அகரம்: ALL
Showing posts with label ALL. Show all posts
Showing posts with label ALL. Show all posts
கணக்கீடு என்பதை “ஒரு தகவல் முறைமை” எனக்கூறலாம். ஏனெனில் அதனைப் பயன்படுத்தி “வணிக அலகில்” அக்கறையுள்ள கட்சியினர் தமக்கேற்ற பொருளாதார தீர்மானங்களை மேற்கொள்கின்றனர். கணக்கீட்டில் “வணிக அலகு” எனக்குறிப்பிடப்படுகின்ற விடயம் இலாபநோக்குடன் செயற்படும் வியாபார நிறுவனங்களை மட்டும் குறிப்பிடப்படவில்லை.
அது இலாபநோக்குள்ள மற்றும் இலாபநோக்கற்ற நிறுவனங்களை மட்டுமன்றி பரந்தகருத்தில் பிரயோகிக்கப்படுகிறது. தனிவியாபாரம், பங்குடைமை வணிகம், வரையறுக்கப்பட்ட கம்பனிகள், இலாப நோக்கற்ற நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், உள்ளுராட்சி அமைப்புக்கள், சமூக நிறுவனங்கள், போன்ற எந்தவொரு பொருளாதார அலகும் ஒரு கணக்கீட்டு அலகாக இருக்கமுடியும். அவை யாவற்றுக்கும் கணக்கீட்டுத் தகவல்கள் தேவைப்படுகின்றன. ஏனெனில் எந்தவொரு பொருளாதார அலகும் தன்மீது அக்கறையுள்ள கட்சியினர்களுக்கு அதன் செயற்பாடுகள், முன்னேற்றம், நிதிநிலைமை பற்றிய தகவல்களை வழங்க வேண்டியுள்ளது. இத்தகைய தகவல் வழங்கும் செயற்பாட்டிற்காக கணக்கீட்டினை ஒரு கருவியாக அவை பயன்படுத்துகின்றன.

வணிக அலகு
கணக்கீட்டில், வணிக அலகு என்பது அதன் உரிமையாளரிலிருந்து வேறான தனிப்பட்ட அலகாக கருதுதல் வேண்டும். இதனை அலகுசார் கணக்கீட்டு எண்ணக்கரு (தொழில் முழுமைக்கூறு எண்ணக்கரு) வலிறுத்துகின்றது. வரையறுக்கப்பட்ட கம்பனிகள் ‘சட்டஆளுமை’ உடையன எனவே அவற்றை அதன் உரிமையாளராகிய பங்குதாரரிலிருந்து வேறான தனிப்பட்ட ஒரு அலகாக சட்டம் கருதுகின்றது. ஆனால் தனிவியாபாரமோ, பங்குடமை நிறுவனங்களோ சட்டப்படி ஒரு தனிஅலகாகக் கருதப்படுவதில்லை. இருந்தபோதிலும் கணக்கீட்டில் அவைகூட உரிமையாளரிலிருந்து வேறுபட்ட தனியான அலகுகளாகக் கருதப்படல் வேண்டுமென்பதே இதன் பொருளாகும். இந்த எண்ணக்கருவின்படி உரிமையாளரின் சொந்தச் சொத்துக்கள் வணிக நிறுவனத்தின் சொத்துக்கள் என வேறுபடுத்திப் பார்க்கமுடியும். “வணிக அலகு” என்ற சொல்லை வைத்துக்கொண்டு அது உற்பத்தி மற்றும் வியாபாரம் செய்யும் நிறுவனங்களைக் குறிக்கிறது என்று கருதவேண்டியதில்லை. கணக்கீட்டில் உரிமையாளரில் இருந்து வேறுபடுத்தக்கூடிய எந்தப் பொருளாதார அலகும் வணிகஅலகாகும். அவற்றுக்கென கணக்கேடுகளையும் கணக்குகளையும் பராமரிப்பது நடைமுறைச் சாத்தியமான விடயமாகும்.
தகவல்களின் தேவை
அறிவை மேம்படுத்தல், தீர்மானமெடுத்தல் என்பவற்றுக்கு பயனுடைய எந்தவொரு விடயமும் தகவல் எனப்படும். பொதுவாக தரவுகளை நிரற்படுத்தி தகவல்கள் பெறப்படுகின்றன. கணக்கீட்டுச் செயல்முறை மூலம் தரவுகளைப் பகுப்பாய்வு செய்து பெற்றுக்கொள்ளும் பெறுபேறு கணக்கீட்டுத் தகவல் எனப்படும். இந்த வகையில் நிறுவனமொன்றில் நாளாந்தம் இடம்பெறும் கொடுக்கல் வாங்கல்களை கணக்குப் புத்தகங்களில் பதிவுசெய்து, வகைப்படுத்தி, பொழிப்பாக்கி, பகுப்பாய்வுசெய்து, அதுபற்றிய வியாக்கியானங்களுடன் தொடர்பாடக்கூடிய முறையில் பெற்றுக்கொள்ளும் பெறுபேறு கணக்கீட்டுத் தகவலாகின்றது. இவ்வாறு பெற்றுக்கொள்ளும் கணக்கீட்டுத் தகவல்கள் குறித்த வணிக அலகின் மீது அக்கறையுள்ள கட்சியினர்களுக்கு தமக்கேற்ற பொருளாதார தீர்மானங்களை மேற்கொள்ள உதவுகின்றன. முகாமையாளர்கள் தமது முகாமையின் செயற்றிறனை மதிப்பிட்டு முகாமைத் தீர்மானங்களை மேற்கொள்வதும், உரிமையாளர்கள் தமது முதலீட்டிற்கான பிரதிபலன் பற்றி அறிந்து முதலீடு தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதும் இந்த அடிப்படையிலேயே நிகழ்கின்றன.

தகவல் முறையாகக் கணக்கீடு
தகவல்களை அளவுரீதியான தகவல்கள், அளவுரீதியற்ற தகவல்கள் என பாகுபடுத்த முடியும். குறித்த வணிக அலகு தொடர்பாக கணியங்களுடன் வெளியிடக்கூடிய தகவல்கள் அளவுரீதியான தகவல்கள் எனவும், எண்ணிக்கையில் காட்டமுடியாத விபரிக்கமட்டுமே முடியுமான தகவல்கள் அளவுரீதியற்ற தகவல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. அளவுரீதியான தகவல்களை நிதிசார் தகவல்கள், நிதிசாராத் தகவல்கள் என வகைப்படுத்தமுடியும். பண அலகினால் விபரிக்கக்கூடிய தகவல்கள் நிதிசார் தகவல்களாகும். பணஅலகுகொண்டு விபரிக்கமுடியாதவை நிதிசாராத் தகவல்களாகின்றன. அனைத்து நிதிசார் தகவல்களும் கணக்கீட்டுத் தகவல்கள் ஆகமாட்டாது. நிதிசார் தரவுகள் கணக்கீட்டுச் செயன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு தகவல்களாக பெறப்படும்போது அவை கணக்கீட்டுத் தகவலாகின்றன.
கணக்கீட்டுத் தகவல்களின் தன்மை, அத்தகவல்கள் யாருக்குத் தேவை என்பனவற்றைப் பொறுத்து கணக்கீடானது நிதிக் கணக்கீடு, கிரயக் கணக்கீடு மற்றும் முகாமைக் கணக்கீடு என மூன்றாக வகைப்படுத்தப்படுகின்றது. நிதிக்கணக்கீடு வரலாற்றுத் தகவல்களை வழங்குவதோடு, அத்தகவல்கள் வணிக அலகொன்றின் தகவல்களின்;மீது அக்கறையுள்ள உள்வாரிக் கட்சியினருக்கும் வெளிவாரிக் கட்சியினருக்கும் வழங்கப்படுகின்றது. ஆனால் கிரயக் கணக்கீடும் முகாமைக் கணக்கீடும் வரலாற்றுத் தகவல்களுடன் எதிர்காலத்திற்கான மதிப்பீட்டுத் தகவல்களையும் வழங்குகின்றன. அத்துடன் அவை உள்வாரிக் கட்சியினருக்கு மட்டுமே தகவல் வழங்குகின்றன. நிதிக் கணக்கீட்டுத் தகவல்கள் மாற்றமடையாத நிலையான தகவல்களாக காணப்படுவதோடு, பொது நோக்கத்தைக் கொண்டதாக பெரும்பாலும் ஒரு வருடத்திற்குரியதாக தயாரிக்கப்படுகின்றன. ஆனால் கிரயக் கணக்கீட்டு, முகாமைக் கணக்கீட்டுத் தகவல்கள் மாற்றமடையக்கூடிய தகவல்களாக இருப்பதோடு, ஒவ்வொரு உற்பத்திப் பொருளுக்கும், திணைக்களத்திற்குமென விசேட நோக்கம் கொண்டவையாகவும், தேவைக்கேற்ப விரும்பிய காலத்திற்குரியதாகவும் தயாரிக்கப்படுகின்றன. இவ்வாறாக கணக்கீடு, ஒரு தகவல் தொகுதியாக செயற்பட்டு தீர்மானம் மேற்கொள்ள உதவுவதை அவதானிக்கலாம்.

கணக்கீடு என்பதற்கான வரைவிலக்கணங்கள்
ஐக்கிய அமெரிக்கக் கணக்கீட்டுச் சங்கம் வழங்கியுள்ள வரைவிலக்கணப்படி “பல்வேறு பொருளியல்சார்ந்த தகவல்களை, பயன்படுத்துபவர்கள் பொருளாதாரத் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக ஏற்றவிதத்தில் அவற்றை இனங்கண்டு, அளவிட்டு தொடர்பாடும் கருமம் கணக்கீடாகும்”.
ஐக்கிய அமெரிக்கப் பொதுத்தராதரம் பெற்ற கணக்காளர் நிறுவனம் வழங்கியுள்ள வரைவிலக்கணப்படி “ஆகக்குறைந்தது பகுதியளவுக்கேனும் நிதித்தன்மை வாய்ந்த கொடுக்கல் வாங்கல்களினதும், நிகழ்வுகளினதும் பணப்பெறுமானங்களை இனங்கண்டு அவற்றைப் பதிவுசெய்தல், வகைப்படுத்தல், பொழிப்பாக்குதல், பகுத்தாராய்தல், ஆகிய செயற்பாட்டுத் தொடர்கள்முலம் கிடைக்கக்கூடிய நிதிப் பெறுபேறுகளை வியாக்கியானம் செய்யும் கலை கணக்கீடாகும்”.
இவ்வாறு “கணக்கீடு ஒரு தொடர்பாடல்முறை” என்றவகையில் செயற்படுவதால் அது ஒரு வணிகங்களின் மொழி என பரவலாக அழைக்கப்படுகின்றது.
கணக்கீட்டுச் சூழல்காரணி
கணக்கீட்டுச் செயற்பாட்டில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகள் கணக்கீட்டுச் சூழல் எனப்படும். அவையாவன
சட்டச் சூழல்
தொழில்சார் மற்றும் நிபுணத்துவச் சூழல்
தொழில்நுட்பச் சூழல்
அரசியல் பொருளாதாரச் சூழல்
சமூக, கலாச்சாரச் சூழல்
சட்டச்சூழல்
கணக்கீடு பற்றிய சட்டங்கள் சார்ந்த சகல விடயங்களும் சட்டச்சூழலில் உள்ளடக்கப்படுகின்றன. கம்பனிச் சட்டம், வரிச்சட்டங்கள், பங்குடைமைச் சட்டம் என்பன கணக்குவைத்தல், அவற்றைத் தொடர்பாடுதலில் நேரடிச் செல்வாக்குச் செலுத்துகின்றன. விசேடமாக 1995ஆம் ஆண்டு 15ஆம் இலக்க இலங்கைக் கணக்கீட்டு கணக்காய்வு நியமச் சட்டத்தின்படி கணக்கீட்டு நியமத்திற்கு அமைவாக தகவல்களை வழங்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புக்களும் கணக்கீட்டுச் செயற்பாட்டில் செல்வாக்குச் செலுத்துகின்ற சட்டச்சூழலாகின்றது. பங்குடமை தொடர்பான கணக்குகளில் “காணர் எதிர் மறே தீர்ப்பு”, என்பதை இதற்கு உதாரணமாக கொள்ளலாம்.
தொழில்சார் மற்றும் நிபுணத்துவச் சூழல்
கணக்கீட்டுச் செயற்பாட்டில் வளங்களை அளவுரீதியாகவும் நிதிவடிவிலும் அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படுகின்ற பல்வேறு முறைகள் இச்சூழலுக்குள் உள்ளடக்கப்படுகின்றன. பெறுமானத் தேய்வுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற “நேர்கோட்டுமுறை”, “ஒடுங்;குமீதிமுறை” என்பனவும் இருப்புக் கணிப்பீட்டுக்காகவும், வழங்கு பொருள் விலையிடலுக்காகவும் பயன்படுத்தப்படுகின்ற “முதல் உள் முதல் வெளி முறை”, “இறுதி உள் முதல் வெளிமுறை”;, என்பனவும் களஞ்சியங்களில் உள்ள இருப்புக்களின் பௌதீக அளவுகளைக் அளவிட பயன்படுத்தப்படும் நவீன விஞ்ஞான முறைகள் யாவும் இதற்கு உதாரணமாகக் கூறலாம். கணக்கீட்டுச் செயற்பாட்டின்போது பல்வேறு தொழில்சார் கணக்காளர் நிறுவனங்களால் வழங்கப்படுகின்ற சிபார்சுகளும் இச்சூழலாகக் கொள்ளப்படும் இதன்படி இலங்கைப் பட்டயக் கணக்கறிஞர் நிறுவனத்தினால் வெளியிடப்படும் கணக்கீட்டு நியமங்கள் அவற்றுக்கான திருத்தங்கள் என்பனவும் இச்சூழல் காரணியாக கொள்ளப்படலாம்.
தொழில்நுட்பச் சூழல்
கணக்கீட்டுக்காக பயன்படுத்தப்படுகின்ற கருவிகள், மனித உழைப்பு என்பன இச்சூழலாக கொள்ளப்படுகின்றன. கணனித் தொழில்நுட்பம், ஏனைய கணிப்பொறிகள் அவற்றில் அறிமுகப்படுத்தப்படும் மாற்றங்கள் என்பவற்றை இச்சூழலாக கொள்ளலாம். இந்த அடிப்படையில் மரபு முறையாக கணக்குப் பதிவுக்காகப் பயன்படுத்தப்பட்ட முறைகள், நவீன முறைகள் என இச்சூழல் நோக்கப்படலாம்.
அரசியல் பொருளாதாரச் சூழல்
நாட்டின் பொருளாதார அமைப்பில் ஏற்படும் மாற்றம், பொருளாதாரக் கொள்கையில் ஏற்படும் மாற்றம், அரசமைப்பில் ஏற்படும் மாற்றம் என்பன இச்சூழலாக கொள்ளப்படுகின்றன. தனியார்துறை, பொதுத்துறை கட்டமைப்புக்களின் மாற்றம். திறந்த பொருளாதாரக் கொள்கை. தாராள பொருளாதாரக் கொள்கை போன்ற விடயங்கள் இச்சூழலுக்கான மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகளுக்கு உதாரணங்களாக கூறக்கூடியன.
சமூக கலாச்சாரச்சூழல்
சனத்தொகையிலும் சனத்தொகைக் கட்டமைப்பிலும் ஏற்படும் மாற்றம். பொதுமக்களின் மனப்பாங்குகளில் வாழ்க்கைப் போக்கில் ஏற்படும் மாற்றம் என்பவற்றை இச்சூழலாக கொள்ளலாம்.

கணக்கீட்டின் நோக்கங்கள்
கணக்கீட்டின் பிரதான நோக்கம் வணிக அலகொன்றில் அக்கறையுள்ள உள்வாரி வெளிவாரிக் கட்சியினர்களுக்கு பொருளாதார தீர்மானங்களை மேற்கொள்வதற்கான தகவல்களை வழங்குதல் என்று கூறப்பட்டாலும், அது பின்வரும் நோக்கங்களையும் நிறைவேற்றுவதற்காக தகவலளிக்கின்றது.
பொருளாதார வளங்களைச் சிறப்பாக கையாளவும், கட்டுப்படுத்தவும்
வளப்பயன்பாடு பற்றிய தீர்மானங்களை மேற்கொள்ள
வணிக அலகின் செயற்பாட்டுப் பெறுபேறுகளை மதிப்பிட
சட்டத் தேவைகளைப் பூர்த்திசெய்ய
சமூக நிகழ்வாக கணக்கீட்டின் முக்கியத்துவம்
கணக்கீடு வழங்கும் தகவல்கள்மூலம் முதலீட்டாளர்களுக்கு ஏற்படக்கூடிய முதலீட்டுக்கான நிச்சயமற்ற தன்மைகளை வெகுவாக குறைத்துக் கொள்ளமுடிகிறது. அதேவேளை வணிக நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளவர்கள் அந்த நிறுவனங்கள் தொடர்பான தகவல்களைப் பெற்றுத் திருப்திப்படும்போது தமது முதலீடுகளை அந்த நிறுவனங்களில் மேலும் மேலும் முதலீடு செய்யத் து}ண்டப்படுகின்றனர். அதனால் குறித்த வணிக நிறுவனங்களுக்கு தேவைப்படக்கூடிய மேலதிக மூலதனம் கிடைத்து, புதிய புதிய கைத்தொழில்கள் உருவாகி வேலைவாய்ப்பும் தேசிய உற்பத்தியும் அதிகரிப்பதனு}டாக சமூகப் பொருளாதார அபிவிருத்தி ஏற்படுவதற்கு கணக்கீட்டுத் தகவல்கள் வழிகோலுகின்றன. இந்தவகையில் கணக்கீடானது முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் ஒரு சமூக நிகழ்வாக முக்கியத்துவம் பெறுகிறது.

கணக்கீட்டுத் தகவல்களைப் பயன்படுத்துவோர்
கணக்கீட்டுத் தகவல்களைப் பயன்படுத்துவோரை உள்வாரி வெளிவாரிக் கட்சியினர் என இருவகையாக பாகுபடுத்தலாம்.
உள்வாரிக் கட்சியினர்
முகாமை
வெளிவாரிக் கட்சியினர்

உரிமையாளரும் எதிர்கால முதலீட்டாளரும்
கடன்கொடுத்தோர்
தொழிற்சங்கங்கள்
அரச நிறுவனங்கள்
போட்டி வணிகங்கள்
உயர்தொழில் வல்லுனர்கள்
ஆய்வாளர்கள்
ஊடகவியலாளர்
வாடிக்கையாளர்
பொதுமக்கள்
கணக்கீடு, உள்வாரிக் கட்சியினருக்கு விரிவான தகவல்களைத் தருகின்ற அதேவேளை வெளியாட்களுக்கு சட்டத்தினால் கூறப்பட்ட ஆகக்குறைந்த தகவல்களையே தரும். இந்தவகையில் விரிவான தகவல்களைப் பெறுகின்ற வல்லமையும், உரிமையும் முகாமைக்கு மட்டுமே உண்டு என்பதால் முகாமை மட்டுமே உள்வாரிக் கட்சியினராகப் பாகுபடுத்தப்படல் வேண்டும்.
கணக்கீட்டுத் தகவல்களைப் பயன்படுத்துவோரின் தகவல் தேவைகள்
முகாமைக்கு
நாளாந்த நிர்வாக நடவடிக்கை பற்றித் தீர்மானம் எடுப்பதற்கும்
எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடவும்
புதிய முதலீடுகளுக்கான வாய்ப்புக்களை வகுப்பதற்கும்
வெற்றியையும், செயல் திறனையும் மதிப்பிடுவதற்கும்
நிர்வாக விடயங்களுக்குப் பயன்படுத்தவும் தேவைப்படுகின்றது.
உரிமையாளருக்கும் எதிர்கால முதலீட்டாளருக்கும்
ஈடுபடுத்திய வளங்கள் சரியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா?
இலாபத் தன்மை எவ்வளவு?
நிறுவனத்தின் பொறுப்புக்களைத் தீர்க்கக்கூடிய சக்தி எத்தகையது?
மூலதனம் பாதுகாக்கப்பட்டுள்ளதா?
என்பன போன்ற விடயங்களை அறிவதற்குமான தகவல்கள் தேவைப்படுகின்றன.
கடன்கொடுத்தோருக்கு

தங்களால் வழங்கப்பட்ட கடனுக்குப் பாதுகாப்பு உண்டா?
தமக்கு வரவேண்டிய கடன்வட்டிக்கான நிச்சயத் தன்மை உண்டா?
மீண்டும்கடன்வழங்குதல் பொருத்தமானதா?
என்பன போன்ற விடயங்களை தீர்மானிப்பதற்கு தகவல்கள் தேவைப்படுகிறன.
தொழிற்சங்கங்களுக்கு

ஊழியர்களுக்கான சம்பளக் கொடுப்பனவுக்கான பாதுகாப்பு
ஊழியர்களுக்கான ஏனைய சலுகைகள்
ஊழியர்களின் தொழிலின் நிரந்தரத்தன்மை
என்பவற்றை உறுதி செய்வதற்கான தகவல்கள் தேவைப்படுகின்றன.
அரச நிறுவனங்களுக்கு

வரி எவ்வளவு விதிப்பது?
வளங்கள் விரயமாக்கப்பட்டுள்ளனவா?
உரிய சட்டங்கள் முறையாகப் பின்பற்றப்பட்டுள்ளனவா? என்பவற்றை அறிவதற்கும்
தேசிய கணக்குகளைத் தயாரிப்பதற்கும்
பொருளியல் கொள்கைகளை வகுப்பதற்கும்
அவசியமான தகவல்களைப் பெற்றுக்கொள்ள.

போட்டி வணிகங்களுக்கு

சந்தையில் நிறுவனத்தின் பங்களிப்பை அறியவும்
நிறுவனம் கையாளும் உத்திகளையும், கொள்கைகளையும் தெரிந்து கொள்ளவும்
சந்தையில் பொதுவான ஒரு நடைமுறையை கடைப்பிடிக்கவும்
வேண்டிய தகவல்களை பெற்றுக்கொள்ள.
உயர்தொழில் வல்லுனர்களுக்கு

கணக்காய்வாளர் கணக்காய்வை மேற்கொள்வதற்கும்
நீதிபதிகள் நியாயம் வழங்கத் தேவைப்படும் ஆதாரங்களுக்காகவும்
பெறுமதி மதிப்பீட்டாளர் ஆதனங்களுக்கு மதிப்பீடு செய்யவும்.
ஆய்வாளர்களுக்கு

நிறுவனங்களின் பிரச்சினைகளை இனங்காணவும்
நிறுவனங்களை மதிப்பீடு செய்யவும்
நிறுவனத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் ஆலோசனைகளை வழங்கவும்
ஊடகவியலாளர்களுக்கு

நிறுவனத் தகவல்கள்மூலம் செய்திகளை வெளியிடவும்
நிறுவனத்திற்கான விளம்பரங்களுக்கு ஆதாரங்களை முன்வைப்பதற்கும்
வாடிக்கையாளர்களுக்கு

தாம் பொருட்கள் அல்லது சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் நிறுவனத்தின் செழிப்பான அல்லது மந்தமான போக்குகளை அறிந்து அதற்கேற்ப தமது எதிர்கால செயற்பாடுகளைத் தீர்மானிக்க
பொதுமக்களுக்கு

நிறுவனம் பற்றிய பொதுவான கருத்துருவாக்கத்திற்கு
நிறுவனத்தின் தேசிய பங்களிப்பு பற்றி அறிவதற்கு
தகவல்கள் உள்ளடங்கிய பிரதானமான நிதிக்கூற்றுக்கள்
ஒரு வணிக அலகின் குறித்தகால செயற்பாடுகள் பற்றிய கணக்கீட்டுப் பொறிமுறையின் வெளியீடாக நிதிக்கூற்றுக்கள் விளங்குகின்றன. வணிக அலகில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும் நிதிக்கூற்றுக்களிலிருந்தே தகவல்களைப் பெறுகின்றனர். “தொழில் முயற்சியொன்றின் ஏற்றுக் கொண்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிதியியல் நிலைமையின் ஒரு கட்டமைக்கப்பட்ட நிதியியல் தெரிவிப்புரை நிதிக்கூற்றுக்களாகும்”. பொதுவாக நிதிக்கூற்றுக்கள் ஆண்டுதோறும் தயாரித்து வெளியிடப்பட்டாலும் பங்குச் சந்தையின் தேவைகளுக்காக வரையறுக்கப்பட்ட கம்பனிகள் காலாண்டுகளுக்கு ஒருமுறை அவற்றை தயாரிக்கவும் செய்கின்றன.
நிதிக்கூற்றுக்களின் கூறுகள்
வருமானக்கூற்று
ஐந்தொகை
காசுப்பாய்ச்சல்கூற்று
உரிமையாண்மை மாற்றம் பற்றிய கூற்று
குறிப்புக்களும் கணக்கீட்டுக் கொள்கைகளும்
தகவல் வழங்குதலும் அது தொடர்பான பொறுப்புக்களும்
கணக்கீட்டுத் தகவல்கள், உரிய காலத்தில் அத்தகவல்களை வழங்குவதற்குப் பொறுப்பானவர்களால் வழங்கப்படவேண்டும். கணக்கீட்டுச் செயன்முறையில் கொடுக்கல்வாங்கல்கள் எனப்படும் தரவுகளை, தொடர்பாடக்கூடிய நிதியறிக்கைகள் என அழைக்கப்படும் தகவல்களாக மாற்றியமைக்கின்ற கணக்கீட்டுக் கருமங்களில், கணக்குப்பதிவாளர் தொடக்கம் பிரதம கணக்காளர் வரையில் ஈடுபடலாம். இதைவிட பெரும்பாலான நிறுவனக் கணக்குகள் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்பே தகவல் தேவைப்படும் அக்கறையுள்ள கட்சியினர்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. எது எவ்வாறிருந்தபோதிலும் இவர்கள் யாவரும் கணக்கீட்டுப் பொறிமுறைச் செயற்பாட்டில் ஈடுபடும் பணியாளர்களே. கணக்கீட்டுத் தகவல்களை வழங்கும் இறுதிப் பொறுப்பு வணிக அலகின் உரிமையாளரையே சார்ந்தது.
இந்த வகையிலேயே கம்பனிகளின் பிரசுரக் கணக்குகளில் அவை தயாரிக்கப்பட்டதற்கும் வெளியீடு செய்வதற்கும் பொறுப்பேற்று இயக்குனர்கள் ஒப்பமிடுகின்றனர். 2007ம் ஆண்டின் 7ஆம் இலக்க கம்பனிகள் சட்டப்படி வரையறுக்கப்பட்ட கம்பனிகள் தமது நிதியறிக்ககைளை வெளியிடுதல் சட்டரீதியான ஒரு தேவையாக காணப்படுகிறது.
அதேபோல் 1995ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமச் சட்டத்தின்படி கணக்கீட்டு நியமத்திற்கு அமைவாக தகவல்களை வழங்கவேண்டிய தேவை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அத்தோடு இச்சட்டத்தில் விசேடமாக குறிப்பிடப்பட்டுள்ள வணிகநிறுவன வகைகள் கணக்கீட்டு நியமங்களைப் பின்பற்றாவிடின் தண்டனைக்குரிய குற்றமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் வழங்குவதன் இறுதிப் பொறுப்பு உள்ளவர்களாக தனி வியாபாரமெனின் அதன் உரிமையாளரும், பங்குடைமையாயின் பங்காளர்களும், வரையறுக்கப்பட்ட கம்பனியாயின் அதன் பணிப்பாளர்களுமே காணப்படுகின்றனர். எவ்வாறிருந்தபோதிலும் தகவல்களைத் தயாரித்து வழங்குவது கணக்காளர் உட்பட்ட அத்துறையில் கருமமாற்றும் பணிக்குழுவாகும். இவர்கள் நிறுவனத்தின் ஊழியர்களாவர் இவர்கள் தகவல்களை தயாரிப்பவர்களே தவிர தகவல்களை வெளியீடு செய்வதற்கான அதிகாரம் இவர்களுக்கு இல்லை. கணக்கீட்டுத் தகவல் தயாரிப்புத் துறையில் கிரயக் கணக்கீடு, முகாமைக் கணக்கீடு, நிதிக் கணக்கீடு, உள்ளகக் கணக்குப் பரிசோதனை ஆகிய நிபுணத்துவத் துறைகளைச் சார்ந்தோர் பங்குபற்றுவர்.

கணக்கீட்டுத் தகவல்களின் பண்புகள்
கணக்கீட்டுத்தகவல்கள் உண்மையானதாகவும் நியாயமானதாகவும் இருக்கவேண்டும். அத்துடன் தகவல்களைப் பயன்படுத்துவோருக்காக அவை கொண்டிருக்கவேண்டிய முதனிலைப் பண்புகளாக கூறப்படுபவை
புரிந்துகொள்ளக்கூடியதன்மை
பொருத்தமான தன்மை
நம்பகத்தன்மை
ஒப்பிடக்கூடிய தன்மை
உறுதியான தன்மை / மாறாத்தன்மை
பொருத்தமான தன்மையின் துணைப்பண்புகள்
எதிர்வுகூறல் பெறுமதி
மீள்ஊட்டல் பெறுமானம்
காலத்திற்குரிய பெறுமதி
நம்பகத் தன்மையின் துணைப்பண்புகள்
சரிபார்க்கக்கூடிய தன்மை
நடுநிலையான தன்மை
ஏற்றுக்கொள்ளக்கூடிய தன்மை
Grammar Patters 1 றின் மூன்று மற்றும் நான்காவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை சற்றுப் பாருங்கள். நான் ஏற்கெனவே 73 வாக்கியங்களில் ஒவ்வொரு வாக்கியங்களும் ஒவ்வொரு பாடங்களாக விரிவடையும் என்று குறிப்பிட்டிருந்தேன். அதற்கமைய இன்று 3, 4 காவதாக அமைந்திருக்கும் வாக்கியங்களை விரிவாகக் கற்கப் போகின்றோம்.

3. I did a job
4. I didn’t do a job.

இவை இரண்டும் இறந்தக்கால சொற்களாகும். இவற்றை தமிழில் கடந்தக்கால சொற்கள் என்றும் கூறுவர். ஆங்கிலத்தில் "Simple Past Tense" அல்லது "Past Simple Tense" என்றழைப்பர். இந்த இறந்தக்கால சொற்களின் பயன்பாடுப் பற்றி மேலும் விரிவாகக் பார்ப்போம்.

இந்த "Simple Past Tense" சாதாரண இறந்தக்காலச் சொற்களை எப்படி கேள்வி பதிலாக மாற்றி அமைப்பது என்பதை முதலில் பார்ப்போம்.

Positive (Affirmative)
Subject + Auxiliary verb + Main verb
I
/He/She/It/You/We/They + __ + did a job. இவற்றில் "Subject" வாக்கியத்தின் முன்னால் வந்துள்ளதை கவனிக்கவும். இதில் (Auxiliary verb) "துணை வினை" பயன்படாது என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Negative
Subject + Auxiliary verb + not + Main verb
I/He/She/It/You/We/They + did + not + do a job

Question (Interrogative)
Auxiliary verb + Subject + Main verb
Did 
I/he/she/it/you/we/they + do a job? இவற்றில் "Subject" அதாவது விடயம் பின்னாலும், துணை வினை (Auxiliary verb வாக்கியத்தின் ஆரம்பித்திலுமாக மாறி வந்துள்ளதை அவதானியுங்கள். இவற்றை சரியாக விளங்கிக் கொண்டோமானால் ஆயிரக்கணக்கான புதுப் புது வாக்கியங்களை நாமாகவே உருவாக்கி, அவற்றை கேள்வியும் பதிலாகவும் நாமாகவே மாற்றி அமைத்துவிடலாம்.

உதாரணம்:

Did you do a job?
நீ செய்தாயா ஒரு வேலை?
Yes, I did a job
ஆம், நான் செய்தேன் ஒரு வேலை.
No, I didn’t do a job. (did + not)
இல்லை, நான் செய்யவில்லை இரு வேலை.

Did you speak in English?
நீ பேசினாயா அங்கிலத்தில்?
Yes, spoke in English.
ஆம், நான் பேசினேன் ஆங்கிலத்தில்
No, didn’t speak in English. (did + not)
இல்லை, நான் பேசவில்லை ஆங்கிலத்தில்.

Did you go to school?
நீ போனாயா பாடசாலைக்கு?
Yes, I went to school.
ஆம், நான் போனேன் பாடசாலைக்கு.
No, I didn’t go to school. (did + not)
இல்லை, நான் போகவில்லை பாடசாலைக்கு.

மேலே கொடுக்கப்பட்டிருக்கும் உதாரணங்களைப் பின்பற்றி கீழே இருக்கும் வாக்கியங்களை கேள்வி பதிலாக மாற்றி பயிற்சி செய்யுங்கள் பார்க்கலாம்.

1. I answered the phone
நான் பதிலளித்தேன் தொலைப்பேசிக்கு

2. I studied English for ten years.
நான் படித்தேன் ஆங்கிலம் பத்து வருடங்களாக.

3. applied for vacancies.
நான் விண்ணப்பித்தேன் தொழில் வாய்ப்புக்காக

4. I forgave him.
நான் மன்னித்தேன் அவனை.

5. I travelled by MTR.
நான் பிரயாணம் செய்தேன் MTR ல். (நவீன நிலத்தடித் தொடரூந்து வண்டி)

6. came back last Friday.
நான் திரும்பி வந்தேன் கடந்த வெள்ளிக்கிழமை.

7. asked for an increment.
நான் கேட்டேன் ஒரு (பதவி/சம்பல)உயர்வு.

8. I bought a car.
நான் வாங்கினேன் ஒரு மகிழூந்து.

9. wrote an article.
நான் எழுதினேன் ஒரு கட்டுரை.

10. borrowed money from Sarmilan.
நான் கடன் வாங்கினேன் காசு சர்மிலனிடமிருந்து.

11. lent a book to Ravi.
நான் இரவல்/கடன் கொடுத்தேன் ஒரு புத்தகம் ரவிக்கு

12. cracked jokes with others.
நான் பகிடிவிட்டேன் மற்றவர்களுடன்.

13. boiled water.
நான் கொதிக்கவைத்தேன் தண்ணீர்.

14. got wet.
நான் நனைந்தேன்.

15. gave priority to my works.
நான் முக்கியத்துவம் கொடுத்தேன் எனது வேலைகளுக்கு.

16. got confrontation with my Boss.
நான் எதிரெதிராகச் செயல் பட்டேன் என் தலைவனுடன்.

17. I got an appointment.
நான் பெற்றேன் ஒரு நியமனம்.

18. I got into the bus.
நான் ஏறினேன் பேரூந்துக்குள்.

19. got a loan from the bank.
நான் பெற்றேன் ஒரு கடன் வங்கியிலிருந்து.

20. read Thinakkural News paper.
நான் வாசித்தேன் தினக்குரல் செய்தித் தாள்.

21. escaped from the danger.
நான் தப்பினேன் அபாயத்திலிருந்து.

22. studied in Jaffna.
நான் படித்தேன் யாழ்ப்பாணத்தில்.

23. I ironed my clothes.
நான் அயன் செய்தேன் எனது உடைகளை.

24. I invited my friends.
நான் அழைப்புவிடுத்தேன் எனது நண்பர்களுக்கு.

25. I deposited money to the bank.
நான் வைப்பீடு செய்தேன் காசை வங்கியில்.

26. I born in 1998.
நான் பிறந்தேன் 1998 ல்.

27. I played football.
நான் விளையாடினேன் உதைப்பந்தாட்டம்

28. I introduced her to my family.
நான் அறிமுகப்படுத்தினேன் அவளை எனது குடும்பத்தாருக்கு.

29. I inquired about this.
நான் விசாரித்தேன் இதைப் பற்றி.

30. I informed to police.
நான் தெரிவித்தேன் காவல் துறைக்கு.

31. I learned driving in Hong Kong.
நான் கற்றேன் வாகனம் ஓட்ட ஹொங்கொங்கில்

32. met Kavitha yesterday
நான் சந்தித்தேன் கவிதாவை நேற்று.

33. I married in 1995.
நான் திருமணம் செய்தேன் 1995 ல்.

34. I played Guitar.
நான் வாசித்தேன் கிட்டார்.

35. visited Thailand last year.
நான் (பார்க்கச்) சென்றேன் தாய்லாந்து கடந்த வருடம்.

36. I opened a current account.
நான் திறந்தேன் ஒரு நடைமுறைக் கணக்கு.

37. sent a message.
நான் அனுப்பினேன் ஒரு தகவல்.

38. I paid in Installments.
நான் செலுத்தினேன் (பணம்) தவணைமுறையில்.
39. I taught English.
நான் படிப்பித்தேன் ஆங்கிலம்.

40. I went to university.
நான் சென்றேன் பல்கலைக்கழகத்திற்கு.

41. I repaid the loan.
நான் திரும்பச் செலுத்தினேன் கடன்.

42. arrived ten minutes ago.
நான் வந்தடைந்தேன் பத்து நிமிடங்களுக்கு முன்பே.

43. lived in Bangkok for two years.
நான் வசித்தேன் பெங்கொக்கில் இரண்டு வருடங்களாக.

44. I worked very hard.
நான் வேலை செய்தேன் மிகவும் கடினமாக.

45. left from home.
நான் வெளியேறினேன் வீட்டிலிருந்து.

46. I sang a song.
நான் பாடினேன் ஒரு பாடல்.

47. practiced English last night.
நான் பயிற்சி செய்தேன் ஆங்கிலம் கடந்த இரவு.

48. I forgot her.
நான் மறந்தேன் அவளை.

49. decorated my house.
நான் அலங்கரித்தேன் எனது வீட்டை.

50. wrote a letter to my mother.
நான் எழுதினேன் ஒரு கடிதம் என் தாயாருக்கு.

Homework:

பயிற்சி 1: மேலே I (நான்) என்று எழுதிப் பயிற்சி செய்தோம். அவற்றை அதே ஒழுங்கில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தைப் பின்பற்றி You, He, She, It, We, They எனும் சொற்களுடன் வாக்கியங்களை அமையுங்கள்.

Subject + Main verb +
spoke in English. - நான் பேசினேன் ஆங்கிலத்தில்.
You spoke in English. - நீ பேசினாய் ஆங்கிலத்தில்.
He spoke in English. - அவன் பேசினான் ஆங்கிலத்தில்.
She spoke in English. - அவள் பேசினாள் ஆங்கிலத்தில்.
It spoke in English. - அது பேசியது ஆங்கிலத்தில்.
We spoke in English. நாங்கள்/நாம் பேசினோம் ஆங்கிலத்தில்.
They spoke in English. - அவர்கள் பேசினார்கள் ஆங்கிலத்தில்.

பயிற்சி 2: ஏற்கெனவே ஆங்கில பாடப் பயிற்சி 4 ல் சாதாரண நிகழ்கால வாக்கியங்கள் 50 கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றையும் இறந்தக்காலச் சொற்களாக மாற்றிப் பயிற்சி செய்யலாம். அதில் வினைச்சொல் அதாவது பிரதான "verb" கறுத்தத் தடித்த எழுத்துக்களில் எழுதப்பட்டிருக்கும், அந்த இடங்களில் Irregular verbs அட்டவணையப்பார்த்து இறந்தக் கால வினைச் சொற்களாக மாற்றி அமைக்க வேண்டியது தான் உங்கள் வேலை.

பயிற்சி 3: இன்று 'நடந்து முடிந்த' அல்லது உங்கள் வாழ்க்கையில் 'நிகழ்ந்து முடிந்த' அனைத்து இறந்தக்கால விடயங்களையும் தமிழில் எழுதிக்கொள்ளுங்கள். பின் அவற்றை இன்று நாம் கற்றது போன்று ஆங்கிலத்தில் மாற்றி எழுதிப் பாருங்கள். எமது இந்தப் பாடப் பயிற்சிகள் நிறைவுப் பெறும் போது உங்கள் வாழ்க்கை சுயசரிதையை நீங்களே எழுதியிருப்பீர்கள்.

குறிப்பு:


சாதாரண நிகழ்கால சொற்கள், இறந்தக்கால வினைச்சொற்களாக மாறும் போது ஏற்படும் மாற்றங்களை அவதானியுங்கள். இவற்றை இரண்டு விதமாக பிரித்துக் கற்கலாம்.

1. Regular verbs - with regular verbs + ed 
2. Irregular verbs - The past form for irregular verbs is variable. You need to learn it by heart.

1. Regular verbs - எல்லா இறந்தக்கால வினைச்சொற்களின் முடிவிலும் ஒரே ஒழுங்காக – ed இணைந்து வருபவைகள்.
உதாரணம்:

I played cricket
I visited Japan last year
I watched TV last night

Study போன்று "y" எழுத்தில் முடிவடையும் சில சொற்களுடன் மட்டும் - ied இணைந்து வரும்.
உதாரணம்:

I studied English.

Live, Love போன்ற சொற்கள் " e" எழுத்தில் முடிவடைவதால், இவற்றின் இறந்தக்கால சொற்களின் போது - யை மட்டும் இட்டால் போதும்.
உதாரணம்:

I lived in Australia for two years.

2. Irregular verbs - இந்த இறந்தக்கால Irregular verbs கள் வெவ்வேறு விதமாக ஒரு ஒழுங்கு முறையற்று வரும். இதனால் இவற்றை Irregular verbs அட்டவணையைமனப்பாடம் செய்து தான் கற்றுக் கொள்ளவேண்டும். எடுத்துக்காட்டாக கீழே உள்ள சொற்களைப் பாருங்கள்.

fell off a horse yesterday.
went to school
taught English
wrote a letter
slept yesterday

இறந்தக்கால குறிச்சொற்கள் [Simple Past - Signal words]

yesterday
Last night/ week/ year/century
A month ago
In 2007
In the past

இறந்தக்காலம் என்பது செயல் அல்லது நிகழ்வு ஏற்கெனவே முடிந்து விட்டதைக் குறிக்கின்றது. இது இந்த நொடியில் முடிவுற்ற ஒரு விடயமாகவும் இருக்கலாம். பல மில்லியன் வருடங்களுக்கு முன்னதாகவே முடிவுற்ற ஒன்றாகவும் இருக்கலாம். வரைப்படத்தைப் பாருங்கள்.
உச்சரிப்பு (Pronunciation)
குறிப்பாக "regular verbs" களின் முடிவின் போதும் – ed வரும். இருப்பினும் இவற்றின் உச்சரிப்பின் போது சிற்சில மாற்றங்கள் உள்ளன. அவற்றை அவதானித்து பேசிப் பழகுங்கள்.
Agreed - எக்gரீட்d
Loved - லவ்ட்d
Judged - ஜட்ஜ்ட்d
Begged - பெக்ட்d
Cleaned - க்ளீண்ட்d
இவை சொற்களின் முடிவில் (ட்D) எனும் விதமாக ஒலிப்பவைகள்.
Stopped - /t/
Laughed - /t/
Washed - /t/
Watched - /t/
Talked - /t/
இவை முடிவில் (ட்t) போன்று ஒலிப்பவைகள்.

Needed - நீdடட்dCollected - கலெக்டட்d
இவை முடிவில் (டட்d) போன்று ஒலிப்பவைகள்.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் ஊடாக கேட்டறிந்துக்கொள்ளலாம்.

நன்றி

அன்புடன் www.agaram.lk
அரிஸ்ரோற்றல் காலத்திலிருந்து உலகளாவிய ரீதியில் அரசியலை விஞ்ஞானத்தின் எசமான் (Master) என்றே அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் பொலொக் (Pollock) கொம்ட் (Compte) போர்ட் (Ford) போன்றோர் இவ்வாறு அழைக்கப்படுவதை மறுக்கிறார்கள். அரிஸ்ரோற்றல் இதனை அரசின் அல்லது அதிகாரத்தின் விஞ்ஞானமாக விளக்கமளித்தார். எனவே அரசறிவியல் விஞ்ஞானம் ஒரு கலையா? அல்லது விஞ்ஞானமா? என்ற விவாதம் காலங்காலமாக நிகழ்த்தப்படுகின்றது. அரசியல் விஞ்ஞானம் ஒரு கலை என்றும், விஞ்ஞானம் என்றும் இரு பக்க விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இன்னோர் வகையில் கூறின் பழைய பெயராகிய “அரசியல்” என்பதற்குப் பதிலாக “அரசியல் விஞ்ஞானம்” எனப் பெயரிடும் போது எதிர்வாதங்கள் ஏற்படுகின்றன. மேரி வொல்ஸ் ரோன்கிராப்ற், வில்லியம் க்கோட்வின், விக்கோ, ஹியும், பொலொக், சீலி போன்றவர்கள் அரசியல் விஞ்ஞானம் எனப் பெயரிடுவதையே பெரிதும் விரும்பியிருந்தனர். இருபதாம் நூற்றாண்டிலேயே “அரசியல் விஞ்ஞானம்” என்ற புதிய பெயர் பிரபல்யமடைந்திருந்தது. பெரும் எண்ணிக்கையிலான ஆய்வாளர்கள் பழைய பெயராகிய “அரசியல்” என்பதற்கு பதிலாக அரசியல் விஞ்ஞானம் எனப் பெயரிட்டு அழைப்பதையே விரும்பினர். இவ்வாறு அழைப்பது ஏற்புடையதாக இருப்பினும், இக்கற்கை நெறியினை சில ஆய்வாளர்கள் “அரசியல்”, “அரசியல் விஞ்ஞானம்” ஆகிய இரண்டு பெயர்களையும் முற்றிலும் ஒரே கருத்தில் பயன்படுத்தியுள்ளனர். நடத்தைவாதிகள் இக்கற்கை நெறியை மீண்டும் பழைய பெயராகிய “அரசியல்” என்ற பதத்தினால் அழைக்க விரும்பினர். ஆயினும், சில ஐக்கிய அமெரிக்க எழுத்தாளர்கள் அரசு, அரசாங்கம் என்பதற்குப் பதிலாக அரசியல் முறைமை (Political System)என்ற புதிய பெயரால் அழைக்க விரும்பினர்.
அரசியல் விஞ்ஞானம் ஓர் விஞ்ஞானமா? அல்லது இல்லையா என்பது தொடர்பாக எம்மிடம் எதிர்மாறான கருத்துக்கள் உள்ளன. எனவே நியாயமான முடிவு ஒன்றிற்கு நாம் வர வேண்டும். சமகாலம் தொழில்நுட்பவியல் காலமாகும். மனிதன் மனிதனாக வாழ்வதற்கும் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெறுவதற்கும் விஞ்;ஞான அறிவு உதவுகின்றது. அது மனிதனை மதிப்போடும், பகுத்தறிவோடும் ஒழுக்கமாக வாழ்வதற்கும் உதவியுள்ளது. விஞ்ஞான வழிமுறை என்பது நவீனகாலப்பகுதியின் ஒரு கண்டு பிடிப்பாகும். பக்கச்சார்பற்ற, நன்றாக நிலை நிறுத்தப்பட்ட, முறைப்படியமைந்த அறிவைப் பெறுவதை விஞ்ஞானங்கள் குறிக்கோளாகக் கொள்ளு¬கின்றன. இவற்றினை அடைவதற்குச் சில விசாரணை முறைகள் பின்பற்றப்பட வேண்டும். அவையே விஞ்ஞான வழிமுறைகள் என அழைக்கப்படுகின்றன. அதாவது விஞ்ஞானங்களால் கட்டியெழுப்-பப்பட்ட மாதிரியான விசாரணை விஞ்ஞானவழி முறை என அழைக்கப்படுவதற்கு உரித்துடையதாகியது. இவ்வழிமுறை இரண்டு தெளிவான பிரிவுகளைக் கொண்டுள்ளது.
  1. தொழில்நுட்ப மற்றும் தொழில் நுட்பவியல் வழிமுறையூடாக ஒரு குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் விசாரணை செய்வதும், அளவிடுவதுமே விஞ்ஞான வழிமுறை என அழைக்கப்படுகின்றது. இத்தொழில்நுட்ப வழிமுறைகள் வேறுபடும் போது விஞ்ஞானங்களும் வேறுபடுகின்றது.
  2. பெற்றுக் கொண்ட தரவுகளின் இயல்புகளுக்கு ஏற்ப அளவையியல் முறைமைகளின்படி காரண காரியங்களைக் கண்டுபிடிக்கலாம். இந்த அளவையியல் வழிமுறைகள் தொழில்நுட்பவியல் வழிமுறைகளோடு நெருங்கிய தொடர்புடையவையாகும்.
எனவே நாம் முதலில் விஞ்ஞானம் என்ற சொல்லிற்குரிய அர்த்தத்தினைச் சரியாக விளங்கிக் கொள்ள முயற்சிக்க வேண்டும். விஞ்ஞானம் என்பது “பொதுவான விதிக@டான செயற்பாட்டினைக் காட்சிப்படுத்துகின்றதும், முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டதுமான உண்மைகளுடன் தொடர்புடைய கல்வி அல்லது அறிவின் ஒரு கிளை” என அமெரிக்க அகராதி கூறுகின்றது. இவ்வகையில் விஞ்ஞானத்தின் பிரதான இயல்புகளாக பின்வருவனவற்றைக் கூறிக் கொள்ளலாம்.
  1. நிகழ்வதற்குரிய சாத்தியக் கூறினை கருத்துடன் சுருக்கமாக, உறுதியாக ஒருங்கிணைத்து முறைப்படுத்தல்.
  2. தனிப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து விதிவரு முறையினால் பொதுக்கருத்தினை உருவாக்கும், எதிர்வு கூறும் திறன்.
  3. தனிப்பட்ட நிகழ்ச்சியிலிருந்து விதிவரு முறையினால் பொதுக்கருத்தினை உருவாக்கும் தரவுகளை ஒப்பாய்வு செய்யக்கூடிய நிலை.
  4. முறை அல்லது முறைமையியலின் உடன்பாடு.
  5. விஞ்ஞான ரீதியாக வேலையுடன் ஈடுபாடு காட்டக்கூடிய போதிய பயிற்சி என்பவைகளாகும்.
இலகுவாக கூறின் “விஞ்ஞானம் அறிவின் ஒரு கிளை” இது உள் நோக்கங்கள் எதுவுமில்லாத முறைப்படுத்தப்பட்ட அல்லது அறிவுகளுக்காகத் தேடிப்பெற்ற அறிவு எனக்கூறலாம். நுணுக்கமான விபரங்கள் எவ்வித பாரபட்சமுமின்றியும், தப்பெண்ணங்களின்றியும் சேகரிக்கப்படல், தப்பெண்ணங்கள் எதுவுமின்றி இவைகள் அதன் இயல்புகள் அல்லது ஒத்த தன்மைகள், வேறுபாடுகளுக்கேற்ப வகைப்படுத்தப்படல், தகவல்களின் நடத்தையினை அடிப்படையாகக் கொண்டு பொதுக் கருத்தினை உருவாக்குதல் இறுதியாக இவைகள் தொடர்பான விதிகள் உருவாக்கப்படல் என்பவைகளைக் கொண்டதே விஞ்ஞானமாகும். ஜி.என்.சிங் (G.N.Sing) என்பவர் விஞ்ஞானத்தினை நான்காக வகைப்படுத்தலாம் எனக்கூறுகின்றார்.
  1. கருத்தியலான அல்லது மனத்தால் இயக்கப் பெறுகின்ற விஞ்ஞானம், கணிதவியல், அளவையியல், போன்றவற்றை உதாரணமாகக் கூறிக் கொள்ளலாம். இவைகள் மனதிற்கு கருத்து படிவங்களைத் தருபவைகளாகும்.
  2. பௌதீக விஞ்ஞானம்;;; பௌதீகவியல், இரசாயனவியல், நிலஅமைப்பியல், போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். இவைகள் உயிரற்ற பொருட்களுடன் தொடர்புபட்டதுடன் விதிவிலக்கற்ற நிபந்தனைக்குட்பட்ட பரிசோதனை முறைமைகளைக் கொண்டவைகளுமாகும்.
  3. உயிரியல் விஞ்ஞானம்; தாவரவியல், விலங்கியல், போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். இவைகள் தாவரங்கள், விலங்குகளின் வாழ்க்கை என்பவற்றுடன் தொடர்புடைய பரிசோதனை முறையாகும்.
  4. சமூக விஞ்ஞானங்கள்; சமூகவியல், பொருளியல், அரசியல் போன்றவற்றை உதாரணமாகக் கூறலாம். இவைகள் சமூக இயல்புள்ள மனிதனுடன் தொடர்புடையதாகும்.
  5. இவ்வாறாயின், அரசியல் விஞ்ஞானத்தினை ஒரு விஞ்ஞானமாக விபரிக்க அல்லது மதிப்பளிக்க முடியுமா? என்ற வினா பின்வரும் காரணங்களினால் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.
விஞ்ஞானம் தனக்குரிய கலைச் சொற்களையும், துல்லியமான வரைவிலக்கணங்களையும் கொண்டுள்ளது. அரசியல் விஞ்ஞானமும் தனக்குரிய கலைச் சொற்களாகிய சுதந்திரம், சமத்துவம், உரிமைகள், நீதி, ஜனநாயகம், சட்டஆட்சி, சோசலிசம் போன்றவற்றினைக் கொண்டிருப்பினும், துல்லியமான சொற்களையும் வரைவிலக்கணங்களையும் கொண்டிருக்கவில்லை. இச்சொற்களுக்கு வௌவேறு எழுத்தாளர்கள் வேறுபட்ட விளக்கங்களைக் கொடுத்துள்ளனர். இது ஏராளமான குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு இடத்தில் வாழும் மக்களுக்கும், பிறிதொரு இடத்தில் வாழும் மக்களுக்குமிடையில் காணப்படும் பழக்கவழக்கங்கள், மனஉணர்ச்சி, மனநிலை, சுபாவம் போன்றவற்றின் விளைவால் சிக்கலான அரசியல் நிகழ்ச்சிகள் உருவாகின்றன. இதனால் மக்களுடைய நடத்தைகளுக்கு நிலையான விதிகளை உருவாக்க முடியாது. உதாரணமாக வாக்காளர்களின் வாக்களிப்பு நடத்தை, சமயம், சாதி, சமுதாயம், சமூகப் பொருளாதாரநிலை, வர்க்கம் போன்ற பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றது. மேலும் ஐக்கிய அமெரிக்காவின் ஜனநாயக முறைக்கும், பிரித்தானிய ஜனநாயக முறைக்கும் இடையில் வேறுபாடுள்ளதை அவதானிக்கலாம்.
அரசியல் விஞ்ஞானிகளின் பெரும்பாலான வாசகங்கள் பொதுக்கருத்தின் அடிப்படையிலானதாகவே இருக்கின்றன. உதாரணமாக “அரசாங்கத்தினை உருவாக்குவதற்கு ஜனநாயகம் மிகச் சிறந்ததாகும்” என்பது பொதுக்கருத்திலான வாசகமாகும். எவ்வாறாயினும், பொதுவான கருத்தினைப் பலப்படுத்துவதற்கு ஒப்பீட்டு ஆய்வினை நாம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால்தான் ஜனநாயகம் பற்றி எம்மனதில் ஏற்பட்ட எண்ணத்தினைப் பலப்படுத்த அல்லது நிரூபிக்க முடியும். உண்மை யாதனில் எமது வாசகங்களில் விஞ்ஞான விசாரணைக்குத் தேவையான நிபந்தனையாகிய புலன்களால் அறியக் கூடிய தன்மை இல்லாமல் உள்ளது. எனவே ஒப்பீடு என்பதும் சரி நுட்பமான ஒழுங்;குமுறைக்குட்படாததாகலாம்.
அரசியல் நிகழ்ச்சிகள் பற்றிய கல்வி குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து கற்பிக்கப்படுகின்றன. ஆனால், அரசியல் அபிவிருத்திகளை ஏற்படுத்தும் சுற்றுச் சூழல் தொடர்பாக வேறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களாக மக்கள் உள்ளனர். மாபெரும் சிந்தனையாளர்களும், கோட்பாட்டாளர்களும் சில அரசியல் நிகழ்ச்சி தொடர்பான தமது மனக்கருத்துக்களை ஆதரித்து அல்லது எதிர்த்து கூறுகின்றார்கள். உதாரணமாக “புரட்சிகள்” மாபெரும் நிகழ்வு எனச் சிலர் கூறுகின்ற போது சிலர் அவற்றை “எதிர்புரட்சி” எனச் சிறப்பு பெயரிடுகின்றனர்.
மேற்கூறப்பட்ட அனைத்தையும் ஒரு பரசோதனைக்குட்படுத்துவது சிரமமானதாகும். அரசியல் விஞ்ஞானிகளின் முடிவுகளைப் பரிசோதனைக்குட்படுத்த முடியாது. பரிசோதனை செய்வதற்கு கருவிகள், இயந்திரங்கள், ஆய்வு கூடங்கள் எதுவும் இருப்பதில்லை. இதேபோல் அரசியல் கோட்பாடுகள் கூறும் முடிவுகளும், எதிர்வு கூறுதல்களும் இவைகளைப் பயன்படுத்தி பரிசோதனை செய்து எழுதப்பட்;டவைகளல்ல. இவ்வாறு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், பெருமளவிலான எழுத்தாளர்கள் இக்கற்கை நெறியை விஞ்ஞானக் கற்கைநெறி என அழைப்பதற்குத் தயக்கம் காட்டுகின்றனர். உதாரணமாக 19ஆம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் ஜே.எஸ்.மில் இக்கற்கை நெறியிலுள்ள விஞ்ஞானப் பண்புகள் தொடர்பாகச் சந்தேகம் வெளியிட்டிருந்தார். பக்கிள் (Buckle) “தற்கால அரசு பற்றிய அறிவு, அரசியல் என்பன விஞ்ஞானத்திலிருந்து வெகு தூரத்திலுள்ளதுடன், எல்லாக் கலைகளுக்கும் பி;ன் நோக்கியதாகவும் இருக்கின்றது” எனக் கூறுகின்றார். முறைகளையும், முறைமையில்களையும் பயன்படுத்துதல் தொடர்பாக எழுத்தாளர்களிடமுள்ள உடன்பாடின்மை, இக்கற்கை நெறி தொடர்பான முடிவுகள், கொள்கைகள் தொடர்பாக பொதுவான உடன்பாடுகள் குறைவாக இருத்தல், இக்கற்கையின் அபிவிருத்தியில் தேவைப்படும் தொடர்ச்சி, சரிநுட்பமான எதிர்வு கூறல்களை உருவாக்குவதற்கு தகவல்களை வழங்குவதிலுள்ள தோல்வி போன்றவற்றின் அடிப்படையில் பிரான்சிய அறிஞர் அகஸ்ட் கொம்ட் அரசியலை விஞ்ஞானம் என அழைப்பதை நிராகரித்தார். 1920ஆம் ஆண்டு பிரைஸ் (Bryce) பிரபு “ஆழமாகவும் கவனமாகவும் தகவல்கள் சேகரிக்கப்பட்டிருப்பினும் விஞ்ஞானப் பாடநெறிகளாகிய தாவரவியல் அல்லது இரசாயனவியல் அல்லது இயந்திரவியல் போன்று அரசியல் ஒரு விஞ்ஞானமாக வருவது சாத்தியமற்றது” எனக்கூறுகின்றார்.
இவ்வகையில் அரசியல் விஞ்ஞானத்தினை விஞ்ஞானக் கல்விக்குரிய பாடங்களுடன் வகைப்படுத்துவது முடியாததாகும். ஆனால், சமூக விஞ்ஞானங்கள் என்ற வடிவத்துக்குள் இதனை உள்வாங்குவதற்கு ஆழமான முயற்சிகள் எடுத்துக் கொள்ளப்பட்டது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகின்றது. இதனால் அரசியல் விஞ்ஞானத்தின் இயல்புகள் இருபதாம் நூற்றாண்டில், குறிப்பாக இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் பெருமளவிற்கு மாறியுள்ளது. இதனைப் பின்வரும் வகையில் தொடர்புபடுத்திக்காட்ட முடியும்.
உண்மைகளை அடிப்படையாகக் கொண்ட பெரும் எண்ணிக்கையிலான ஆய்வுகள் ஆழமான அனுபவ அரசியல் கோட்பாடுகள் எழுச்சியடைவதற்கு முன்னின்றன. பொதுக் கருத்தினை அடிப்படையாகக் கொண்டு “ஜனநாயகம், அரசாங்கத்தினை உருவாக்குவதற்கு சிறந்ததொரு முறை”, “மக்களினுடைய சுதந்திரத்தினை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு வலுவேறாக்கம் அவசியமாகின்றது”. “நியமன அங்கத்தவர்களை விட தேர்தல் மூலம் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படுதல் சிறப்பானது”, “சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் கடமையாற்றுவதற்கு நீதிபதிகள் நிரந்தர சேவைக்காலத்தினைக் கொண்டிருக்க வேண்டும்”, “ஜனநாயக முறைமைக்கான சிறந்த கல்வி தேர்தலாகும்” போன்ற மறுக்க முடியாத பல உண்மைகளை முடிவுகளாக எடுக்க முடிகின்றது.
பௌதீக விஞ்ஞானம், உயிரியல் விஞ்ஞானம், போன்ற தெளிவான பண்புகளைக் கொண்ட விஞ்ஞானப் பாடங்கள் உள்ளன. அதேநேரம் வானிலை ஆய்வு போன்ற தெளிவில்லாத பண்புகளைக் கொண்ட விஞ்ஞானப் பாடங்களும் உள்ளன. அவ்வாறாயின் அரசியல் விஞ்ஞானத்தினை பௌதீக, உயிரியல் விஞ்ஞானங்களுடன் ஒப்பிட முடியாது. அதேநேரம் வானிலை ஆய்வுடன் ஒத்த தன்மைகள் சில இருக்க முடியும். மேலும், இக்கற்கை நெறியிலுள்ள சில விதிகள் அனுபவ விசாரணைக்குட்பட்டவைகளாக இல்லாதிருக்கலாம். சில விதிகள் பரிசோதனைக்குட்பட்டவைகளாக இருக்கலாம். அரசின் இலக்கு “அதன் மக்களுக்கு நல்ல வாழ்க்கையினை உத்தரவாதப்படுத்துவதாகும்” என்ற அரிஸ்டோட்டிலின் விதியினை அனுபவபூர்வமாக பரிசோதிக்க முடியாமலிருக்கலாம். ஆனால், “சமத்துவமின்மை புரட்சிகளுக்கு காரணமாகின்றது” என்ற இவருடைய விதியை சிலவேளை பரிசோதிக்கலாம்.
விஞ்ஞானம் சிறப்பான எதிர்வு கூறல்களை முன்வைக்கின்றது. அரசியல் விஞ்ஞானம் இவ்வாறான சிறப்பான எதிர்வு கூறல்களை முன்வைப்பதில்லை. எனவே இதனை விஞ்ஞானக் கற்கை எனப்பட்டியல்படுத்த முடியாது. ஆனால் வேறுபட்ட பல்வேறு வழிகளில் அரசியல் விஞ்ஞானம் கற்கப்பட்டது. இயற்கை விஞ்ஞானத்தின் சிறப்பு சமூக விஞ்ஞானத்திலும் இருக்கவில்லை. ஏனெனில் சமூக விஞ்ஞானம் மாறுகின்ற மனித நடத்தைகளுடன் தொடர்புபட்டதாகும். மனித மனம் அடிக்கடி மாறுகின்ற இயல்புடையதாகியதால், மனித நடத்தையினை அடிப்படையாகக் கொண்டு எதிர்வு கூறல்களைக் கூறமுடியாது. இயற்கை விஞ்ஞானம் வெப்பம், ஒலி போன்ற இயற்கையான விடயங்களுடன் தொடர்புபட்டதால் எதிர்வு கூறல்களை இதனால் செய்ய முடியும். ஆனால் சமூக விஞ்ஞானத்தினால் எதிர்வு கூறல்களுக்கான அடிப்படை கூறுகளை உருவாக்க முடியும் என அண்மைக்கால ஆய்வுகள் கூறுகின்றன. சமூக அபிவிருத்தியின் சில அடிப்படை விதிகளை ஆதாரமாகக் கொண்டு கால்மாக்ஸ், பிரட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோர்களால் முதலாளித்துவம் வீழ்ச்சியடைந்து சோசலிசம் எழுச்சியடையும் என எதிர்வு கூற முடிந்தது. ஆகவே மாக்சிசவாதிகள் தமது எதிர்வுகூறல்களை விஞ்ஞானப10ர்வமானவை எனக்கூறினர். லாஸ்வெல், டால் போன்ற அமெரிக்க எழுத்தாளர்கள் இவ்வழியில் தமது சிந்தனைகளையும் உரிமை கொண்டாடுகின்றனர். “அரசியல் விஞ்ஞானத்தில் புள்ளிவிபரவியல் பகுப்பாய்விலான எதிர்வுகூறல் சாத்தியமானது” என வில்ஸன் கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
இவ் எல்லாக் கருத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு சில எழுத்தாளர்கள் அரசியல் விஞ்ஞானத்தினை ஓர் விஞ்ஞானக் கற்கையாக விபரி;ப்பதையே விரும்புகின்றனர். “ஹொல்ஷென்ட்ஒப்” (Holtzendoref) “அறிவின் மிகப்பெரிய வளர்ச்சியுடனான மொத்தமான எல்லா அனுபவங்கள், நிகழ்ச்சிகள். அரசு பற்றிய அறிவு போன்ற அனைத்தும் அரசியல் விஞ்ஞானம் என்ற பொதுவான தலைப்பின் கீழ் கொண்டுவரப்படுமானால் அதனை நிராகரிப்பது சாத்தியமானதல்ல” எனக் கூறுகின்றனர். அரசியல் விஞ்ஞானம் இயற்கை விஞ்ஞானமல்ல ஆனால் சமூக விஞ்ஞானமாகும். அரசியல் விஞ்ஞானம் விஞ்ஞானப10ர்வமானதாக இருக்க வேண்டுமாக இருந்தால் நுணுக்கமாக வரையறுக்கப்பட்ட கண்டிப்பான சொற்களால் இது உச்சரிக்கப்படல் வேண்டும். அதேநேரம், வொன்மோல், பிளன்சிலி ஜெலினிக், றசன்கொபர், லூயிஸ், சிட்;விக், லிபர், பொலொக், வ10சி, பேகஸ் விலோபி, மைக்கல்ஸ், வெபர், மரியம், ஈஸ்ரன், லஸ்வெல், போன்ற பெரும் கோட்பாட்டாளர்கள் அரசியல் விஞ்ஞானத்தினை ஓர் விஞ்ஞானப் பாடநெறியாக அழைப்பதே சரியானது என வலியுறுத்துவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆயினும், சமூக விஞ்ஞானம் ஒவ்வொன்றும் விதிமுறைப்படியான பண்புக் கூறுகளுடன் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இவைகளைத் தூய விஞ்ஞானம் மற்றும் துல்லியமான விஞ்ஞானம் என மாற்றமுடியாது. இது அரசியல் விஞ்ஞானத்திற்கும் பொருந்தும். மனித வாழ்க்கைக்கான விதிமுறைகள், இலக்குகள், விழுமியங்கள் தொடர்பான பண்புகள் அரசியல் கற்கையிலும் காணப்படுகின்றன. இவ்வடிப்படையில் பார்க்கின்றபோது அரசியல் விஞ்ஞானத்தினைத் தூய விஞ்ஞானமாகவன்றி சமூக விஞ்ஞானமாகவே கருதமுடியும்.

Thanabalasingam Krishnamohan

Dr. Thanabalasingam Krishnamohan B.A.Hons.,M.Phil.,Ph.D. Senior Lecturer in Political Science Gr-1 Eastern University, Sri Lanka
(உலகின் தோற்றம் / பிரபஞ்சத்தின் உற்பத்தி)

பிரபஞ்சம் என்பதன் பொருள் : ஆதியும் அந்தமும் வரையறுக்கப்பட்ட எல்லைகளும் அற்ற வான் வெளியே பிரபஞ்சம் ஆகும். பல கோடிக்கணக்கான மூலச்சூரியனைக் கொண்ட அண்டங்களின் தொகுதி பிரபஞ்சமாகும். இவ் அண்டங்களில் ஒன்றே பால்வெளி மண்டலம் ஆகும். பால்வெளி அண்டத்தின் ஒரு பகுதியே ஞாயிற்றுத் தொகுதி. ஞாயிற்றுத் தொகுதியின் ஒரு பாகமே பூமி ஆகும்.
பிரபஞ்சத்தின் விட்டம் : 93 Billion ஒளியாண்டுகள்
இப் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றி பல கோட்பாடுகள் காணப்படுகின்றன. அவற்றில் பின்வருவன முக்கியமானவை

1. மகா வெடிப்புக் கொள்கை / பேரண்ட வெடிப்புக் கொள்கை - Big Bang Theory
ஆதியில் இருப்பிலிருந்த சக்திமிக்க பிரம்மாண்டமான சடப்பொருள் (Unity) ஒன்று அதன் உயர்ந்த அடர்த்திநிலை காரணமாக வெடித்து சிதறியதன் மூலம் தோற்றம் பெற்றதே இப்பிரபஞ்சம் என்பது மகா வெடிப்புக் கொள்கை ஆகும்.

உலகத் தோற்றம் பற்றிய முதன்மைவாய்ந்த இக் கோட்பாடு விஞ்ஞானபூர்வ ஆதாரமுடைய, அனுபவத்தன்மையான வானியல் விஞ்ஞானக் கோட்பாடு ஆகும்.

மகாவெடிப்பு 13.75 Billion ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றது.
முன்வைத்தவர் : ஜோர்ஜ் லெமைற்றி (Georges Lemaitre) பெல்ஜியம் - 1927
இது நிலையான இருப்புக் கொள்கைக்கு எதிரானதாகும்.

2. நிலையான இருப்புக் கொள்கை - Steady State Theory / Static Universe
பிரபஞ்சம் ஆதியில் எவ்வாறு இருந்ததோ அவ்வாறே எப்போதும் உள்ளது என்பதே நிலையான இருப்புக் கொள்கை ஆகும். பிரபஞ்சத்திற்கு ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை. இது முடிவிலி வயதை உடையது.
முன்வைத்தவர் : பிரட் கொய்லி (Fred Hoyle) பெல்ஜியம் - 1948

3. சுருக்க விரிவுக் கொள்கை - Theory of Contraction and Expansion
சுருங்குதல் (Contraction), விரிதல் (Expansion) என்ற செயன் முறையினூடாக பிரபஞ்சம் தோற்றம் பெற்றது என்பது சுருக்க - விரிவுக் கொள்கையாகும்.

பிரபஞ்ச தோற்றம் பற்றி மேலும் சில கொள்கைகளும் முன்வைக்கப்பட்டன அவை

  • லூயினின் கொள்கை : வால்வெள்ளி சூரியனில் மோதியதால் தோன்றியது
  • லெக்கரின் கொள்கை : சடப்பொருட்கள் உடைந்ததன் மூலம் உருவாகியது
  • கூப்பியன் கொள்கை : சூரியனில் இருந்து ஒளிக்கற்றைகள் கோள்களை வெளித்தள்ளின
  • லாபிலாஸ் கொள்கை (பிரான்ஸ், 1749 - 1827) : (வான் புகையுருக் கோட்பாடு) வாயு, தூசி என்பன குளிர்ச்சியடைந்து பிரபஞ்சம் தோன்றியது.


போட்டிப் பரீட்சைகளுக்கான நுண்ணறிவு வினாக்கள் பயிற்சிகளுக்காக














இன்றைய ஆங்கில பாடப் பயிற்சியாக நாம் "Irregular verbs" அட்டவணையை பயிற்சி செய்யப் போகின்றோம். இது எமது அடுத்த பாடமான "ஆங்கில பாடப் பயிற்சி 10" க்கு அவசியமானது என்பதால் இதனை இன்று கொடுக்கின்றோம்.

நாம் ஆங்கில பாடப் பயிற்சி 7 ல் "இருக்கிறதுஎன்பதைக் குறிக்கும் "have/have got" சொற்களை மையப்படுத்திய கிறமர் பெட்டர்னைக் கற்றோம்.

இன்று "there is" எனும் சொல்லை மையப்படுத்திய கிறமர் பெட்டர்னை கற்கப் போகின்றோம்இந்த "there is" எனும் சொல்லும்நாம் சென்றப் பாடத்தில் கற்ற "have"எனும் சொல்லும் தமிழில் "இருக்கிறதுஎனும் ஒரே அர்த்ததைத் தான் தருகின்றன.இருப்பினும் இவ்விரண்டினதும் பயன்பாடுகள் வெவ்வேறானவை என்பதை கருத்தில் கொள்க.

There is + "இருக்கிறதுஎனும் சொல்லை மையப்படுத்தி இன்றைய கிறமர் பெட்டர்னை 22வாக்கியங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளதுஇவற்றையும் நாம் ஏற்கெனவே கற்ற "கிறமர் பெட்டன்களைப்போல் மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள்இது மிகவும் இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும்.

ஆங்கிலத்தில் "Well begun is half done" என்பர்அதுபோல் எமது ஆங்கில பாடப் பயிற்சியில் வழங்கப்படும் "கிறமர் பெட்டன்களைநீங்கள் மனப்பாடம் செய்துக்கொண்டாலே பாதி வெற்றிப்பெற்று விட்டதற்கு சமனானதாகும்.

நீங்கள் புதிதாக இந்த "ஆங்கிலம்வலைத்தளத்திற்கு வருகைத்தந்தவரானால் எமது பாடப் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 01 லிருந்தே தொடரும் படி கேட்டுக்கொள்கின்றோம்.அதுவே மிக எளிதாக இப்பாடப்பயிற்சிகளை தொடர வழிவகுக்கும்.
    There is a book.
    இருக்கிறது ஒரு புத்தகம்.
    There is not a book. (isn’t)
    இல்லை ஒரு புத்தகம்.
    There are books.
    இருக்கின்றன புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There are not books. (aren’t)
    இல்லை புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There can be a book.
    இருக்க முடியும் ஒரு புத்தகம்.
    There can't be a book.
    இருக்க முடியாது ஒரு புத்தகம்.
    There will be a book.
    இருக்கும் ஒரு புத்தகம்.
    There won't be a book.
    இருக்காது ஒரு புத்தகம்.
    There was a book.
    இருந்தது ஒரு புத்தகம்.
    There would have been a book.
    இருந்திருக்கும் ஒரு புத்தகம்.
    There were books
    இருந்தன புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There must be a book.
    (நிச்சயமாகஇருக்க வேண்டும் ஒரு புத்தகம்.
    There must have been a book.
    இருந்திருக்க வேண்டும் ஒரு புத்தகம். (நிச்சயமாக)
    There may be a book.
    இருக்கலாம் ஒரு புத்தகம்.
    There may have been a book.
    இருந்திருக்கலாம் ஒரு புத்தகம்.
    There has to a book.
    இருக்கவேண்டும் ஒரு புத்தகம்.

    There have to be books.
    இருக்கவேண்டும் புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There should be a book.
    இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.
    There ought to be a book.
    எப்படியும் இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.

    There has been a book.
    சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து இருக்கிறது ஒரு புத்தகம்.
    There had been a book.
    அப்போதிருந்து/அக்காலத்திலிருந்து இருந்தது ஒரு புத்தகம்.

    There have been books.
    சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து இருக்கின்றன புத்தகங்கள். (பன்மை/ Plural)

    Home work:
    There is a book on the table. (3, 4, 11, 17, 22 Plural)
    இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்
    There is an election in the USA .(3, 4, 11, 17, 22 Plural)
    இருக்கிறது ஒரு தேர்தல் அமெரிக்காவில்
    There are two classical languages in India. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன இரண்டு செம்மொழிகள் இந்தியாவில்.
    There are 1652 languages in India. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன 1652 மொழிகள் இந்தியாவில்.
    There are 6760 languages in the world. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன 6760 மொழிகள் உலகத்தில்.
    There are hundred of vegetable items in the market. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் சந்தையில்.
    கவனிக்கவும்:

    ஒருமையாக ஆரம்பிக்கும் வாக்கியங்களில் 3, 4, 11, 17, 22 போன்ற இடங்களில் பன்மையாக (Plural) மாற்றி எழுதுங்கள்.

    பன்மையாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களில் 1, 2, 9, 16, 20 போன்ற இலக்கங்களின் போது (Singular) ஒருமையாக மாற்றி எழுதுங்கள்.
    வேறுபாடுகள் (Have / There is)

    “haveதன்னுடையஅல்லது தனக்கே சொந்தமாக "இருக்கிறதுஎனும் உரிமையைக் குறிப்பதற்கு பயன்படுகின்றது.

    there is - பொதுவாக "இருக்கிறதுஎன்பதை குறிப்பதற்கு பயன்படுகின்றது.

    உதாரணமாக:

    “I have a book.” எனும் போது "என்னிடம் இருக்கிறது ஒரு புத்தகம்.” என பொருள்படுகின்றதுஅதாவது தன்னிடம் அல்லது தனக்கு உரிமையாக "ஒரு புத்தகம் இருக்கிறதுஎன்பதை அவ்வாக்கியம் வெளிப்படுத்துகிறது
    "There is a book on the table." எனும் இவ்வாக்கியம் "இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்எனும் போது அப்புத்தகம் யாருடையதுயாருக்கு உரிமையானது?என்பதைப் பற்றியெல்லாம் விவரிக்கவில்லைபொதுவாக "ஒரு புத்தகம் இருக்கிறது." அது "மேசையின் மேல் இருக்கிறது." என்பதை மட்டுமே விவரிக்கிறது என்பதை கருத்தில் கொள்கஅது யாருடையது என்பது எமக்குத் தெரியாது அல்லது உரிமையாளர் யார் என்பதை குறிப்பிடாமல் பேசுகின்றோம்.
குறிப்பு:

Here – இங்கே

There – அங்கே

Here and there – இங்கும் அங்கும்

"There" என்ற சொல் "அங்கேஎன பொருள்பட்டாலும் இந்த கிறமர் பெட்டர்னில் உள்ள"There is +" எனும் சொல்லுக்கு அவ்வாறான அர்த்தம் கொள்ளவேண்டாம். “இருக்கிறது"எனும் அர்த்தத்திலேயே பயன்படுத்துங்கள்.

சரிபயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் ஊடாகவோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.

நன்றி!

அன்புடன்
www.agaram.lk