அகரம்: April 2012

Home \\ Archive: April 2012



புதிய பாடத்திட்டம்



1. அளவையியலின் இயல்பும் பாடப்பரப்பும் / அறிமுகம்
(வரைவிலக்கணம், வரலாறு, ஏனய துறைகளுடனான தொடர்பு, நடைமுறை பயன்பாடு)
2. அளவையியலின் நவீன நோக்கு
  • பதங்கள் - (பத வகைகள், தர்க்கத் தொடர்புகள்)
  • சிந்தனை விதிகள்
  • எடுப்புக்கள் - (எடுப்பு வகைகள், எடுப்புக்களில் பதங்களின் வியாத்தி நிலை)
3. பாரம்பரிய அளவையியல் அனுமானம்
  • உடன் அனுமானம் - (எடுப்பு முரண்பாடு, வெளிப்பேறு)
  • ஊடக அனுமானம் ஃ நியாயத்தொடை
4. வகுப்பு அளவையியல் / வென் வரைபடம்
5. குறியீட்டு அளவையியல்
(குறியீட்டாக்கம், உண்மை அட்டவணை முறை, பெறுகை முறை, தேற்றங்கள்)
6. மரவரிப்பட முறை / விருட்ச வரைபட முறை
(பொது விதிகள், வாய்ப்பை தீர்மானித்தல், கிளையாக்கம் - மூடிய நிலை, திறந்த நிலை)
7. பயனிலைச் சேர்க்கை / பயனிலைத் தருக்கம்
(பயனிலையாக்கம், பிணைப்பும் சுயாதீனமும், விதிகளும் எளிய அனுமானமும்)
8. தர்க்கப் போலிகள்
(சிவில், குற்றவியல் வழக்குகளின் தன்மை, நியமப்போலி, நியமமில் போலி)
துறைகளும் - தந்தையர்களும் (அளவையியலும் விஞ்ஞானமுறையும்)

அளவையியலின் தந்தை - அரிஸ்டோட்டில்இ  கி.மு 384 - 322, கிரேக்க நாட்டில் ஸ்டாகேரியா என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் - நிகோமாசுஸ்
நவீன அளவையியலின் தந்தை - கொட்லொப் பிராகே
குறியீட்டு அளவையியலின் தந்தை - பேட்டன் றசல்
விஞ்ஞானத்தின் தந்தை – கலிலியோ கலிலி
விஞ்ஞான முiயின் தந்தை - பிரான்சிஸ் பேகன்
தொகுத்தறி முறையின் தந்தைஃஅனுபவவாதத்தின் தந்தை - பிரான்சிஸ் பேகன்
உய்த்தறி முறையின் தந்தை - அரிஸ்டோட்டில்
விதி உய்த்தறி முறையின் தந்தை - காள் ஹெம்பல்
பொய்ப்பித்தல் கோட்பாட்டை முன்வைத்தவர் - காள் பொப்பர்
தற்கால அளவையியலின் தோற்றத்திற்கு வழிவிட்டுக் கொடுத்தவர் - இலைப்பினிஸ்ட்
பரிசோதனை முறையின் தந்தை எனப்படுபவர் - அரிஸ்டோட்டில்
பரிசோதனை உளவியலின் தந்தை - வில்கெய்ம் வூண்ட்
காரணகாரியவாதத்தைமுன்வைத்தவர் - இலைப்பினிஸ்ட்
காரண நிர்ணயமின்மைத் தத்துவத்தை முன்வைத்தவர் - ஹைசன் பேர்க்
அளவைபயன்வழிக் கொள்கையை முன்வைத்தவர் - ஜே.எஸ்.மில்
பயநிலைத்தர்கத்தின் முன்னோடி : கொட்லொப் பிராகே
அறிவுமுதல் வாதிகள் /நியாயவாதிகள் /உய்த்தறிவாதிகள் : டேக்காட், ஸ்பினாசோ, இலைப்பினிஸ்ட்
அனுபவமுதல் வாதிகள் /தொகுத்தறிவாதிகள் : லொக், பாக்ளி, டேவிட் கியூம், பிரான்சிஸ் பேகன்
வியன்னாவட்டத்தினர் /தர்க்கப் புலனறிவாதிகள் : 1920 - மொறிஸ் சிலிக், றூடெல்வ் கார்ணப்,A.J. அயர்,J.E மூவர், விக்கின்ஸ்ரைன்.
கருதுகோள் /உய்த்தறி வாய்ப்புபார்த்தல் வாதிகள் :
கருதுகோள் /உய்த்தறி பொய்ப்பித்தல் வாதிகள் :காள் பொப்பர்,


நூல்களும் எழுதியவர்களும் (அளவையியலும் விஞ்ஞானமுறையும்)

அரிஸ்டோட்டிலின் அளவையியல் சார்ந்தநூல்/அளவையியலின் முதல் நூல் : ஓர்கானன் (கருவி) - இது 6 பகுதிகளை உள்ளடக்கியது. இலைசியம் என்ற பாடசாலையில் இந் நூல் பயன்படுத்தப்பட்டது.
தற்கால அளவையியலின் தொடக்கத்திற்கு அடிப்படையாக அமைந்த பிராகே  இன் நூல் : பெக்றிவெஸ்சிரிப்ட் (எழுத்து) -  1879
எடுப்பு நுண்கணிதம் /குறியீட்டு அளவையியலின் வளர்ச்சிக்கு உதவிய பேட்டன் றசல், அல்பிரட் நோத் வைட் கெட் எழுதியநூல் : பிறின்சிப்பியா மதமடிக்கா (கணித கருதுகோள்கள்) - - 1910 -1913  குறியீட்டு அளவையியலில் கணிதமயப்படுத்தலின் அவசியத்தை வலியுறுத்திய நூல்
நோவம் ஓர்காணம் (புதியதந்திரங்கள் /புதிய கருவி/இயற்கையை விளக்குவதற்கான மெய்க்குறிப்புக்கள்) என்ற நூலை எழுதியவர் :  பிரான்சிஸ் பேகன் - 1620 இல்
விஞ்ஞானப் புரட்சியின் கட்டமைப்பு என்ற நூலை எழுதியவர் : தோமஸ் கூன் - 1962 இல் இந் நூலில் கட்டளைப்படிமக் கோட்பாடு முன்வைக்கப்பட்டது.
முறைகளுக்கு எதிராக என்ற நூலை எழுதியவர் : பாவுல் ஃபெய்ராபாண்ட்  - 1975 இவரது ஏனய நூல்கள் - எதிர்ப்பு முறை, விஞ்ஞான சமூகத்தின் சுதந்திரம்
காள் பொப்பர் எழுதிய மிக முக்கியமான நூல் : 'ஊகங்களும் நிராகரித்தலும்'
இந்நூலில் விஞ்ஞான முறைக்கு புதிய கருத்iதினை சுட்டிக்காட்டினார்.
இதுவே பொய்ப்பித்தல் கோட்பாடு ஆகும்


பிரபல கூற்றுக்கள் (அளவையியலும் விஞ்ஞானமுறையும்)

'அளவையியல் முன்பு எங்கு இருந்ததோ அங்கு தற்போது இல்லை தற்போது எங்கே இருக்கிறதோ அங்கேயே இருக்கவும் முடியாது' என்று கூறியவர்
பிராட்லி
'தொகுத்தறி முடிவுகள் ஒரு எதிர்பார்க்கையே அன்றி நிச்சயமான அறிவல்ல' எனக் கூறியவர்
ஏர்னஸ்ற்மாஹ்
'மாற்றமுறாத உண்மையென ஒன்றில்லை மனித அறிவின் வளர்ச்சிக்கு எல்லை இல்லை' எனக்கூறிய சமகால விஞ்ஞான முறையியலாளர்.
காள் பொப்பர்
'விஞ்ஞானத்தில் காலத்திற்கு காலம் கண்டுபிடிக்கும் கொள்கைகள் ஏற்கனவே ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகளிலும் ஒப்பிட முடியாது என்பதால் விஞ்ஞானம் வேறுபட்ட பெறுமானங்களில் செயற்படுகின்றது.' என்று கூறியவர்
தோமஸ் கூன்
விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சியின் பயனால் கட்டியெழுப்பப்பட்ட அறிவுத்துறை விஞ்ஞானம் எனக் கூறியவர்
காள் பொப்பர்
'விஞ்ஞானரீதியானகோட்பாடுகள் விஞ்ஞானஆய்வுநிகழ்ச்சித் திட்டங்களாகக் கருதப்படவேண்டும்'எனக் கூறியவர் :
லக்காதோஸ்
'விஞ்ஞான முறையியலாளர்களின் பணி நியாயப்படுத்தலுக்கான தருக்கத்தை விளக்குவதாக அமையலாமேயொழிய கண்டுபிடிப்புக்கான தருக்கத்தை விளக்குவதாக அமைய முடியாது' எனக் கூறியவர் :
என். ஆர். ஹன்சன்
'விஞ்ஞானம் ஒரு கருத்து நிலை' எனக் கூறியவர் : பாவுல் ஃபெய்ராபாண்ட்
மனிதன் கடலுள் மின் போல நீந்தவும், காற்றில் பறவை போல பறக்கவும், மிருகங்கள் இழுக்காத வண்டிகளிற் செல்லவும் முடியும். ஆராய்ச்சி செய்யுங்கள். பரிசோதனைகள் பல புரிந்து உண்மையைக் காணுங்கள் என மக்களை விஞ்ஞான ஒளி பெறக்கூறி அழைத்தவர் :
றோஜர் பேர்கன்
குறிக்கோளற்ற நோக்கல் குறுட்டுத் தன்மையானது எனக் கூறியவர் - காணப்ட்
இருப்பது எதுவும் வேறு எந்த வகையிலும் இராது தான் உள்ளவாறு இருப்பதற்கும் வேறொன்றாக மாறாமல் இருப்பதற்கும் போதிய நியாயம் இருத்தல் வேண்டும் எனக் கூறியவர்
இலைப்பினிஸ்ட்
தொகுத்தறி முறைக்கு தர்க்க இன்றியமையாமை பொருந்தாது எனக்கூறியவர் : பிரான்சிஸ்பேகன்
ஓ தடித்த வானம் ஓ குறுட்டுப் பர்வையாளர் - ஏனக் கூறியவர்  - தைகோபிராகே
புவியீர்ப்புக் கோட்பாட்டை நியூட்டன் தன்னிடம் இருந்து களவாடிவிட்டார் எனக் கூறியவர் - றொபர்ட் ஹூக்
வாதங்களில் நியமம் உண்டு எனக் கண்டறிந்தவர் : அரிஸ்டோட்டில்
நியம விலகலை முன்வைத்தவர் : காள் பியசன் (1963)
அணு எடுப்புக்கள் பற்றிப் பேசியவர் : விக்கின்ஸ்ரைன்
மூலக் கூற்று எடுப்புப் பற்றிப் பேசியவர் : பேட்டன் றசல்



விஞ்ஞானிகள் : லூயி பாஸ்டர், கெப்ளர், கொப்பனிக்கஸ், நியுட்டன் ..........

விஞ்ஞானிகளின் பணி :
1. புதிய அறிவை கண்டுபிடித்துக் கூறுவர்
2. தவறுகளைச் சுட்டிக்காட்டுவர்
3. தொழில் நுட்பவியல் வளர்ச்சிக்கு உதவுவர்

விஞ்ஞான முறையியலாளர்கள் : காள்பொப்பர், காள்ஹெம்பல், பிரான்சிஸ் பேகன், நியுட்டன்....

விஞ்ஞனா முறையியலாளர்களின் பணி :
1. விஞ்ஞான முறைகளை புணரமைப்பு செய்வர்
2. விஞ்ஞான அறிவின் தன்மையை மதிப்பிடுவர்

விஞ்ஞானியாகவும் விஞ்ஞான முறையியலாளராகவும் உள்ளவர் : அரிஸ்டோட்டில், கலிலி, நியூட்டன்,