அகரம்: காள் பொப்பரின் பொய்ப்பித்தல் கோட்பாடு

காள் பொப்பரின் பொய்ப்பித்தல் கோட்பாடு

வரைவிலக்கணம் : ஒரு கருதுகோளிலிருந்து உட்கிடையாக எதிர்வுகூறல் பெறப்பட்டு அனுபவச்சோதனை மூலம் பெறப்பட்ட தரவுகளுடன் எதிர்வுகூறல் பொருந்தாவிட்டால் கருதுகோள் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே பொய்ப்பித்தல் கோட்பாடு ஆகும்
வடிவம் : (H→ I )
                      ~I
                     ஃ ~H
அவதானம் பரிசோதனை போன்ற அனுபவ சோதனை மூலம் பொய்ப்பிக்கக் கூடிய எண்ணக்கருக்களை உள்ளடக்கிய துறைகள் விஞ்ஞானங்கள் ஆகும்

கருதுகோள் / கொள்கை ஒன்றினை பொய்ப்பித்தல் கோட்பாட்டிற்கு உட்படுத்த வேண்டுமாயின் கருதுகோள் / கொள்கை கொண்டிருக்க வேண்டிய நிபந்தனைகள்
1. தெளிவான மொழிநடையிலும் கவர்பாடற்ற பதங்களாலும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்
2. ஆனுபவச்சோதனைகள் மூலம் பொய்ப்பிக்கக் கூடிய எதிர்வு கூறலை பெறுதல் வேண்டும்
3. திட்டமானதும் புலக்காட்சிக்கு உட்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.

விமர்சனம் :
1. அனுபவம் சாரா விஞ்ஞானங்களுக்கு பொருந்தாமை
2. சில அனுபவ விஞ்ஞானங்களுக்கும் பொருந்தாமை
3. எல்லா விஞ்ஞானங்களும் நிபந்தனை வடிவத்தில் அமையாமை
4. பல விஞ்ஞானிகள் விஞ்ஞானம் என்ற துறைகளை நிராகரித்தமை
5. எதிர்கூறல் பொய்யான போதும் கருதுகோள் பொய்ப்பிக்கப்படாமை
6. பொய்ப்பித்தல் கோட்பாட்டின்படி நிராகரிக்கப்பட்ட கருதுகோள் ஏற்கப்பட்டமை
7. விஞ்ஞான முறைமை பெறும் வடிவத்தை இலகுபடுத்தியமை
8. விஞ்ஞானிகள் தமது கோட்பாடு பொய்ப்பிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் முன்வைப்பதில்லை

விஞ்ஞான ரீதியற்ற வசனங்களின் பண்புகள்
1. கவர்பாடான வாக்கியங்கள்
2. அனுபவத்திற்கு அப்பாற்பட்ட வாக்கியங்கள்
3. அளவையியல் கணித உண்மைகள்
4. எதிர்வுகூற முடியாத வாக்கியங்கள்
5. உறுதியற்ற வாக்கியங்கள்
6. பெறுமான வாக்கியங்கள்

பொய்ப்பித்தல் கோட்பாட்டில் அடங்கியுள்ள தொகுத்தறி பண்புகள்
1. முதன்மைக்காரணி, துணைக்கருதுகோள் என்பனவற்றின் துணையுடன் ஒரு கருதுகோளிலிருந்து எதிர்வுகூறலை பெறுதல் - தொகுத்தறி
2. பல பிரச்சினைகளுக்கு தீர்வாக ஒரு கருதுகோளை உருவாக்குதல் - தொகுத்தறி
3. கருதுகோளிலிருந்து பெற்ற எதிர்வு கூறலை அனுபவச்சோதனைக்கு உட்படுத்துதல் - அனுபவ முறையை பயன்படுத்துவது தொகுத்தறி
4. நிராகரிக்கப்பட்ட பல கருதுகோள் ஒரு சரியான கருதுகோளின் தோற்றத்திற்கு வழியமைத்தல் - தொகுத்தறி

கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment