He will work with us. - அவர் வேலை செய்வார் எங்களுடன்.
I will win. - நான் வெற்றிப்பெறுவேன்.

2. முன்கூட்டியே ஒன்றை யூகத்தின் அடிப்படையில் கூறுதல்.

I think the Indian cricket team will win the match.
நான் நினைக்கிறேன் இந்தியன் கிரிக்கெட் குழு வெற்றி பெரும் ஆட்டத்தில்.
I think you will like her
நான் நினைக்கிறேன் நீ விரும்புவாய் அவளை.

முதல் வாக்கியத்தைப் பாருங்கள் அதில் இந்தியன் கிரிக்கெட் குழு 100% வீதம் வெற்றிப்பெரும் என்று திட்டவட்டமாக கூறப்படவில்லை. எனவே அக்கூற்று நிச்சயமற்றது. ஆனால் எப்படியோ (யூகத்தின் அடிப்படையில்) வெற்றிப்பெரும் எனக் கூறப்படுகின்றது. இதை ஆங்கிலத்தில் "Future prediction" என்று கூறுவர். அதாவது தாம் நினைப்பதே நடக்கும் எனும் எதிர்ப்பார்ப்புடன் கூறுவதாகவும் கொள்ளலாம்.

இதுப் போன்ற நிச்சயமற்று கூறும் எதிர்கால வினையை வெளிப்படுத்த "will" உடன் அதிகமாக பயன்படும் சொற்கள் probably, possibly, I think, I hope.

3. மற்றும் இந்த "will" உறுதியளித்து அல்லது உறுதியை வெளிப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படுகின்றது.

I will be there on time.
நான் அங்கிருப்பேன் (குறித்த) நேரத்தில்.

அதாவது குறித்த நேரத்திற்கு குறித்த இடத்தில் இருப்பேன் என்பதை முன்கூட்டியே உறுதியாகக் (promise) கூறப்படுகின்றது. (ஆனால் இருப்பாரா என்பதைத் தீர்மானிக்க முடியாது)

I promise, I will be there on time, don’t worry.
நான் உறுதியளிக்கிறேன், நான் அங்கிருப்பேன் (குறித்த) நேரத்திற்கு, கவலைப்படாதே.

வரைப்படம்

நன்றி
அன்புடன் ஆசிரியர் www.agaram.lk

Grammar Patters 1 றின் மூன்று மற்றும் நான்காவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். நான் ஏற்கெனவே 73 வாக்கியங்களில் ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கமைய இன்று 3, 4 காவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை விரிவாகக் கற்கப் போகின்றோம்.

3. I did a job
4. I didn’t do a job.

இவை இரண்டும் இறந்தக்கால சொற்களாகும். இவற்றை தமிழில் கடந்தக்கால சொற்கள் என்றும் கூறுவர். ஆங்கிலத்தில் "Simple Past Tense" அல்லது "Past Simple Tense" என்றழைப்பர். இந்த இறந்தக்கால சொற்களின் பயன்பாடுப் பற்றி மேலும் விரிவாகக் பார்ப்போம்.

இந்த "Simple Past Tense" சாதாரண இறந்தக்காலச் சொற்களை எப்படி கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதை முதலில் பார்ப்போம்.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb
I
/He/She/It/You/We/They + __ + did a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளதை கவனிக்கவும். இதில் (Auxiliary verb) "துணை வினை" பயன்படாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb
I/He/She/It/You/We/They + did + not + do a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb
Did 
I/he/she/it/you/we/they + do a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும், துணை வினை (Auxiliary verb வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள். இவற்றை சரியாக விளங்கிக் கொண்டோமானால் ஆயிரக்கணக்கான புதுப் புது வாக்கியங்களை நாமாகவே உருவாக்கி, அவற்றை கேள்வியும் பதிலாகவும் நாமாகவே மாற்றி அமைத்துவிடலாம்.

உதாரணம்:

Did you do a job?
நீ செய்தாயா ஒரு வேலை?
Yes, I did a job
ஆம், நான் செய்தேன் ஒரு வேலை.
No, I didn’t do a job. (did + not)
இல்லை, நான் செய்யவில்லை இரு வேலை.

Did you speak in English?
நீ பேசினாயா அங்கிலத்தில்?
Yes, spoke in English.
ஆம், நான் பேசினேன் ஆங்கிலத்தில்
No, didn’t speak in English. (did + not)
இல்லை, நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.

Did you go to school?
நீ போனாயா பாடசாலைக்கு?
Yes, I went to school.
ஆம், நான் போனேன் பாடசாலைக்கு.
No, I didn’t go to school. (did + not)
இல்லை, நான் போகவில்லை பாடசாலைக்கு.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் வாக்கியங்களை கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

1. I answered the phone
நான் பதிலளித்தேன் தொலைப்பேசிக்கு

2. I studied English for ten years.
நான் படித்தேன் ஆங்கிலம் பத்து வருடங்களாக.

3. applied for vacancies.
நான் விண்ணப்பித்தேன் தொழில் வாய்ப்புக்காக

4. I forgave him.
நான் மன்னித்தேன் அவனை.

5. I travelled by MTR.
நான் பிரயாணம் செய்தேன் MTR ல். (நவீன நிலத்தடித் தொடரூந்து வண்டி)

6. came back last Friday.
நான் திரும்பி வந்தேன் கடந்த வெள்ளிக்கிழமை.

7. asked for an increment.
நான் கேட்டேன் ஒரு (பதவி/சம்பல)உயர்வு.

8. I bought a car.
நான் வாங்கினேன் ஒரு மகிழூந்து.

9. wrote an article.
நான் எழுதினேன் ஒரு கட்டுரை.

10. borrowed money from Sarmilan.
நான் கடன் வாங்கினேன் காசு சர்மிலனிடமிருந்து.

11. lent a book to Ravi.
நான் இரவல்/கடன் கொடுத்தேன் ஒரு புத்தகம் ரவிக்கு

12. cracked jokes with others.
நான் பகிடிவிட்டேன் மற்றவர்களுடன்.

13. boiled water.
நான் கொதிக்கவைத்தேன் தண்ணீர்.

14. got wet.
நான் நனைந்தேன்.

15. gave priority to my works.
நான் முக்கியத்துவம் கொடுத்தேன் எனது வேலைகளுக்கு.

16. got confrontation with my Boss.
நான் எதிரெதிராகச் செயல் பட்டேன் என் தலைவனுடன்.

17. I got an appointment.
நான் பெற்றேன் ஒரு நியமனம்.

18. I got into the bus.
நான் ஏறினேன் பேரூந்துக்குள்.

19. got a loan from the bank.
நான் பெற்றேன் ஒரு கடன் வங்கியிலிருந்து.

20. read Thinakkural News paper.
நான் வாசித்தேன் தினக்குரல் செய்தித் தாள்.

21. escaped from the danger.
நான் தப்பினேன் அபாயத்திலிருந்து.

22. studied in Jaffna.
நான் படித்தேன் யாழ்ப்பாணத்தில்.

23. I ironed my clothes.
நான் அயன் செய்தேன் எனது உடைகளை.

24. I invited my friends.
நான் அழைப்புவிடுத்தேன் எனது நண்பர்களுக்கு.

25. I deposited money to the bank.
நான் வைப்பீடு செய்தேன் காசை வங்கியில்.

26. I born in 1998.
நான் பிறந்தேன் 1998 ல்.

27. I played football.
நான் விளையாடினேன் உதைப்பந்தாட்டம்

28. I introduced her to my family.
நான் அறிமுகப்படுத்தினேன் அவளை எனது குடும்பத்தாருக்கு.

29. I inquired about this.
நான் விசாரித்தேன் இதைப் பற்றி.

30. I informed to police.
நான் தெரிவித்தேன் காவல் துறைக்கு.

31. I learned driving in Hong Kong.
நான் கற்றேன் வாகனம் ஓட்ட ஹொங்கொங்கில்

32. met Kavitha yesterday
நான் சந்தித்தேன் கவிதாவை நேற்று.

33. I married in 1995.
நான் திருமணம் செய்தேன் 1995 ல்.

34. I played Guitar.
நான் வாசித்தேன் கிட்டார்.

35. visited Thailand last year.
நான் (பார்க்கச்) சென்றேன் தாய்லாந்து கடந்த வருடம்.

36. I opened a current account.
நான் திறந்தேன் ஒரு நடைமுறைக் கணக்கு.

37. sent a message.
நான் அனுப்பினேன் ஒரு தகவல்.

38. I paid in Installments.
நான் செலுத்தினேன் (பணம்) தவணைமுறையில்.
39. I taught English.
நான் படிப்பித்தேன் ஆங்கிலம்.

40. I went to university.
நான் சென்றேன் பல்கலைக்கழகத்திற்கு.

41. I repaid the loan.
நான் திரும்பச் செலுத்தினேன் கடன்.

42. arrived ten minutes ago.
நான் வந்தடைந்தேன் பத்து நிமிடங்களுக்கு முன்பே.

43. lived in Bangkok for two years.
நான் வசித்தேன் பெங்கொக்கில் இரண்டு வருடங்களாக.

44. I worked very hard.
நான் வேலை செய்தேன் மிகவும் கடினமாக.

45. left from home.
நான் வெளியேறினேன் வீட்டிலிருந்து.

46. I sang a song.
நான் பாடினேன் ஒரு பாடல்.

47. practiced English last night.
நான் பயிற்சி செய்தேன் ஆங்கிலம் கடந்த இரவு.

48. I forgot her.
நான் மறந்தேன் அவளை.

49. decorated my house.
நான் அலங்கரித்தேன் எனது வீட்டை.

50. wrote a letter to my mother.
நான் எழுதினேன் ஒரு கடிதம் என் தாயாருக்கு.

Homework:

பயிற்சி 1: மேலே I (நான்) என்று எழுதிப் பயிற்சி செய்தோம். அவற்றை அதே ஒழுங்கில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தைப் பின்பற்றி You, He, She, It, We, They எனும் சொற்களுடன் வாக்கியங்களை அமையுங்கள்.

Subject + Main verb +
spoke in English. - நான் பேசினேன் ஆங்கிலத்தில்.
You spoke in English. - நீ பேசினாய் ஆங்கிலத்தில்.
He spoke in English. - அவன் பேசினான் ஆங்கிலத்தில்.
She spoke in English. - அவள் பேசினாள் ஆங்கிலத்தில்.
It spoke in English. - அது பேசியது ஆங்கிலத்தில்.
We spoke in English. நாங்கள்/நாம் பேசினோம் ஆங்கிலத்தில்.
They spoke in English. - அவர்கள் பேசினார்கள் ஆங்கிலத்தில்.

பயிற்சி 2: ஏற்கெனவே ஆங்கில பாடப் பயிற்சி 4 ல் சாதாரண நிகழ்கால வாக்கியங்கள் 50 கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் இறந்தக்காலச் சொற்களாக மாற்றிப் பயிற்சி செய்யலாம். அதில் வினைச்சொல் அதாவது பிரதான "verb" கறுத்தத் தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும், அந்த இடங்களில் Irregular verbs அட்டவணையப்பார்த்து இறந்தக் கால வினைச் சொற்களாக மாற்றி அமைக்க வேண்டியது தான் உங்கள் வேலை.

பயிற்சி 3: இன்று 'நடந்து முடிந்த' அல்லது உங்கள் வாழ்க்கையில் 'நிகழ்ந்து முடிந்த' அனைத்து இறந்தக்கால விடயங்களையும் தமிழில் எழுதிக்கொள்ளுங்கள். பின் அவற்றை இன்று நாம் கற்றது போன்று ஆங்கிலத்தில் மாற்றி எழுதிப் பாருங்கள். எமது இந்தப் பாடப் பயிற்சிகள் நிறைவுப் பெறும் போது உங்கள் வாழ்க்கை சுயசரிதையை நீங்களே எழுதியிருப்பீர்கள்.

குறிப்பு:


சாதாரண நிகழ்கால சொற்கள், இறந்தக்கால வினைச்சொற்களாக மாறும் போது ஏற்படும் மாற்றங்களை அவதானியுங்கள். இவற்றை இரண்டு விதமாக பிரித்துக் கற்கலாம்.

1. Regular verbs - with regular verbs + ed 
2. Irregular verbs - The past form for irregular verbs is variable. You need to learn it by heart.

1. Regular verbs - எல்லா இறந்தக்கால வினைச்சொற்களின் முடிவிலும் ஒரே ஒழுங்காக – ed இணைந்து வருபவைகள்.
உதாரணம்:

I played cricket
I visited Japan last year
I watched TV last night

Study போன்று "y" எழுத்தில் முடிவடையும் சில சொற்களுடன் மட்டும் - ied இணைந்து வரும்.
உதாரணம்:

I studied English.

Live, Love போன்ற சொற்கள் " e" எழுத்தில் முடிவடைவதால், இவற்றின் இறந்தக்கால சொற்களின் போது - யை மட்டும் இட்டால் போதும்.
உதாரணம்:

I lived in Australia for two years.

2. Irregular verbs - இந்த இறந்தக்கால Irregular verbs கள் வெவ்வேறு விதமாக ஒரு ஒழுங்கு முறையற்று வரும். இதனால் இவற்றை Irregular verbs அட்டவணையைமனப்பாடம் செய்து தான் கற்றுக் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக கீழே உள்ள சொற்களைப் பாருங்கள்.

fell off a horse yesterday.
went to school
taught English
wrote a letter
slept yesterday

இறந்தக்கால குறிச்சொற்கள் [Simple Past - Signal words]

yesterday
Last night/ week/ year/century
A month ago
In 2007
In the past

இறந்தக்காலம் என்பது செயல் அல்லது நிகழ்வு ஏற்கெனவே முடிந்து விட்டதைக் குறிக்கின்றது. இது இந்த நொடியில் முடிவுற்ற ஒரு விடயமாகவும் இருக்கலாம். பல மில்லியன் வருடங்களுக்கு முன்னதாகவே முடிவுற்ற ஒன்றாகவும் இருக்கலாம். வரைப்படத்தைப் பாருங்கள்.
உச்சரிப்பு (Pronunciation)
குறிப்பாக "regular verbs" களின் முடிவின் போதும் – ed வரும். இருப்பினும் இவற்றின் உச்சரிப்பின் போது சிற்சில மாற்றங்கள் உள்ளன. அவற்றை அவதானித்து பேசிப் பழகுங்கள்.
Agreed - எக்gரீட்d
Loved - லவ்ட்d
Judged - ஜட்ஜ்ட்d
Begged - பெக்ட்d
Cleaned - க்ளீண்ட்d
இவை சொற்களின் முடிவில் (ட்D) எனும் விதமாக ஒலிப்பவைகள்.
Stopped - /t/
Laughed - /t/
Washed - /t/
Watched - /t/
Talked - /t/
இவை முடிவில் (ட்t) போன்று ஒலிப்பவைகள்.

Needed - நீdடட்dCollected - கலெக்டட்d
இவை முடிவில் (டட்d) போன்று ஒலிப்பவைகள்.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் ஊடாக கேட்டறிந்துக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் www.agaram.lk
இன்றைய ஆங்கில பாடப் பயிற்சியாக நாம் "Irregular verbs" அட்டவணையை பயிற்சி செய்யப் போகின்றோம். இது எமது அடுத்த பாடமான "ஆங்கில பாடப் பயிற்சி 10" க்கு அவசியமானது என்பதால் இதனை இன்று கொடுக்கின்றோம்.

நாம் ஆங்கில பாடப் பயிற்சி 7 ல் "இருக்கிறதுஎன்பதைக் குறிக்கும் "have/have got" சொற்களை மையப்படுத்திய கிறமர் பெட்டர்னைக் கற்றோம்.

இன்று "there is" எனும் சொல்லை மையப்படுத்திய கிறமர் பெட்டர்னை கற்கப் போகின்றோம்இந்த "there is" எனும் சொல்லும்நாம் சென்றப் பாடத்தில் கற்ற "have"எனும் சொல்லும் தமிழில் "இருக்கிறதுஎனும் ஒரே அர்த்ததைத் தான் தருகின்றன.இருப்பினும் இவ்விரண்டினதும் பயன்பாடுகள் வெவ்வேறானவை என்பதை கருத்தில் கொள்க.

There is + "இருக்கிறதுஎனும் சொல்லை மையப்படுத்தி இன்றைய கிறமர் பெட்டர்னை 22வாக்கியங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளதுஇவற்றையும் நாம் ஏற்கெனவே கற்ற "கிறமர் பெட்டன்களைப்போல் மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள்இது மிகவும் இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும்.

ஆங்கிலத்தில் "Well begun is half done" என்பர்அதுபோல் எமது ஆங்கில பாடப் பயிற்சியில் வழங்கப்படும் "கிறமர் பெட்டன்களைநீங்கள் மனப்பாடம் செய்துக்கொண்டாலே பாதி வெற்றிப்பெற்று விட்டதற்கு சமனானதாகும்.

நீங்கள் புதிதாக இந்த "ஆங்கிலம்வலைத்தளத்திற்கு வருகைத்தந்தவரானால் எமது பாடப் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 01 லிருந்தே தொடரும் படி கேட்டுக்கொள்கின்றோம்.அதுவே மிக எளிதாக இப்பாடப்பயிற்சிகளை தொடர வழிவகுக்கும்.
    There is a book.
    இருக்கிறது ஒரு புத்தகம்.
    There is not a book. (isn’t)
    இல்லை ஒரு புத்தகம்.
    There are books.
    இருக்கின்றன புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There are not books. (aren’t)
    இல்லை புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There can be a book.
    இருக்க முடியும் ஒரு புத்தகம்.
    There can't be a book.
    இருக்க முடியாது ஒரு புத்தகம்.
    There will be a book.
    இருக்கும் ஒரு புத்தகம்.
    There won't be a book.
    இருக்காது ஒரு புத்தகம்.
    There was a book.
    இருந்தது ஒரு புத்தகம்.
    There would have been a book.
    இருந்திருக்கும் ஒரு புத்தகம்.
    There were books
    இருந்தன புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There must be a book.
    (நிச்சயமாகஇருக்க வேண்டும் ஒரு புத்தகம்.
    There must have been a book.
    இருந்திருக்க வேண்டும் ஒரு புத்தகம். (நிச்சயமாக)
    There may be a book.
    இருக்கலாம் ஒரு புத்தகம்.
    There may have been a book.
    இருந்திருக்கலாம் ஒரு புத்தகம்.
    There has to a book.
    இருக்கவேண்டும் ஒரு புத்தகம்.

    There have to be books.
    இருக்கவேண்டும் புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There should be a book.
    இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.
    There ought to be a book.
    எப்படியும் இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.

    There has been a book.
    சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து இருக்கிறது ஒரு புத்தகம்.
    There had been a book.
    அப்போதிருந்து/அக்காலத்திலிருந்து இருந்தது ஒரு புத்தகம்.

    There have been books.
    சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து இருக்கின்றன புத்தகங்கள். (பன்மை/ Plural)

    Home work:
    There is a book on the table. (3, 4, 11, 17, 22 Plural)
    இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்
    There is an election in the USA .(3, 4, 11, 17, 22 Plural)
    இருக்கிறது ஒரு தேர்தல் அமெரிக்காவில்
    There are two classical languages in India. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன இரண்டு செம்மொழிகள் இந்தியாவில்.
    There are 1652 languages in India. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன 1652 மொழிகள் இந்தியாவில்.
    There are 6760 languages in the world. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன 6760 மொழிகள் உலகத்தில்.
    There are hundred of vegetable items in the market. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் சந்தையில்.
    கவனிக்கவும்:

    ஒருமையாக ஆரம்பிக்கும் வாக்கியங்களில் 3, 4, 11, 17, 22 போன்ற இடங்களில் பன்மையாக (Plural) மாற்றி எழுதுங்கள்.

    பன்மையாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களில் 1, 2, 9, 16, 20 போன்ற இலக்கங்களின் போது (Singular) ஒருமையாக மாற்றி எழுதுங்கள்.
    வேறுபாடுகள் (Have / There is)

    “haveதன்னுடையஅல்லது தனக்கே சொந்தமாக "இருக்கிறதுஎனும் உரிமையைக் குறிப்பதற்கு பயன்படுகின்றது.

    there is - பொதுவாக "இருக்கிறதுஎன்பதை குறிப்பதற்கு பயன்படுகின்றது.

    உதாரணமாக:

    “I have a book.” எனும் போது "என்னிடம் இருக்கிறது ஒரு புத்தகம்.” என பொருள்படுகின்றதுஅதாவது தன்னிடம் அல்லது தனக்கு உரிமையாக "ஒரு புத்தகம் இருக்கிறதுஎன்பதை அவ்வாக்கியம் வெளிப்படுத்துகிறது
    "There is a book on the table." எனும் இவ்வாக்கியம் "இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்எனும் போது அப்புத்தகம் யாருடையதுயாருக்கு உரிமையானது?என்பதைப் பற்றியெல்லாம் விவரிக்கவில்லைபொதுவாக "ஒரு புத்தகம் இருக்கிறது." அது "மேசையின் மேல் இருக்கிறது." என்பதை மட்டுமே விவரிக்கிறது என்பதை கருத்தில் கொள்கஅது யாருடையது என்பது எமக்குத் தெரியாது அல்லது உரிமையாளர் யார் என்பதை குறிப்பிடாமல் பேசுகின்றோம்.
குறிப்பு:

Here – இங்கே

There – அங்கே

Here and there – இங்கும் அங்கும்

"There" என்ற சொல் "அங்கேஎன பொருள்பட்டாலும் இந்த கிறமர் பெட்டர்னில் உள்ள"There is +" எனும் சொல்லுக்கு அவ்வாறான அர்த்தம் கொள்ளவேண்டாம். “இருக்கிறது"எனும் அர்த்தத்திலேயே பயன்படுத்துங்கள்.

சரிபயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் ஊடாகவோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.

நன்றி!

அன்புடன்
www.agaram.lk


நாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு (Verb) வினைச்சொல்லை 73 ன்று விதமாக மாற்றி பயிற்சி செய்தோம். Grammar Patterns 4 கில் ஒரு பெயர்ச்சொல்லை (Noun) 32 விதமாக மாற்றியும் பயிற்சி செய்தோம்.

இன்றைய "கிரமர் பெட்டர்ன்" சற்று வித்தியாசமானது. அதாவது “இருக்கிறது” (have) எனும் சொல்லை மையமாகக்கொண்டே இன்றைய “கிரமர் பெட்டனை” நாம் வடிவமைத்துள்ளோம்.

Have எனும் சொல்லின் தமிழ் அர்த்தம் “இருக்கிறது” என்பதாகும். உதாரணமாக "I have work." எனும் வாக்கியத்தை தமிழில் மொழிப்பெயர்த்தால் “எனக்கு இருக்கிறது வேலை” என்று வரும். இந்த வார்த்தையை “எனக்கு இருக்கிறது வேலை, இருந்தது, இருக்கலாம், இருக்கும், இருந்திருக்கும், இருந்திருக்கலாம்" என 23 ன்று வாக்கியங்களாக மாற்றி இன்று பயிற்சி செய்யப் போகின்றோம்.

நாம் ஏற்கெனவே பயிற்சி செய்த மற்ற Grammar Patterns களைப் போல் இந்த கிரமர் பெட்டர்னையும் வாய்ப்பாடு பாடமாக்குவதைப் போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் புதிதாக இந்த “ஆங்கிலம்” தளத்திற்கு வருகைத் தந்தவரானால், Grammar Patterns 1 லிருந்தே உங்கள் பயிற்சிகளை தொடரும்படி கேட்டுக்கொள்கின்றோம். அதுவே இப்பாடப் பயிற்சியைத் தொடர இலகுவாக இருக்கும்.

சரி இன்றைய பாடத்தைத் தொடருவோம்.
Practice the following Grammar Patterns Daily
1. I have work.
2. I have got work.
எனக்கு இருக்கிறது வேலை.

3. I don’t have work.
4. I haven't got work.
எனக்கு இல்லை வேலை.

5. I had work.
எனக்கு இருந்தது வேலை.

6. I didn't have work.
எனக்கு இருக்கவில்லை வேலை.

7. I may have work.
8. I might have work.
9. I may be having work.
எனக்கு இருக்கலாம் வேலை.

10. I must have work.
எனக்கு இருக்க வேண்டும் வேலை.

11. I should have work.
எனக்கு இருக்கவே வேண்டும் வேலை.

12. I ought to have work.
எனக்கு எப்படியும் இருக்கவே வேண்டும் வேலை.

13. I must be having work.
எனக்கு நிச்சயம் இருக்கவேண்டும் வேலை.

14. I could have had work.
எனக்கு இருக்க இருந்தது வேலை.

15. I should have had work.
எனக்கு இருக்கவே இருந்தது வேலை.

16. I may have had work.
எனக்கு இருந்திருக்கலாம் வேலை.

17. I must have had work.
எனக்கு நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் வேலை.

18. I would have had work.
எனக்கு இருந்திருக்கும் வேலை.

19. I shouldn't have had work.
எனக்கு அநாவசியம் இருந்தது வேலை.

20. I needn't have had work.
எனக்கு அநாவசியம் இருந்தது வேலை.

21. I will have work.
எனக்கு இருக்கும் வேலை.

22. I won't have work.
எனக்கு இருக்காது வேலை.

23. I wish I had work.
எவ்வளவு நல்லது எனக்கு இருந்தால் வேலை.

Homework:
இன்று நாம் கற்ற இந்த "கிரமர் பெட்டர்னை" போன்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் 23 விதமாக மாற்றி எழுதி, வாசித்து பயிற்சி செய்யுங்கள்.

1. I have an interview
எனக்கு இருக்கிறது ஒரு நேர்முகத்தேர்வு.

2. I have money
எனக்கு இருக்கிறது பணம்.

3. I have a Tamil dictionary
எனக்கு இருக்கிறது ஒரு தமிழ் அகராதி.

4. I have a kind heart.
எனக்கு இருக்கிறது ஒரு இரக்கமான இதயம்.

5. I have two brothers and three sisters
எனக்கு இருக்கிறார்கள் இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும்.

6. I have fever.
எனக்கு இருக்கிறது காய்ச்சல்.

7. I have cough and cold.
எனக்கு இருக்கிறது இருமலும் தடுமலும்.

8. I have a beautiful house
எனக்கு இருக்கிறது ஒரு அழகான வீடு.

9. I have a car
எனக்கு இருக்கிறது ஒரு மகிழூந்து.

10. I have pass port.
எனக்கு இருக்கிறது கடவுச்சீட்டு.

ஓர்/ஒரு என்பதற்கு "a" என்றும் "an" என்றும் இரண்டு விதமாக ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றோம். இவ்வேறுப்பாட்டை Use a/an - Vowels and Consonant பாடத்தில் பார்க்கவும்.

குறிப்பு:

“இருக்கிறது” எனும் சொல்லின் ஆங்கில அர்த்தம் "have" ஆகும். இந்த “have” எனும் சொல் குறிப்பாக “இருக்கிறது” என்று பொருள்பட்டாலும், அது தனக்கே, அல்லது தனக்கு சொந்தமாகவே இருக்கிறது எனும் உரிமையைக் குறிக்க பயன்படும் சொல் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இவற்றை நான்கு விதமாக பிரித்துப் பார்க்கலாம்.

1. "Possession" உரிமை அல்லது உடமை போன்றவற்றை குறிப்பிடுவதற்கு:
உதாரணம்:

Does he have a car?
அவனுக்கு இருக்கிறதா ஒரு மகிழூந்து?
Do you have a beautiful house?
உனக்கு இருக்கிறதா ஒரு அழகான வீடு?

2. "Relationships" உறவுமுறைகள் தொடர்பாக பேசுவதற்கு:
உதாரணம்:

How many brothers do you have?
எத்தனை சகோதரர்கள் உனக்கு இருக்கிறார்கள்?

3. "Illnesses" நோய்கள் தொடர்பாக பேசுவதற்கு:
உதாரணம்:

Do you have fever?
உனக்கு இருக்கிறதா காய்ச்சல்?
Do you have cough and cold?
உனக்கு இருக்கிறதா இருமலும் தடுமலும்?

4. "Characteristics" பிரத்தியேகமான, சிறப்பியல்புகள் தொடர்பாகப் பேசுவதற்கு:

Do you have an interview?
உனக்கு இருக்கிறதா ஒரு நேர்முகத்தேர்வு?
Do you have a kind heart?
உனக்கு இருக்கிறதா ஓர் இரக்கமான இதயம்?

உரிமைகள் உடமைகள் பற்றியோ, உறவு, நட்பு குறித்துப் பேசும் போதோ, நோய்கள் தொடர்பாகப் பேசும் போதோ, சிறப்பியல்புகளைப் பற்றி குறிப்பிடும் போதோ "Have" அல்லது "have got" எனும் இரண்டில் எதைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இரண்டும் ஒரே அர்த்தத்தைக் குறிக்கும் நிகழ்காலச் சொற்களாகும்.

I have work.
I have got work. இவ்விரண்டு சொற்களுக்கும் "எனக்கு இருக்கிறது வேலை" என்றே தமிழாக்கம் கொடுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். have/ have got எனும் இரண்டு சொற்பதங்களுமே ஒரே மாதிரியான அர்த்தத்தையே தருகின்றது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

கவனிக்கவும்:
இங்கே நாம் "have got" என்று பயன்படுத்தியிருப்பதால், இங்கு காணப்படும் "got" எனும் சொல் "get" இன் Past Tense/Past Participle லாக வரும் "got" என கருதிவிடவேண்டாம்.

இந்த have, have got எனும் இரண்டு நிகழ்காலச் சொற்களையும் கேள்வி பதிலாக மாற்றும் போது எவ்வாறான வேறுபாடுகள் தோன்றுகின்றன என்பதைக் கீழே கவனியுங்கள்.

Do you have a cold?
Have you got a cold?

Yes, I have a cold.
Yes, I have got a cold.

Do you have a house in the country?
Have you got a house in the country?
Yes, I have a house in the country.
Yes, I have got a house in the country.

Do you have any brothers or sisters?
Have you got any brothers or sisters?
No, I don’t have any brothers or sisters.
No, I haven’t got any brothers or sisters.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

இது மிக மிக இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம். அதற்கு முன்பாகவே இந்த "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளுங்கள். அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.

நன்றி!


அன்புடன்
www.agaram.lk