அகரம்: ஆங்கில பாடப் பயிற்சி 09 - அட்டவணை (Irregular verbs)

ஆங்கில பாடப் பயிற்சி 09 - அட்டவணை (Irregular verbs)

இன்றைய ஆங்கில பாடப் பயிற்சியாக நாம் "Irregular verbs" அட்டவணையை பயிற்சி செய்யப் போகின்றோம். இது எமது அடுத்த பாடமான "ஆங்கில பாடப் பயிற்சி 10" க்கு அவசியமானது என்பதால் இதனை இன்று கொடுக்கின்றோம்.



Irregular verbs
PresentPastPast Participleதமிழ் அர்த்தம்
arisearosearisenஎழுந்திரு/ உதயமாகு/ஏறு
allowallowedallowedஅனுமதி/ இடங்கொடு
appearappearedappearedதோன்று
bearboreborne/bornபிரசவி/ தாங்கு/ பொறு
beatbeatbeatenஅடி/ தோழ்வியடையச் செய்
beatbeatbeatதாளம்/ இதயத் துடிப்பு
becomebecamebecomeஏற்படு/ ஒரு நிலையிலிருந்து மாறு
beginbeganbegunஆரம்பி/ தொடங்கு
bendbentbentவளை/ திருப்பு
bindboundboundகட்டு/ சேர்த்துக் கட்டு
bitebitbittenகடி
bleedbledbledஇரத்தம் வடிதல்/ இரத்தம் கசிதல்
blowblewblownஊது/ மலர்தல்
boilboiledboiledகொதிக்க வை/ அவி
borrowborrowedbrrowedகடன் வாங்கு
breakbrokebrokenஉடை/ இடைநிறுத்து
bringbroughtbroughtஎடுத்து வா/ கொண்டு வா
burnburntburntசுடு/ எரி/ கொளுத்து
burstburstburstவெடி/ வெடியெனச் சிரி
buildbuiltbuiltகட்டு/ அமை
buyboughtboughtவாங்கு (விலைக்கு)
carecaredcaredகவனி
carrycarriedcarriedதூக்கு/ சும
catchcaughtcaughtபிடி
choosechosechosenதெரிவுசெய்/ தேர்ந்தெடு
cleancleanedcleanedசுத்தமாக்கு/ சுத்தம் செய்
climbclimbedclimbedஏறு
closeclosedclosedமூடு
comecamecomeவா
completecompletedcompletedநிறைவு செய்/ பூர்த்திச் செய்
crosscrossedcrossedகடந்துச்செல்/ கட/ குறுக்கிடு
cutcutcutவெட்டு
dealdealtdealtசமாளி/ நிர்வகி/ பகிர்ந்தளி/
decoratedecorateddecorotedஅலங்கரி
deceivedeceiveddeceivedஏமாற்று
devidedevideddevidedபங்கிடு/பிரி
digdugdugதோண்டு
dodiddoneசெய்
dreamdreamtdreamtகனவு காண்
drawdrewdrawnபெறு/ இழு
drinkdrankdrunkகுடி/ பருகு
drivedrovedrivenஓட்டு
eatateeatenசாப்பிடு
enterenteredenteredநுழை/ பிரவேசி/ உட்புகு
fallfellfallenவிழு
fall downfell downfallen downகீழே விழு
fearfearedfearedபயப்படு
feedfedfedஊட்டு
feelfeltfeltஉணர்
fightfoughtfoughtசண்டையிடு
findfoundfoundகண்டுப்பிடி/ காண்
finishfnishedfinishedமுடி/ முடிவு செய்/
flyflewflownபற
forgetforgotforgotமற
forgiveforgaveforgivenமன்னிப்பளி/ மன்னித்துவிடு
freezefrozefrozenஉறை/ உறையவை
getgotgotபெறு/ அடை
givegavegivenகொடு
grindgroundgroundஅரை/அரைத்து தூளாக்கு
gowentgoneபோ
growgrewgrownவளர்/ அபிவிருத்தியடை
hanghunghungதொங்கு/ தொங்கவிடு/ தூக்கிலிடு
havehadhadபெற்றிரு/ உடைத்தாயிரு/இரு(க்கிற)
hearheardheardகேள்/கேள்விப்படு
hidehidhiddenஒழி/ மறை
hirehiredhiredவாடகைக்கு எடு
hithithitஅடி/ தாக்கு
holdheldheldபிடி/ பற்றிக்கொள்
hunthuntedhuntedவேட்டையாடு
hurthurthurtகாயப்படுத்து/ புண்படுத்து/ நோகடி
inviteinvitedinvitedஅழை/ அழைப்புவிடு/ வரவழை
jumpjumpedjumpedகுதி/ தாவு/ பாய்
keepkeptkeptவை/ வைத்துக்கொண்டிரு
kickkickedkickedஉதை
knockknockedknockedதட்டு/ குட்டு
knowknewknownஅறிந்துக்கொள்/ தெரிந்துக்கொள்
knitknitknitதை/ இணை/ பின்னு
learnlearnt/learnedlearnt/learnedபடி/ கற்றுக்கொள்
leaveleftleftவிட்டுவிடு/ பிடியைவிடு/வெளியேறு
lendlentlentகடன் கொடு
letletletஉத்தரவு கொடு/ விடு
lightlit/lightedlit/lightedவெளிச்சமாக்கு/தீ வை/கொளுத்து/
loselostlostஇழ/ தொலைத்தல்/காணாமலாக்கு
makemademadeஉண்டுபண்ணு/தயார் செய்/நிர்மாணி
marrymarriedmarriedதிருமணம் புரி/திருமணம் செய்
meetmetmetசந்தி/எதிர்படு/கூடு
movemovedmovedநகர்/நகத்து/அசை
obeyobeyedobeyedகீழ்படி
openopenedopenedதிற
orderorderedorderedகட்டளையிடு
paypaidpaidசெலுத்து/ கொடு
pickpickedpickedபொறுக்கு/ தேர்ந்தெடு
ploughploughedploughedஉழு
prayprayedprayedபி்ரார்த்தனை செய்/ தொழு
preparepreparedpreparedதயார் செய்/ ஏற்பாடுசெய்
proveprovedprovedநிரூபி
pullpulledpulledஇழு
punishpunishedpunishedதண்டி/ தண்டனையளி
pushpushedpushedதள்ளு
putputputபோடு
quarrelquarreledquarreledசண்டடையிடு/ சச்சரவிடு
reachreachedreacedசென்றடை/ சேர்தல்
readreadreadவாசி/ படி
refuserefusedrefusedமறு/ நிராகரி
rideroderiddenஓட்டு/சவாரி செய்
ringrangrungமணியடி/ மணியொலி எழுப்பு
riseroserisenமேலெழுப்பு/ஏறு/ உதி
ruinruinedruinedநாசமாக்கு/ வீணாக்கு
runrunrunஓடு/ ஓட்டு/ நடத்து
saysaidsaidசொல்/ கூறு
seesawseenகாண்/ கண்டுக்கொள்
seeksoughtsoughtதேடி(நாடி)ச்செல்/
sellsoldsoldவிற்பனையாக்கு
sendsentsentஅனுப்பு/ வழியனுப்பு
shakeshookshakenகுலுக்கு/ உலுக்கு
shearshearedshearedகத்தரி
shineshoneshoneபளிச்சிடவை
shootshotshot(குறிப்பார்த்து) சுடு
showshowedshowedகாண்பி/ காட்டு/ காட்சிப்படுத்து
shrinkshrankshrunkசுருங்கு
shutshutshutமூடு/ மூடிக்கொள்/ அடை
singsangsungபாடு
sinksanksunkமூழ்கு/ மூழ்குதல்/அமிழ்
sitsatsatஉட்கார்/ அமர்
sleepsleptsleptஉறங்கு/ நித்திரைச்செய்
smellsmelt/smelledsmelt/smelledநுகர்
speakspokespokenபேசு
sowsowedsownதூவு/தெளி/பரப்பு/விதை/விதைத்தல்
speedspedspedவேகம்/ வேகப்படுத்து
spellspeltspelt(சொல்லின்) எழுத்துக்கூட்டு
spendspentspentசெலவழி/ செலவுவிடு
spillspiltspiltஊற்று/ சிந்து
spoilspoiltspoiltகெடு
spitspat/spitspat/spitதுப்பு
spreadspreadspreadபரப்பு/ பரவச்செய்
stealstolestolenதிருடு/ களவாடு
sweepsweptsweptபெருக்கு/கூட்டு (வீடு)
swearsworeswornசபதம் செய்
swellswelledswollenவீங்கு/ உப்பு(தல்)
swimswamswumநீந்து
taketooktakenஎடு
teachtaughttaughtகற்பி/ படிப்பித்துக்கொடு
teartoretornகிழி
telltoldtoldசொல்
testtestedtestedசோதனைச்செய்
thinkthoughtthoughtஆலோசி/எண்ணமிடு/கருது/நினை
throwthrewthrownவீசு/எறி
trusttrust/trustedtrust/trustedநம்பு/நம்பியிரு
understandundestoodunderstoodவிளங்கிக்கொள்/புரிந்துக்கொள்
wakewokewokenவிழித்தெழு
wearworewornஅணி/உடுத்து
weavewovewovenநெசவு செய்/பின்னு
weepweptweptஅழு/புலம்பு
wetwetwetநனை/ஈரமாக்கு
winwonwonவெற்றியடை/வெற்றிபெறு
wishwishedwishedவிரும்பு/ஆசைப்படு
wringwrungwrungபிழி/முறுக்கிப்பிழி
writewrotewrittenஎழுது
கவனத்திற்கு:
முக்காலமும் ஒரே மாதிரி இருப்பவைகள் (All Three forms are similar)
உதாரணம்:
betbetbet
நிகழ்காலமும் இறந்தக்காலமும் ஒரே மாதிரி இருப்பவைகள்
(Present Tense and Past Tense are similar)
உதாரணம்:
beatbeatbeaten
இறந்தக் காலத்தை தவிர மற்ற இரண்டும் ஒரே மாதிரி இருப்பவைகள்
(Present Tense and Past Particple are similar)
உதாரணம்:
comecamecome
நிகழ்காலத்தைத் தவிர மற்ற இரண்டும் ஒரே மாதிரி இருப்பவைகள்
(Past Tense and Past Participle are similar)
உதாரணம்:
bringbroughtbrought
முக்காலச் சொற்களும் வித்தியாசமாக இருப்பவைகள் (All 3 forms are different)
உதாரணம்:
beginbeganbegun

இந்த "Irregular verbs" களை மனப்பாடம் செய்துக்கொள்வது மிகவும் அவசியமானதாகும். நாம் பிழையின்றி ஆங்கிலம் பேச, எழுத விரும்பினால் நாம் இவற்றை முறையாகக் கற்பதே சிறந்த வழியாகும். எமது அடுத்த பாடப் பயிற்சியின் போது நாம் இறந்தக்கால (Past Tense) பயிற்சிகளைத் தொடர இருப்பதால் இவற்றை இன்றே மனப்பாடம் செய்துக்கொள்வது எளிதாக இருக்கும்.

மற்றும் எதிர்வரும் "Passive Voice" பாடங்களின் போதும் இந்த "Irregular verbs" அட்டவணை அவசியப்படும்.

எனவே கட்டாயம் மனப்பாடம் செய்துக்கொள்ளுங்கள். ஆங்கிலக் கல்வி அத்தியாவசியம் ஆகிவிட்ட இக்காலச் சூழமைவில் நாம் இலக்கணப் பிழையின்றி ஆங்கிலம் கற்பதே இன்றைய உலக ஒழுங்கில் எதிர் நீச்சல் போடுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

குறிப்பு:

இந்த "ஆங்கிலம்" பாடத்திட்டம் ஒரு ஒருங்கமைக்கப்பட்ட பாடத்திட்டம் ஆகும். இதன் முறையின் படியே பாடங்கள் வழங்கப்படும்.

கேள்விகள் கேட்போர் இந்த ஆங்கில பாடப் பயிற்சிகள் தொடர்பாக எழும் எந்த விதமான சந்தேகங்கள், கேள்விகளாயினும் கேட்கலாம். நீங்கள் அறிய விரும்பும் ஆங்கில சொற்கள் இருப்பின் அவற்றை எழுதுங்கள். அவை எதிர்வரும் பாடங்களுடன் இணைத்து வழங்கப்படும்.

ஆனால் ஒரு ஆங்கிலக் கட்டுரையை தமிழாக்கிக் கேட்பது, ஆங்கிலக் கல்விக்கு சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்பது போன்றவற்றை தவிர்க்கவும்.

ஆங்கிலக் கல்வி, ஆங்கிலம் மொழி தொடர்பில் எந்தவிதமான கேள்விகள் இருப்பினும் தயங்காமல் எழுதுங்கள். உங்கள் கேள்விகளுக்கான பதில் எமது பாடத்திட்டத்திற்குள் உள்ளதொன்றானால், அவற்றை அப்பாடங்களின் போது வழங்கப்படும்.எமது ஆங்கிலப் பாடத்திட்டத்திற்கு உள்ளடங்காத கேள்விகளாக இருப்பின் அவற்றை தொகுத்து பின் "கேள்வி பதில்" பகுதியாக வழங்குவதாக உள்ளோம்.

முடிந்தவரையில் உங்கள் கேள்விகளை தமிழிலேயே எழுதிக் கேளுங்கள். நீங்கள் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டெழுதினாலும், அவற்றுக்கான பதில் தமிழிலேயே வழங்கப்படும்.

சரி பயிற்சிகளை தொடருங்கள். மீண்டும் அடுத்தப் பாடத்தில் சந்திப்போம்.

நன்றி ஆங்கில உச்சரிப்பு பயிற்சி, ஆங்கிலம் பேச்சு பயிற்சி, English listening Practice, through Tamil, in Tamil, with Tamil, English irregular verbs with Tamil Explanation. 
அன்புடன் ஆசிரியர் 
www.agaram.lk

கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment