அகரம்: April 2015

Home \\ Archive: April 2015

போட்டிப் பரீட்சைகளுக்கான நுண்ணறிவு வினாக்கள் பயிற்சிகளுக்காக















தர்க்கப் படலை - Logic Gates


தர்க்கப் படலை /  தர்க்க வாயில்கள் என்பது : 'தர்க்க உள்ளீடுகளை எடுத்து அவற்றைச் செயற்படுத்தி தர்க்கரீதியான வெளியீட்டை (விடையை) தருவதே தர்ப்பப்படலை ஆகும்.'

இன்றைய ஆங்கில பாடப் பயிற்சியாக நாம் "Irregular verbs" அட்டவணையை பயிற்சி செய்யப் போகின்றோம். இது எமது அடுத்த பாடமான "ஆங்கில பாடப் பயிற்சி 10" க்கு அவசியமானது என்பதால் இதனை இன்று கொடுக்கின்றோம்.

நாம் ஆங்கில பாடப் பயிற்சி 7 ல் "இருக்கிறதுஎன்பதைக் குறிக்கும் "have/have got" சொற்களை மையப்படுத்திய கிறமர் பெட்டர்னைக் கற்றோம்.

இன்று "there is" எனும் சொல்லை மையப்படுத்திய கிறமர் பெட்டர்னை கற்கப் போகின்றோம்இந்த "there is" எனும் சொல்லும்நாம் சென்றப் பாடத்தில் கற்ற "have"எனும் சொல்லும் தமிழில் "இருக்கிறதுஎனும் ஒரே அர்த்ததைத் தான் தருகின்றன.இருப்பினும் இவ்விரண்டினதும் பயன்பாடுகள் வெவ்வேறானவை என்பதை கருத்தில் கொள்க.

There is + "இருக்கிறதுஎனும் சொல்லை மையப்படுத்தி இன்றைய கிறமர் பெட்டர்னை 22வாக்கியங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளதுஇவற்றையும் நாம் ஏற்கெனவே கற்ற "கிறமர் பெட்டன்களைப்போல் மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள்இது மிகவும் இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும்.

ஆங்கிலத்தில் "Well begun is half done" என்பர்அதுபோல் எமது ஆங்கில பாடப் பயிற்சியில் வழங்கப்படும் "கிறமர் பெட்டன்களைநீங்கள் மனப்பாடம் செய்துக்கொண்டாலே பாதி வெற்றிப்பெற்று விட்டதற்கு சமனானதாகும்.

நீங்கள் புதிதாக இந்த "ஆங்கிலம்வலைத்தளத்திற்கு வருகைத்தந்தவரானால் எமது பாடப் பயிற்சிகளை ஆங்கில பாடப் பயிற்சி 01 லிருந்தே தொடரும் படி கேட்டுக்கொள்கின்றோம்.அதுவே மிக எளிதாக இப்பாடப்பயிற்சிகளை தொடர வழிவகுக்கும்.
    There is a book.
    இருக்கிறது ஒரு புத்தகம்.
    There is not a book. (isn’t)
    இல்லை ஒரு புத்தகம்.
    There are books.
    இருக்கின்றன புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There are not books. (aren’t)
    இல்லை புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There can be a book.
    இருக்க முடியும் ஒரு புத்தகம்.
    There can't be a book.
    இருக்க முடியாது ஒரு புத்தகம்.
    There will be a book.
    இருக்கும் ஒரு புத்தகம்.
    There won't be a book.
    இருக்காது ஒரு புத்தகம்.
    There was a book.
    இருந்தது ஒரு புத்தகம்.
    There would have been a book.
    இருந்திருக்கும் ஒரு புத்தகம்.
    There were books
    இருந்தன புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There must be a book.
    (நிச்சயமாகஇருக்க வேண்டும் ஒரு புத்தகம்.
    There must have been a book.
    இருந்திருக்க வேண்டும் ஒரு புத்தகம். (நிச்சயமாக)
    There may be a book.
    இருக்கலாம் ஒரு புத்தகம்.
    There may have been a book.
    இருந்திருக்கலாம் ஒரு புத்தகம்.
    There has to a book.
    இருக்கவேண்டும் ஒரு புத்தகம்.

    There have to be books.
    இருக்கவேண்டும் புத்தகங்கள். (பன்மை/ Plural)

    There should be a book.
    இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.
    There ought to be a book.
    எப்படியும் இருக்கவே வேண்டும் ஒரு புத்தகம்.

    There has been a book.
    சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து இருக்கிறது ஒரு புத்தகம்.
    There had been a book.
    அப்போதிருந்து/அக்காலத்திலிருந்து இருந்தது ஒரு புத்தகம்.

    There have been books.
    சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து இருக்கின்றன புத்தகங்கள். (பன்மை/ Plural)

    Home work:
    There is a book on the table. (3, 4, 11, 17, 22 Plural)
    இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்
    There is an election in the USA .(3, 4, 11, 17, 22 Plural)
    இருக்கிறது ஒரு தேர்தல் அமெரிக்காவில்
    There are two classical languages in India. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன இரண்டு செம்மொழிகள் இந்தியாவில்.
    There are 1652 languages in India. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன 1652 மொழிகள் இந்தியாவில்.
    There are 6760 languages in the world. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன 6760 மொழிகள் உலகத்தில்.
    There are hundred of vegetable items in the market. (1, 2, 9, 16, 20 Singular)
    இருக்கின்றன நூற்றுக்கணக்கான மரக்கறி வகைகள் சந்தையில்.
    கவனிக்கவும்:

    ஒருமையாக ஆரம்பிக்கும் வாக்கியங்களில் 3, 4, 11, 17, 22 போன்ற இடங்களில் பன்மையாக (Plural) மாற்றி எழுதுங்கள்.

    பன்மையாக ஆரம்பிக்கப்பட்டிருக்கும் வாக்கியங்களில் 1, 2, 9, 16, 20 போன்ற இலக்கங்களின் போது (Singular) ஒருமையாக மாற்றி எழுதுங்கள்.
    வேறுபாடுகள் (Have / There is)

    “haveதன்னுடையஅல்லது தனக்கே சொந்தமாக "இருக்கிறதுஎனும் உரிமையைக் குறிப்பதற்கு பயன்படுகின்றது.

    there is - பொதுவாக "இருக்கிறதுஎன்பதை குறிப்பதற்கு பயன்படுகின்றது.

    உதாரணமாக:

    “I have a book.” எனும் போது "என்னிடம் இருக்கிறது ஒரு புத்தகம்.” என பொருள்படுகின்றதுஅதாவது தன்னிடம் அல்லது தனக்கு உரிமையாக "ஒரு புத்தகம் இருக்கிறதுஎன்பதை அவ்வாக்கியம் வெளிப்படுத்துகிறது
    "There is a book on the table." எனும் இவ்வாக்கியம் "இருக்கிறது ஒரு புத்தகம் மேசையின் மேல்எனும் போது அப்புத்தகம் யாருடையதுயாருக்கு உரிமையானது?என்பதைப் பற்றியெல்லாம் விவரிக்கவில்லைபொதுவாக "ஒரு புத்தகம் இருக்கிறது." அது "மேசையின் மேல் இருக்கிறது." என்பதை மட்டுமே விவரிக்கிறது என்பதை கருத்தில் கொள்கஅது யாருடையது என்பது எமக்குத் தெரியாது அல்லது உரிமையாளர் யார் என்பதை குறிப்பிடாமல் பேசுகின்றோம்.
குறிப்பு:

Here – இங்கே

There – அங்கே

Here and there – இங்கும் அங்கும்

"There" என்ற சொல் "அங்கேஎன பொருள்பட்டாலும் இந்த கிறமர் பெட்டர்னில் உள்ள"There is +" எனும் சொல்லுக்கு அவ்வாறான அர்த்தம் கொள்ளவேண்டாம். “இருக்கிறது"எனும் அர்த்தத்திலேயே பயன்படுத்துங்கள்.

சரிபயிற்சிகளைத் தொடருங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் ஊடாகவோ அல்லது முகப்பில் காணப்படும் எமது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.

நன்றி!

அன்புடன்
www.agaram.lk


நாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு (Verb) வினைச்சொல்லை 73 ன்று விதமாக மாற்றி பயிற்சி செய்தோம். Grammar Patterns 4 கில் ஒரு பெயர்ச்சொல்லை (Noun) 32 விதமாக மாற்றியும் பயிற்சி செய்தோம்.

இன்றைய "கிரமர் பெட்டர்ன்" சற்று வித்தியாசமானது. அதாவது “இருக்கிறது” (have) எனும் சொல்லை மையமாகக்கொண்டே இன்றைய “கிரமர் பெட்டனை” நாம் வடிவமைத்துள்ளோம்.

Have எனும் சொல்லின் தமிழ் அர்த்தம் “இருக்கிறது” என்பதாகும். உதாரணமாக "I have work." எனும் வாக்கியத்தை தமிழில் மொழிப்பெயர்த்தால் “எனக்கு இருக்கிறது வேலை” என்று வரும். இந்த வார்த்தையை “எனக்கு இருக்கிறது வேலை, இருந்தது, இருக்கலாம், இருக்கும், இருந்திருக்கும், இருந்திருக்கலாம்" என 23 ன்று வாக்கியங்களாக மாற்றி இன்று பயிற்சி செய்யப் போகின்றோம்.

நாம் ஏற்கெனவே பயிற்சி செய்த மற்ற Grammar Patterns களைப் போல் இந்த கிரமர் பெட்டர்னையும் வாய்ப்பாடு பாடமாக்குவதைப் போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். நீங்கள் புதிதாக இந்த “ஆங்கிலம்” தளத்திற்கு வருகைத் தந்தவரானால், Grammar Patterns 1 லிருந்தே உங்கள் பயிற்சிகளை தொடரும்படி கேட்டுக்கொள்கின்றோம். அதுவே இப்பாடப் பயிற்சியைத் தொடர இலகுவாக இருக்கும்.

சரி இன்றைய பாடத்தைத் தொடருவோம்.
Practice the following Grammar Patterns Daily
1. I have work.
2. I have got work.
எனக்கு இருக்கிறது வேலை.

3. I don’t have work.
4. I haven't got work.
எனக்கு இல்லை வேலை.

5. I had work.
எனக்கு இருந்தது வேலை.

6. I didn't have work.
எனக்கு இருக்கவில்லை வேலை.

7. I may have work.
8. I might have work.
9. I may be having work.
எனக்கு இருக்கலாம் வேலை.

10. I must have work.
எனக்கு இருக்க வேண்டும் வேலை.

11. I should have work.
எனக்கு இருக்கவே வேண்டும் வேலை.

12. I ought to have work.
எனக்கு எப்படியும் இருக்கவே வேண்டும் வேலை.

13. I must be having work.
எனக்கு நிச்சயம் இருக்கவேண்டும் வேலை.

14. I could have had work.
எனக்கு இருக்க இருந்தது வேலை.

15. I should have had work.
எனக்கு இருக்கவே இருந்தது வேலை.

16. I may have had work.
எனக்கு இருந்திருக்கலாம் வேலை.

17. I must have had work.
எனக்கு நிச்சயமாக இருந்திருக்க வேண்டும் வேலை.

18. I would have had work.
எனக்கு இருந்திருக்கும் வேலை.

19. I shouldn't have had work.
எனக்கு அநாவசியம் இருந்தது வேலை.

20. I needn't have had work.
எனக்கு அநாவசியம் இருந்தது வேலை.

21. I will have work.
எனக்கு இருக்கும் வேலை.

22. I won't have work.
எனக்கு இருக்காது வேலை.

23. I wish I had work.
எவ்வளவு நல்லது எனக்கு இருந்தால் வேலை.

Homework:
இன்று நாம் கற்ற இந்த "கிரமர் பெட்டர்னை" போன்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் 23 விதமாக மாற்றி எழுதி, வாசித்து பயிற்சி செய்யுங்கள்.

1. I have an interview
எனக்கு இருக்கிறது ஒரு நேர்முகத்தேர்வு.

2. I have money
எனக்கு இருக்கிறது பணம்.

3. I have a Tamil dictionary
எனக்கு இருக்கிறது ஒரு தமிழ் அகராதி.

4. I have a kind heart.
எனக்கு இருக்கிறது ஒரு இரக்கமான இதயம்.

5. I have two brothers and three sisters
எனக்கு இருக்கிறார்கள் இரண்டு சகோதரர்களும் மூன்று சகோதரிகளும்.

6. I have fever.
எனக்கு இருக்கிறது காய்ச்சல்.

7. I have cough and cold.
எனக்கு இருக்கிறது இருமலும் தடுமலும்.

8. I have a beautiful house
எனக்கு இருக்கிறது ஒரு அழகான வீடு.

9. I have a car
எனக்கு இருக்கிறது ஒரு மகிழூந்து.

10. I have pass port.
எனக்கு இருக்கிறது கடவுச்சீட்டு.

ஓர்/ஒரு என்பதற்கு "a" என்றும் "an" என்றும் இரண்டு விதமாக ஆங்கிலத்தில் பயன்படுத்துகின்றோம். இவ்வேறுப்பாட்டை Use a/an - Vowels and Consonant பாடத்தில் பார்க்கவும்.

குறிப்பு:

“இருக்கிறது” எனும் சொல்லின் ஆங்கில அர்த்தம் "have" ஆகும். இந்த “have” எனும் சொல் குறிப்பாக “இருக்கிறது” என்று பொருள்பட்டாலும், அது தனக்கே, அல்லது தனக்கு சொந்தமாகவே இருக்கிறது எனும் உரிமையைக் குறிக்க பயன்படும் சொல் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

இவற்றை நான்கு விதமாக பிரித்துப் பார்க்கலாம்.

1. "Possession" உரிமை அல்லது உடமை போன்றவற்றை குறிப்பிடுவதற்கு:
உதாரணம்:

Does he have a car?
அவனுக்கு இருக்கிறதா ஒரு மகிழூந்து?
Do you have a beautiful house?
உனக்கு இருக்கிறதா ஒரு அழகான வீடு?

2. "Relationships" உறவுமுறைகள் தொடர்பாக பேசுவதற்கு:
உதாரணம்:

How many brothers do you have?
எத்தனை சகோதரர்கள் உனக்கு இருக்கிறார்கள்?

3. "Illnesses" நோய்கள் தொடர்பாக பேசுவதற்கு:
உதாரணம்:

Do you have fever?
உனக்கு இருக்கிறதா காய்ச்சல்?
Do you have cough and cold?
உனக்கு இருக்கிறதா இருமலும் தடுமலும்?

4. "Characteristics" பிரத்தியேகமான, சிறப்பியல்புகள் தொடர்பாகப் பேசுவதற்கு:

Do you have an interview?
உனக்கு இருக்கிறதா ஒரு நேர்முகத்தேர்வு?
Do you have a kind heart?
உனக்கு இருக்கிறதா ஓர் இரக்கமான இதயம்?

உரிமைகள் உடமைகள் பற்றியோ, உறவு, நட்பு குறித்துப் பேசும் போதோ, நோய்கள் தொடர்பாகப் பேசும் போதோ, சிறப்பியல்புகளைப் பற்றி குறிப்பிடும் போதோ "Have" அல்லது "have got" எனும் இரண்டில் எதைவேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இரண்டும் ஒரே அர்த்தத்தைக் குறிக்கும் நிகழ்காலச் சொற்களாகும்.

I have work.
I have got work. இவ்விரண்டு சொற்களுக்கும் "எனக்கு இருக்கிறது வேலை" என்றே தமிழாக்கம் கொடுக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும். have/ have got எனும் இரண்டு சொற்பதங்களுமே ஒரே மாதிரியான அர்த்தத்தையே தருகின்றது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

கவனிக்கவும்:
இங்கே நாம் "have got" என்று பயன்படுத்தியிருப்பதால், இங்கு காணப்படும் "got" எனும் சொல் "get" இன் Past Tense/Past Participle லாக வரும் "got" என கருதிவிடவேண்டாம்.

இந்த have, have got எனும் இரண்டு நிகழ்காலச் சொற்களையும் கேள்வி பதிலாக மாற்றும் போது எவ்வாறான வேறுபாடுகள் தோன்றுகின்றன என்பதைக் கீழே கவனியுங்கள்.

Do you have a cold?
Have you got a cold?

Yes, I have a cold.
Yes, I have got a cold.

Do you have a house in the country?
Have you got a house in the country?
Yes, I have a house in the country.
Yes, I have got a house in the country.

Do you have any brothers or sisters?
Have you got any brothers or sisters?
No, I don’t have any brothers or sisters.
No, I haven’t got any brothers or sisters.

சரி! பயிற்சிகளைத் தொடருங்கள்.

இது மிக மிக இலகுவான ஒரு பாடப் பயிற்சி முறையாகும். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம். அதற்கு முன்பாகவே இந்த "கிரமர் பெட்டன்களை" மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.

இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளுங்கள். அதேவேளை உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்கவும் மறவாதீர்கள்.

நன்றி!


அன்புடன்
www.agaram.lk
நாம் ஏற்கெனவே Grammar Patterns 1, 2, 3 களில் ஒரு வாக்கியத்தை; 73 ன்று வாக்கியங்களாக மாற்றி பயிற்சி செய்தோம். இன்று ஒரு "பெயர்ச் சொல்லை" (Noun) அல்லது "சுட்டுப்பெயரை" (Pronoun) உதாரணமாக எடுத்து, அதனை 32 வாக்கியங்களாக மாற்றி, பயிற்சி செய்யும் முறையைப் பார்க்கப் போகின்றோம். இவற்றையே "to be" form என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றது.

இந்த கிரமர் பெட்டர்னையும் வாய்பாடு பாடமாக்குவதுப் போன்று மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள்.
"பெயர்ச்சொல்" என்பது பொருற்கள், நபர்கள், இடங்கள், மிருகங்கள் போன்றவற்றை குறிப்பிடுவதற்கான பெயர்கள் அல்லது சொற்கள் ஆகும். அவற்றை பல்வேறு வகைகளாக பிரித்து கற்பிக்கப்படுகின்றன. அவற்றை கீழுள்ள இணைப்புகளை சொடுக்கி பார்க்கலாம்.

பெயர்சொற்களின் வகைகள் (Types of Nouns)
சுட்டுப்பெயர்களின் வகைகள் (Pronouns) 


Sarmilan is a Manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி. 
(சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருக்கிறார்)

மேலுள்ள வாக்கியத்தைப் பாருங்கள். அதில் "சர்மிலன்" என்பது ஒரு நபரின் பெயராகும். அதாவது பெயர்ச்சொல்லாகும். இந்த "சர்மிலன்" எனும் பெயர் சொல்லை கொண்டு "சர்மிலன் ஒரு நிர்வாகி, சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருந்தார், ... இருந்திருப்பார், ... இருக்கலாம், ... இருந்திருக்கலாம், ... இருக்கவேண்டும், ... இருந்திருக்கவேண்டும்". என்பதுப்போன்று இந்த கிரமர் பெட்டனை உருவாக்கலாம். 

அதேவேளை "சர்மிலன்" எனும் பெயரைக் குறிப்பிடாமல் அதற்குப் பதிலாக சுட்டுப்பெயரைப் பயன்படுத்தியும் இந்த கிரமர் பெட்டனை உருவாக்க முடியும். நான் இங்கே "சர்மிலன்" எனும் பெயர்ச்சொல்லுக்கு பதிலாக "அவர்" எனும் சுட்டுப்பெயரை பயன்படுத்தி (He is a Manager. - அவர் ஒரு நிர்வாகி) என இக்கிரமர் பெட்டனை உருவாக்கியுள்ளேன். நீங்கள் இரண்டு விதமாகவும் பயிற்சி செய்யுங்கள்.

Practice the following Grammar Patterns daily.

1. He is a Manager.
அவர் ஒரு நிர்வாகி.
(அவர் ஒரு நிர்வாகியாக இருக்கிறார்)

2. He can be a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருக்க முடியும்.
அவருக்கு ஒரு நிர்வாகியாக இருக்க முடியும்.

3. He was a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

4. He would have been a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருப்பார்.

5. He may be a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கலாம்.

6. He may have been a Manager
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருக்கலாம்.

7. He will be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருப்பார்.

8. He must be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கவேண்டும்.

9. He must have been a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருந்திருக்கவேண்டும்.

10. He seems to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிகின்றது.

11. He doesn't seem to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிகின்றதில்லை.

12. He seemed to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரிந்தது.

13. He didn't seem to be a Manager.
அவர் ஒரு நிர்வாகிப் போல் தெரியவில்லை.

14. He has to be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டும்.

15. He should be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாகவே (இருக்க) வேண்டும்.

16. He ought to be a Manager.
அவர் எப்படியும் ஒரு நிர்வாகியாகவே வேண்டும்.

17. He doesn’t have to be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டியதில்லை.

18. He needn’t be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக வேண்டிய அவசியமில்லை.

19. He has been a Manager.
சற்றுமுன்பிருந்து/கிட்டடியிலிருந்து அவர் ஒரு நிர்வாகியாக இருக்கின்றார்.

20. He had been a Manager.
அன்றிலிருந்து/அக்காலத்திலிருந்து அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

21. He had to be a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்பட்டது.

22. He didn’t have to be a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக வேண்டி ஏற்படவில்லை.

23. He must not be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக (இருக்க) வேண்டியதில்லை.
அவர் ஒரு நிர்வாகியாகக் கூடாது.

24. He shouldn’t be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக இருக்கவே வேண்டியதில்லை.
அவர் ஒரு நிர்வாகியாகவே கூடாது.

25. He won't be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக மாட்டார்.

26. He can't be a Manager.
அவர் ஒரு நிர்வாகியாக முடியாது.
அவருக்கு ஒரு நிர்வாகியாக முடியாது.

27. He could have been a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாக இருக்க இருந்தது.

28. He should have been a Manager.
அவருக்கு ஒரு நிர்வாகியாகவே இருக்க இருந்தது.

29. He ought to have been a Manager.
அவருக்கு எப்படியும் ஒரு நிர்வாகியாகவே இருக்க இருந்தது.

30. He needn't have been a Manager.
அவர் அநியாயம் ஒரு நிர்வாகியானது.

31. He shouldn't have been a Manager.
அவர் அநியாயம் ஒரு நிர்வாகியானது.

32. He being a Manager, he knows the work.
அவர் ஒரு நிர்வாகியாகும் பட்சத்தில் அவருக்கு தெரியும் அதன் வேலைகள்.

Homework:
மேலே நாம் பயிற்சி செய்தது போன்று கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளையும் 32 விதமாக மாற்றி, எழுதியும் வாசித்தும் பயிற்சி செய்யுங்கள்.

She is a nurse.
அவள் ஒரு தாதி.

He is a teacher.
அவர் ஒரு ஆசிரியர்.

She is a domestic helper.
அவள் ஒரு வீட்டுப் பணிப்பெண். (வீட்டு உதவியாளர்)

Vikneshwaran is a Chief Minister.
கருணாநிதி ஒரு முதலமைச்சர்.

Donald Tsang is a chief executive of Hong Kong.
டொனால்ட் செங் ஹொங்கொங்கின் தலமை நிறைவேற்று அதிகாரி.

குறிப்பு:

உதாரணம் "is" என்று சிகப்பு நிறத்தில் வேறுப்படுத்தி காட்டியிருப்பதை அவதானித்து, மற்றைய வாக்கியங்களையும் சிகப்பு நிறத்தில் கோடிட்டு காட்டியிருக்கும் இடங்களை நிரப்பி எழுதி பயிற்சி செய்யுங்கள்.

She is a nurse.
She _____ a nurse.
She _______ a nurse

கவனிக்கவும்:

Sarmilan is a Manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி.

இவ்வாக்கியத்தின் தமிழ்ப்பெயர்ப்பை சற்று கவனியுங்கள். இதில் "சர்மிலன் ஒரு நிர்வாகி." என்றே தமிழ் வழக்கின் படி நிகழ்கால வாக்கியமாக பயன்படுத்துக்கின்றோம். ஆனால் அவ்வாக்கியத்தை சற்று உன்னிப்பாக அவதானித்தீர்களானால், அதன் முழு வாக்கியம் "சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருக்கிறார்." என்று அமையும். அதற்கமைவாகவே "அவர் ஒரு நிர்வாகியாக இருந்தார், அவர் ஒரு நிர்வாகியாக இருக்கமுடியும், அவர் ஒரு நிர்வாகியாக இருப்பார்" எனும் வாக்கியங்களும் அமைகின்றன என்பதை எளிதாக உணர்ந்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக:

Sarmilan is a Manager.
சர்மிலன் ஒரு நிர்வாகி. (சாதாரணமாக தமிழில் எழுதும் வழக்கு)
சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருக்கிறார். (முழுமையான வாக்கிய அமைப்பு)

Sarmilan was a Manager.
சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருந்தார்.

Sarmilan will be a Manager.
சர்மிலன் ஒரு நிர்வாகியாக இருப்பார்.

சரி பயிற்சிகளை தொடருங்கள். இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறையாகும்.

இப்பாடத்திட்டம் பற்றிய உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை என்னுடன் பகிர்ந்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இப்பாடம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.

நன்றி!

அன்புடன்
www.agaram.lk