அகரம்: General knowledge
Showing posts with label General knowledge. Show all posts
Showing posts with label General knowledge. Show all posts
http://noolaham.net/project/39/3837/3837.pdf http://noolaham.net/project/51/5100/5100.pdf http://noolaham.net/project/52/5112/5112.pdf http://noolaham.net/project/52/5189/5189.pdf http://noolaham.net/project/38/3756/3756.pdf http://noolaham.net/project/19/1830/1830_5.pdf http://noolaham.net/project/19/1830/1830_6.pdf http://noolaham.net/project/19/1830/1830_7.pdf

N.THANANJEYAN (SLAS)
Provincial Director
Department of Rural Development - EPC


சட்ட அமுலாக்கம்


1.அரசியலமைப்பு 
    உறுப்புரை இல:14 (அ)- தகவலை அறியும் உரிமை. ( 19ம் திருத்தம்)

2.சட்டம்
    சட்ட இல: 12, 2016- தகவலறியும் உரிமைச் சட்டம்

3.ஒழுங்கு விதிகள்
    வர்தமானி இல: 2004/66 – 02.03.2017 
     RTI சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் 

4.சுற்றறிக்கை 
   சுற்றரிக்கை இல: RTI/01/2016
   RTI சட்டத்தின் ஏற்பாட்டின் கீழ் வெளிப்படுத்துகை
   சுற்றறிக்கை இல: MNPEA 04/2018
   அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பான முன்னோடித் தகவல்களின்          வெளிப்படுத்துகை.


தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்றால் என்ன ?

ஒவ்வொரு பிரசையும்
  பகிரங்க அதிகாரசபையின்
  உடைமையில், கட்டுக்காப்பில் அல்லது கட்டுப்பாட்டில் இருக்கின்ற தகவல்
  தகவல் பெறுவதற்கான உரிமை.


பிரசை என்பது :

பிறப்பினால் அல்லது பதிவினால் பிரசாவுரிமை பெற்றவர்கள், கூட்டிணைக்கப்பட்ட அல்லது கூட்டிணைக்கப்படாத உறுப்புரிமையின் முக்கால் பங்கினராக பிரசைகளைக் கொண்ட அமைப்புக்கள் பிரசைகள் ஆவர்.


பெறக்கூடிய தகவல்கள் (பிரிவு 43)


records
documents
memos
emails
opinions
advices
press releases
circulars
orders
log books
contracts
reports
papers
samples
models
correspondence
memorandum
draft legislation
book
plan
map
drawing
diagram
pictorial or graphic work
photograph
film
microfilm
sound
recording
video tape
machine readable record
computer records
and other documentary material

பகிரங்க அதிகாரசபை குறிப்பிடுவது – ( பிரிவு 43)

1) அமைச்சு
2) அலுவலகம்
3) அரச திணைக்களங்கள்
4) பொதுக் கூட்டுத்தாபனம்
5)  கம்பனிகள்
6)  உள்ளுராட்சி சபைகள்
7)  Pசiஎயவந நுவெவைல
8)  திணைக்களங்கள், அதிகாரசபைகள், நிறுவனங்கள்
9)  ஆரச சார்பற்ற அமைப்புக்கள்
10)  ஊயர் கல்வி நிறுவனங்கள்
11)  பிரத்தியேக கல்வி நிறவனங்கள், தொழில்சார், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள்
12)  நீதிமன்றங்கள், இணக்க சபைகள்

 தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் குறிக்கேள்

அரசியலமைப்பு உறுப்புரை 14 அ (19வது திருத்தச் சட்டம்) 
தகவலைப்பெற அணுகுதலுக்கான உரிமையை உத்தரவாதம் செய்கின்றது 
இதன் மூலம் 

  • பகிரங்க அதிகாரசபைகளின் வெளிப்படைத்தன்மையினைப் பேணிவளர்த்தல்
  • ஊழலை எதிர்த்து நிற்றல் 
  • பொறுப்புக்கூறும் தன்மையினை மேம்படுத்துதல் 
  • (பங்கேற்பு) நல்லாட்சியை மேம்படுத்துதல்

தகவலுக்கான உரிமை - வரலாறு

இலங்கை சார்க் வலயத்தில் தகவலுக்கான உரிமை பற்றிய சட்டமொன்றைக் கொண்டிராத ஒரே நாடாக இருப்பினும் இலங்கையில் இவ்வாறான சட்டமொன்றைக் கொண்டுவர வேண்டியதன் தேவைப்பாடு பற்றிய உரையாடல்கள் 1994 ஆம் ஆண்டு வரை நீண்டு செல்வதைக் காணலாம்.
குறிப்பாக 1994 பொதுத் தேர்தலில் பொதுஜன ஐக்கிய முன்னணியை ஆதரி்த்த ஊடக அமைப்புக்களும் சிவில் அமைப்புக்களும் தேர்தல் களத்தில் அதுபற்றிப் பேசியிருந்தன. 1994 ஆம் ஆண்டில் தகவல் சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயக்கவினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் ஊடாகக் கொள்கை என்னும் விஞ்ஞாபனம் இது பற்றிய எழுத்திலான முதலாவது ஆவணமாகும்.

ஆகவே இலங்கையில் 1994 இல் ஆரம்பமான தகவலுக்கான உரிமை பற்றிய சட்டம் தொடர்பான கலந்துரையாடல்களின் தொடர்ச்சியை இக்குறிப்பு தாங்கி வருகின்றது.

தகவலுக்கான உரிமையை அடிப்படை உரிமையாக அரசியலமைப்பில் உள்வாங்க வேண்டுமென 1994 ஆம் ஆண்டில் முதல் முறையாக கொள்கை ரீதியான தீர்மானம் vLf;fg;gl;lJ.
1994 ஒக்ரோபர் 10 ஆம் திகதி தகவல் சுற்றுலாத்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் தர்மசிறி சேனாநாயக்கவினால் அமைச்சரவை நிருபம் ஒன்றின் மூலம் பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் ஊடாகக் கொள்கை பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இரண்டாவது வி்டயமாக தகவலுக்கான உரிமையை பரந்தளவில் அங்கீகரிப்பதாகவும் அதற்கென அரசியலமைப்பு ரீதியான அந்தஸ்தினை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அரசியலமைப்பில் சிவில் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ளவாறு கருத்து தெரிவித்தற் சுதந்திரத்தில் தகவலுக்கான உரிமையும் உள்ளடக்கப்படுதல் வேண்டும்பரிந்துரை இல. 03.

தகவலதிகாரி


பொது அதிகார சபைகளில் காணப்படும் தகவல் அலுவலரே தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் ஒன்று கோரப்படும் போது அதனை வழங்கவேண்டிய பொறுப்புடையவர் ஆவார்.

தகவல் அலுவலர் தமது ஏனைய பணிகளிலும் பார்க்க தகவலுக்கான உரிமைச் சட்டம் சார்ந்த கடமைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவர்களது கடமையாகும்.

தகவல் அலுவலர் பிரசன்னமாகாத வேளை, குறித்த அலுவலகத்தின் தலைவர் தகவல் அலுவலரின் கடமைகளை மேற்கொள்ள கடமைப்பட்டவர் ஆவார்.

குறித்தளிக்கப்பட்ட அதிகாரி


உங்களால் கோரப்பட்ட தகவலானது தகவல் அதிகாரியினால் மறுக்கப்படும் சர்ந்தப்பத்தில் அதற்கு எதிரான மேன்முறையீட்டைக் கையாளுகின்ற அதிகாரி.

பிரஜை ஒருவர் தகவல் அலுவலரின் தீர்மானத்தில் திருப்தியுறாவிட்டால் அத்தீர்மானம் தொடர்பில் செய்யப்படுகின்ற மேன்முறையீட்டைக் கையாளுகின்ற அதிகாரி

இவர் தகவலதிகாரியின் தீர்மனத்திற்கு எதிரான மேன்முறையீட்டினை பரிசீரலித்து முடிவினை வழங்குவார் 




 தகவலுக்கான ஆணைக்குழு
குறித்த ஆணைக்குழுவானது 5 பேர் கொண்ட குழுவாகும்.

இவர்கள் பொருத்தமான அறிவு, அனுபவம் மற்றும் அரச ஆட்சி, பொது நிர்வாகம், சமூக சேவை, பத்திரிகைத்துறை, விஞ்ஞான தொழில் நுட்பம் மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளில் நிபுணத்துவமும் கொண்டிருக்கவேண்டும்.

ஆணைக்குழுவானது தன்னகத்தே அதிகளவிலான அதிகாரங்களை கொண்டிருப்பதோடு, பொதுமக்கள் எந்தவொரு தங்கு தடையுமற்று தகவலுக்கான உரிமையை அனுபவிப்பதை உறுதி செய்யவும் பொறுப்புடையதாகும்.

தகவலுக்கான ஆணைக்குழுவின் தொடர்பு விபரங்கள் 
அறை இல: 203-204
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டப வளாகம்
பௌத்தாலோக மாவத்தை
கொழும்பு 7
தொலைபேசி : (+94)  0112691625

மின்னஞ்சல் : rti.commission16@gmail.com



சார்க் அமைப்பு - – SAARC
(தென்ஆசிய நாடுகளிள் பிராந்திய ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு)
(SOUTH ASIAN ASSOCIATION FOR REGIONAL COOPERATION)


  • ஆரம்பம் : December 8, 1985 டாக்கா (பங்களதேஷ்)
  • தலைமையகம் : நேபாளம் - கட்மண்டு
  • அங்கத்துவம் :


  1. இந்தியா
  2. இலங்கை
  3. பாக்கிஸ்hதான்
  4. பங்களாதேஷ்
  5. நேபாளம்
  6. பூட்டான்
  7. மாலைதீவு
  8. ஆப்கானிஸ்தான் (2007 முதல்) இறுதியாக இணைந்தது  


  • சார்க் நாடுகளின் தேசிய கீதத்தை இயற்றியவர் : மேர்சலின் ஜெயக்கொடி (இலங்கை)


2 ம் உலக மகா யுத்தத்தின் பின் உலகமெங்கும் பல பிராந்திய ஒத்துழைப்பு நிறுவனங்கள் தோன்றின.
அவை பல காரணங்கள் கருதி உருவாக்கப் பட்டன. அத்தகைய வகையினுள் சார்க் அமைப்பு உருவானது.
இதை உருவாக்குவதில் முன் நின்றவர் பங்களாதேஷ் முன்னாள் ஜனாதிபதி ஷியாஉர் ரஹ்மான் தொடக்கத்தில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் என இருந்தது.
பின்பு மிக அண்மையில் ஆப்கானிஸ்தான் இணைந்து கொண்டது.
பல இலட்சியங்களையும் கொள்கைகளும் கொண்டு உருவாக்கப்பட்ட சார்க் ஒத்துழைப்புக்கான விடயங்களை
தயாரித்துக் கொண்டு முதலாவதாக டாக்கா நகரில் 1985 கூடியது.
இவ்வமைப்பின் முக்கிய விடயங்களாக கல்வி, கலை, வானிலை, சுகாதாரம், அஞ்சல், விளையாட்டு, போக்குவரத்து, தொலைத் தொடர்பு, போதைத் தடுப்பு என்பன காணப்பட்டது.
கொள்கைகளை அடைந்து கொள்ள சார்க் நான்கு பிரிவுகளை உண்டாக்கியது.
1. நிரந்தரக் குழு 
2. வெளிநாட்டு அமைச்சர்கள் குழு 
3. உச்சிமாநாட்டுக்குழு 
4. தொழில்நுட்பக் குழு
சார்க் அமைப்பை கவனித்துக் கொள்ளவென சில பார்வையாளர் நாடுகளும் உள்ளன. அவையாவன
1. யப்பான் 
2. பர்மா 
3. ஈரான் 
4. சீனா 
5. அமெரிக்கா 
6. மொரிசியஸ் 
7. தென்கொரியா 
8. அவுஸ்திரேலியா 
9. ஐரோப்பிய யூனியன்.
சார்க் அமைப்பானது, கடந்த காலங்களில் பல இடங்களில் கூடியுள்ளது. இது வரை 17 தடவை கூடியுள்ளது.
சார்க் அமைப்பானது உருவாக்கப்பட்டு அதன் நடவடிக்கைகள் சிலவற்றில் வெற்றியும் கண்டுள்ளது.
ஐ.நா. சபை என்பதன் முழுபெயர் என்ன? ஐக்கிய நாடுகள் சபை (United Nations – UN)
ஐ.நா. சபை ஏன் உருவானது? இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் உலக அமைதி , பரஸ்பர பாதுகாப்பு போன்றவற்றை உருவாக்க உலக நாடுகள் தமக்குள் ஏற்படுத்திக்கொண்டது.
அட்லாண்டிக் சார்ட்டரே என்றால் என்ன? உலக அமைதிக்கும், உலக நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்புக்கும் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள்.
அட்லாண்டிக் சார்ட்டரே என்று உருவாக்கப்பட்டது? 14.08.1941
1941-இல் உருவான அட்லாண்டிக் சார்ட்டரில் கையெழுத்திட்டவர்கள் யார், யார்? அப்போதைய அமெரிக்க அதிபர் பிராங்ளின் ரூஸ்வெல்ட் மற்றும் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்.
ஐ.நா. சபையின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது? இலண்டன்
ஐ.நா. சபையின் முதல் கூட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது? 1946
ஐ.நா. சபைக்கு அப்பெயரை வைத்தவர் யார்? பிராங்ளின் ரூஸ்வெல்ட்
ஐ.நா சபை உருவாவதற்கு முன்பு சர்வதேச அளவில் அமைதிக்காகச் செயல்பட்ட அமைப்பு எது? லீக் ஆப் நேஷன்ஸ்
லீக் ஆப் நேஷன்ஸ் உருவான ஆண்டு எது? 1920
ஐ.நா பொதுச்சபைக்கு ஒரு நாடு அதிகபட்சமாக எத்தனை பிரதிநிதிகளை அனுப்பலாம்? 5
ஐ.நா சபை அமைப்பில் இருந்து முதன்முதலாக வெளியேற்றப்பட்ட நாடு எது? யூகோஸ்லோவியா
ஐ.நா சபை எத்தனை உள்ளமைப்புகளைக் கொண்டது? 6
ஐ.நா சபையின் உள்ளமைப்புகள் யாவை? 1. பொதுச்சபை 2. பாதுகாப்புச்சபை 3.பொருளாதார சமூகசபை 4. பொறுப்பாண்மைக்குழு 5. பன்னாட்டு நீதிமன்றம் 6. செயலகம்
ஐ.நா பொதுசபை (General Assembly) எங்குள்ளது? நியூயார்க்
ஐ.நா. பொதுச்சபையில் ஒரு நாட்டுக்கு எத்தனை வாக்குகள் உண்டு? ஒரு வாக்கு மட்டும் தான் (5பிரதிநிதிகள் கலந்துகொள்ளலாம்)
ஐ.நா. பொதுச்சபையில் எதைப் பற்றி விவாதிக்கலாம்? ஐ.நா. சார்ட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளவை பற்றி (பாதுகாப்பு சபை கையாளும் விசயங்கள் தவிர்த்து)
ஐ.நா பொதுச்சபையின் பணிகள் என்ன? ஐ.நா.பட்ஜெட்டை கையாளுவது, பாதுகாப்பு சபையின் சிபாரிசின் அடிப்படையில் புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது, சமூகப் பொருளாதாரச் சபைக்கான தற்காலிக உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாண்மைக் குழுவுக்கான நிரந்தர உறுப்பினர்களைத் தேர்வு செய்வது போன்றவை.
ஐ.நா பொதுச்சபை வருடத்திற்கு எத்தனை முறை கூடுகிறது? 2 முறை
ஐ.நா சபையின் மகாநாடு எப்போது நடைபெறும்? ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது செவ்வாய்கிழமை
ஐ.நா சபையின் பொதுச்சபையின் செயலரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டுகள்? 5 ஆண்டுகள்
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தலைமையகம் எங்குள்ளது? நியூயார்க்
சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளை யார் தேர்ந்தெடுப்பது? ஐ.நா. பாதுகாப்புசபை (Security Council)
சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை கண்காணிப்பது யார்? ஐ.நா. பாதுகாப்புசபை
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் எத்தனை நிரந்தர உறுப்பு நாடுகள் உள்ளன? 5 நாடுகள்
ஐ.நா. பாதுகாப்புச் சபையில் உள்ள நிரந்தர உறுப்பு நாடுகள் எவை? சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் தற்காலிக உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பது யார்? ஐ.நா. பொதுச்சபை
ஐ.நா. பாதுகாப்புச்சபையில் தற்காலிக உறுப்பினராக, இந்தியா எந்தெந்த ஆண்டுகளில் இருந்தது? 1951-1952, 1967-1968, 1977-1978, 1991-1992
ஐ.நா. பாதுகாப்புச்சபையில் நிரந்தர உறுப்பினர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று எந்த முக்கிய நாடுகள் கோரி வருகிறது? இந்தியா, ஜெர்மனி, ஜப்பான் இன்னும் பிற நாடுகள்.
ஐ.நா. பொருளாதார (Economic & Social Council) தலைமையகம் எங்குள்ளது? நியூயார்க்
ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்களின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 3 ஆண்டுகள்
ஐ.நா. பாதுகாப்புச்சபையின் தற்காலிக உறுப்பினரின் பதவிக்காலம் எவ்வளவு ஆண்டு? 1 ஆண்டு
ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்? பொதுச்சபையால். (மூன்றில் இரண்டு பங்கு வாக்கு பெரும்பான்மையில்)
ஐ.நா. பொருளாதார சமூகச்சபை எத்தனை பிரதிநிதிகளை கொண்டது? 54 உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள்
ஐ.நா. பொருளாதார சமூகச்சபையின் பணிகள் என்ன? பன்னாட்டு பொருளாதாரம், சமூகம், கலாச்சாரம், கல்வி, சுகாதாரம்.
ஐ.நா. பொறுப்பாண்மைக் குழுவின் (Trusteeship Council) தலைமையகம் எங்குள்ளது? நியூயார்க்
ஐ.நா.பொறுப்பாண்மைக்குழுவின் உறுப்பினர்கள் யார்? சீனா, பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
ஐ.நா.பொறுப்பாண்மைக்குழு எதற்கு அமைக்கப்பட்டது? சுயஆட்சி அதிகாரம் பெறாத நாடுகளின் நலனைப் பாதுகாக்க அமைக்கப்பட்டது.
ஐ.நா.பொறுப்பாண்மைக் குழுவின் தலைமைப் பதவி எந்த நாட்டிடம் உள்ளது? ஒவ்வொரு நாடும் ஒரு வருடம் மட்டும் என்ற சுழற்சி முறையில் (5 நாடுகள் மட்டும்)
ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றம் எங்குள்ளது? International Court of Justice திஹேக், நெதர்லாந்து
ஐ.நா.சபையின் சர்வதேச நீதிமன்றத்திற்கு எந்தெந்த நாடுகள் கட்டுப்பட்டவை? ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகள் அனைத்தும்.
ஐ.நா சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் எத்தனை நீதிபதிகள் பணிபுரிகின்றனர்? 15
ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்ற நீதிபதிகளின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 9 வருடங்கள்
ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்திற்கு ஒரு நாட்டிலிருந்து அதிகபட்சம் எத்தனை நீதிபதிகளை தேர்வு செய்யலாம்? ஒன்று
ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தின் அலுவல் மொழி எது? ஆங்கிலம், பிரெஞ்சு
ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய (2015) தலைவர் யார்? பீட்டர் தோம்கா (ஸ்லோவாகியா)
ஐ.நா சபையின் செயலகம் முதன்முதலில் எங்கிருந்தது? லண்டனில் இருந்தது.
ஐ.நா சபையின் செயலகம் தற்போது எங்குள்ளது? நியூயார்க்
ஐ.நாவின் முக்கிய அமைப்பு எது? ஐ.நா. செயலகம் (Secreteriate)
ஐ.நாவின் பொதுச்செயலாளரை எவ்வாறு தேர்ந்தெடுப்பர்? ஐ.நா.பாதுகாப்பு சபையின் சிபாரிசுப்படி பொதுச்சபை நியமிக்கும்
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளரின் பதவிக்காலம் எத்தனை ஆண்டுகள்? 5 ஆண்டுகள் 52 ஐ.நா சபையின் பொதுச்செயலாளராக பதவிபுரிந்தவர் மீண்டும் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்க சட்டத்தில் இடம் உண்டா ? உண்டு
ஐ.நா சபையின் தற்போதைய (2015) பொதுச்செயலாளர் யார்? பான் கீ மூன் (தென்கொரியா)
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக கானா நாட்டை சார்ந்த யார் பணிபுரிந்தவர்? கோஃபி அன்னான் (1997)
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக எகிப்து நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? பொட்ரோஸ் காலி (1992)
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பெரு நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? ஜாவியர் பெரிஸ் டி குவையர் (1982)
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக ஆஸ்திரியா நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? குர்ட் வான்ஹைம் (1972)
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக பர்மா நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? ஊதாண்ட் (1961)
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக சுவீடன் நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? டாக் .ஹாமர் ஸ்கால்டு (1953)
ஐ.நா. சபையின் பொதுச்செயலாளராக நார்வே நாட்டைச் சார்ந்த யார் பணிபுரிந்தார்? டிரைக்வே-லை (1946)
ஐ.நா. சபையின் அலுவல் மொழிகள் எவை? ஆங்கிலம், பிரெஞ்சு, சீனம், ரஷ்யா, ஸ்பானிஷ், அரபி.
ஐ.நா. சபை எப்போது உருவாக்கப்பட்டது? 24.10.1945
ஐ.நா. சபையின் மொத்த உறுப்பு நாடுகள் எத்தனை? 193 நாடுகள்
ஐ.நா. சபையில் இந்தியா உறுப்பினராக சேர்ந்தது எப்போது? 30.10.1945
ஐ.நா. சபையில் 193-வது உறுப்பினராக சேர்ந்த நாடு எது? தெற்கு சூடான் (2011)
ஐ.நா. சபையின் வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகள் எவை? சீனா,பிரான்ஸ், ரஷ்யா, பிரிட்டன், அமெரிக்கா.
ஐ.நா. சபையின் வீட்டோவின் அதிகாரம் என்ன? ஐ.நா.சபையில் உறுப்பினராக உள்ள அனைத்து உறுப்பினர்களும் ஒரு தீர்மானத்தை அங்கீகரித்தாலும் வீட்டோ அதிகாரம் படைத்த ஏதாவது ஒரு நாடு ‘வீட்டோ” செய்தால் அந்த தீர்மானம் தள்ளுபடி செய்யப்படும்.
ஐ.நா தினத்தை என்று கொண்டாடுகிறோம்? அக்டோபர் 24
ஐ.நாவின் சின்னம் எது? இளம் நீலத்தின் நடுவே அமைந்த வெள்ளை வட்டம்
ஐ.நாவின் கொடி எது? இளம் நீல பின்புலத்தில் வெண்மை நிற ஐ.நா.சின்னத்தில் வடதுருவத்திலிருந்து உயர்ந்து நிற்கும் உலக வரைபடத்தை இரு ஆலிவ் மரக்கிளைகள் சுற்றி நிற்பதாக அமைந்துள்ளது.
ஐ.நாவின் சின்னம் எதை குறிப்பிடுகிறது? உலக அமைதி
ஐ.நா. சபையின் முகவரி எது? First Avenue, UN Plaza, New York City, USA, Website www.UN.org
ஸட்டன் பிளேஸ் என்பது யாருடைய மாளிகை? ஐ.நா. பொதுச்செயலரின் மாளிகை
ஐ.நா. பொதுச்செயலரின் மாளிகையான ஸட்டன் பிளேஸ் எங்குள்ளது? மன்ஹாட்டன் நகரம் (அமெரிக்கா)
ஸட்டன் பிளேஸ் மாளிகை யார் யாருக்கு அளித்தது? 18 ஏக்கர்
ஐ.நா சபை அமைந்துள்ள 18 ஏக்கர் நிலம் யார் பரிசாக அளித்தது? ஜான் டி. ரோக்
ஐ.நா. தலைமையகம் அமைந்துள்ள 18 ஏக்கர் நிலப்பகுதி எத்தகைய நிலப்பகுதியாக கருதப்படுகிறது? சர்வதேச நிலப்பகுதியாக (International Territory)
ஐ.நாவின் பொதுச்செயலாளராக இருந்த பின்னர் தனது நாட்டின் அதிபரானவர் யார்? குர்ட் வான்ஹைம் (ஆஸ்திரியா)
விளையாட்டு கூட்டமைப்புகள் தவிர்த்து உலக நாடுகள் உறுப்பினராக உள்ள முதல் மற்றும் இரண்டாவது அமைப்பு எது? முதல் அமைப்பு ஐ.நா.சபை (193 உறுப்பினர்கள்) இரண்டாவது அமைப்பு இன்டர்போல் (190 உறுப்பினர்கள்)
ஐ.நா.சார்ட்டரில் இந்தியாவிற்காக கையொப்பமிட்டவர் யார்? சர்.இராமசாமி முதலியார்
உலக சுகாதார அமைப்பின் தலைவரான ஒரே இந்தியப் பெண்மணி யார்? ராஜ்குமாரி அம்ருத்கௌர்
ஐ.நா. சபையில் தொடர்ச்சியாக எட்டு மணி நேரம் உரையாற்றிய இந்தியர் யார்? வி.கே.கிருஷ்ண மேனன் (1957)
ஐ.நா. மனித உரிமைக் கழகத்தின் துணை இயக்குனராக பதவி வகித்த இந்தியர் யார்? ஜஸ்டிஸ் பி.என்.பகவதி
ஐ.நா. அண்டர் செகரெட்டரியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியர் யார்? சசி தரூர்
இண்டர் பார்லிமெண்டரி யூனியனின் ஆயுட்கால தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பெண்மணி யார்? நஜ்மா ஹெப்துல்லா
ஐ.நா. சபையில் முதன்முதலில் இந்தியில் உரையாற்றியவர் யார்? ஏ.பி.வாஜ்பாய்
ஐ.நா சபையில் பாட அனுமதி பெற்ற முதல் பாடகி யார்? எம்.எஸ்.சுப்புலெட்சுமி (1966)
உலக வங்கியின் இவாலுவேஷன் டைரக்டர் ஜெனரலாக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்? வினோத் தாமஸ்
உலக சுகாதாரக் கழகத்தின் ஆடிட்டராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்? விஜயேந்திரா என்.கவுர்
சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய இந்திய நீதிபதி யார்? ஜஸ்டிஸ் தல்வீர் பண்டாரி
ஐ.நாவில் இந்தியாவின் தற்போதைய நிரந்தர உறுப்பினர் யார்? அசோக்குமார் முகர்ஜி
ஐ.நாவின் 190வது உறுப்பினர் நாடு எது? சுவிட்சர்லாந்து (2002)
ஐ.நாவின் 191வது உறுப்பினர் நாடு எது? கிழக்கு டிமெர் (2002)
ஐ.நாவின் 192வது உறுப்பினர் நாடு எது? மோன்டனெக்ரா (2006)
2015 நிலவரப்படி ஐ.நாவில் உறுப்பினராக சேர்ந்த கடைசி நாடு எது? தெற்கு சூடான் (193வது நாடாக 2011ல் சேர்ந்தது)
ஐ.நா சபையில் உறுப்பினராக இல்லாத நாடுகள் எவை? கொசாவா, சஹ்ராவி அரபுக்குடியரசு, துருக்கிய சைப்ரஸ், தைவான், பாலஸ்தீன அதாரிட்டி, வாடிகன் நகரம்.
ஐ.நா. சபை 2015ம் ஆண்டை எவ்வாறு அறிவித்துள்ளது? சர்வதேச ஒளிவருடம் (Year of Light) சர்வதேச மண்வருடம் (Year of Soil)
ஐ.நா.சபை 2014-ம் ஆண்டை எவ்வாறு அறிவித்தது? சர்வதேச குடும்ப விவசாய வருடம்.
ஐக்கிய நாடுகள் தினம் அக்டோபர் 24
ஜனவரி 2: வடக்கே தொடருந்து சேவை காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டது.
ஜனவரி 8: ஜனாதிபதித் தேர்தலில்  2015: சராசரியாக 70 வீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் திணைக்களம் அறிவித்தது. ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்சவை வீழ்த்தி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பிரமராகி இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
ஜனவரி 9: ஜனாதிபதித் தேர்தலில் 2015: வட, கிழக்கு, மற்றும் மலையக மக்களால் அளிக்கப்பட்ட வாக்குகளிலேயே தான் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச அறிவித்தார்.
ஜனவரி 11: ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராசபக்ச ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சி செய்தார் எனக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை இலங்கையின் புதிய அரசு விசாரணை செய்யும் என அறிவிக்கப்பட்டது.
ஜனவரி 14: ஊவா மாகாணசபையை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றியது. ஹரின் பெர்னாண்டோ முதலமைச்சரானார்.
ஜனவரி 21: முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு அரசியலமைப்பின் 34வது பிரிவுக்கு அமைய  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனபொது மன்னிப்பு வழங்கினார். வாக்குரிமையுடன் இழந்த நான்கு நட்சத்திர ஜெனரல், பதக்கங்கள், ஓய்வூதியம் மற்றும் இதர சலுகைகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.
ஜனவரி 28: இலங்கையின் தலைமை நீதிபதி மொகான் பீரிசை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்து அகற்றி, சிராணி பண்டார நாயக்கவை மீண்டும் தலைமை நீதிபதியாக நியமித்தார்.
பெப்ரவரி 1: வடக்கில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு, கரைத்துறைப்பற்று உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பெப்ரவரி 28ம் திகதி நடைபெறவிருந்த நிலையில் குறித்த தேர்தலில் போட்டியிடுவதற்காக 6 அரசியல் கட்சிகள் வேட்புமனு தாக்கல் செய்தன.
பெப்ரவரி 2: ஐக்கிய அமெரிக்காவின் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்திய விவகாரங்களுக்கான உதவி செயலாளர் நிஷா பிஸ்வால் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கை வந்தார்.
இலங்கையின் முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
பெப்ரவரி 7: சட்டம் ஒழுங்குக்குப் பொறுப்பான புதிய அமைச்சர் ஜோன் அமரதுங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று எதிர்க்கட்சிகளினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
பெப்ரவரி 6: கிழக்கு மாகாண முதலமைச்சராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக் கட்சியின் நசீர் அகமது பதவியேற்றார்.
பெப்ரவரி 5: ஓமந்தை சோதனைச் சாவடியின் சோதனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன.
பெப்ரவரி 10: இலங்கையில் நடைபெற்றது இனஅழிப்பே என்ற தீர்மானம் வடமாகாண முதலமைச்சர் விக்னேசுவரனால் வட மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்டு, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
கொழும்பில் நெலும் பொக்குன (தாமரைத் தடாக) வீதி மீண்டும் ஆனந்த குமாரசுவாமி மாவத்தை எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
பெப்ரவரி 15: இலங்கையின் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது வெளிநாட்டுப் பயணமாக இந்தியா சென்றார்.
மார்ச் 3: விடுதலைப் புலிகளின் கடற்புலி மகளிர் பிரிவுத் தலைவியாக பணியாற்றிய முருகேசு பகீரதி என்பவரும், அவரது 8 வயது மகளும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
கிழக்கு மாகாண சபையில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து ஆட்சியமைத்தது.
மார்ச் 10:  விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் மீளமைக்க முயற்சி செய்த கோபி என்பவருக்கு ஆதரவு அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படாமல் 362 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் பாலேந்திரன் ஜெயகுமாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்காக சட்டமா அதிபர் குழுவொன்றை நியமித்துள்ளார்.
மார்ச் 14 : இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மன்னாருக்குப் பயணம் மேற்கொண்டு தலைமன்னார் வரையான தொடருந்து சேவையை ஆரம்பித்து வைத்தார்.
நரேந்திர மோதி யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண கலாசார நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார். மடமாகாண முதல்வர் க. வி. விக்னேசுவரனை சந்தித்து உரையாடினார். யாழ்ப்பாணம் வந்த முதலாவது இந்தியப் பிரதமர் என்ற பெருமையையும் மோதி பெற்றார்.
மார்ச் 22:  சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 26 பேர் தேசிய அரசாங்கத்தில் இணைந்து அனைவரும் அமைச்சுப் பதவிகளையும்
மார்ச் 23:  பலாலி பிரதேசத்தில் உள்ள வளலாய் பகுதியில் அதியுயர் பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட சில காணிகளை உரிமையாளர்களுக்கு கையளிக்கும் வைபவம் ஜனாதிபதி மைத்திரி தலைமையில் இடம்பெற்றது
மார்ச் 31: 2006 இல் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பாக கடற்படை அதிகாரி ஒருவரும், முன்னாள் கடற்படையினர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
ஏப்ரல் 22: இலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டார். இவருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிகால் ஜயதிலக, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ. ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்
ஏப்ரல் 29: ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் முக்கியமான 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் 215 வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
மே 13: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்சவை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
மே 20: வடக்கே புங்குடுதீவு மாணவியின் படுகொலையைக் கண்டித்து யாழ்ப்பாணம் எங்கும் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டன.
சூலை 1: இலங்கை பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராசபக்ச தாம் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.
ஆகத்து 17 – இலங்கை பாராளுமன்றத்  தேர்தல், 2015: ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி 106 இடங்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 95 இடங்களையும் கைப்பற்றின. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 16 இடங்களை வென்றது
செப்டம்பர் 25:  மலையகத்தில் இறம்பொடையில் ஏற்பட்ட மண்சரிவில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்தனர்.
அக்டோபர் 14: 2005 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் நவம்பர் 4 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.
நவம்பர் 11: நீண்டகாலமாக சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் கொழும்பு நீதிமன்றம் ஒன்று பிணையில் விடுவித்தது.
நவம்பர் 14: நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தம்மை விடுவிக்கக் கோரி ஏழாவது நாளாகத் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தை முன்னேடுத்து வருகின்றனர்.
நவம்பர் 26: சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர் செந்தூரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டிசம்பர் 20: இலங்கையின் வடக்கே முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் தலைமையில் “தமிழ் மக்கள் பேரவை” என்ற அரசியல் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.