அகரம்: விஞ்ஞானத்தின் வரலாறு - History of Science (LOGIC)

விஞ்ஞானத்தின் வரலாறு - History of Science (LOGIC)



பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே விஞ்ஞானம் வளர ஆரம்பித்துவிட்டது. கைவினையின் வரலாறே விஞ்ஞானத்தின் வரலாறாக வளர்ச்சியடைந்தது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தீக்கற்களால் ஆக்கப்பட்ட கருவிகளே முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட கருவிகளாகும். கல்லாலான ஆயுதங்களையும், எலும்பு கொம்புகளினாலான ஆயுதங்களையும்; உருவாக்கியமைக்கு இன்றும் பல சான்றுகள் உள்ளன. நீர்வழிப் பிரயாணங்களுக்காக வள்ளங்களும், தெப்பங்களும் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த படி நிலைகளிலேயே விஞ்ஞானம் அக்காலம் முதல் தற்காலம் வரை வளர்ச்சியடைந்து வந்தது. இந்த அடிப்படையில் விஞ்ஞானத்தின் வரலாற்றை சரியாக விளங்கிக் கொள்வதற்கு அவற்றினுடைய வளர்ச்சிக் கட்டங்களை ஒவ்வொன்றாக ஆராய வேண்டியுள்ளது. அவை பின்வருமாறு.


1. கிரேக்கர் கால விஞ்ஞானம்.
2. சீனர் கால விஞ்ஞானம்.
3. அரேபியர் கால விஞ்ஞானம்.
4. மத்திய கால விஞ்ஞானம்
5. மறுமலர்ச்சிக் கால விஞ்ஞானம்
6. தற்கால விஞ்ஞானம்.

கிரேக்கர் கால விஞ்ஞானம்

சீனா, இந்தியா, மத்திய அமெரிக்கா, மொசப்பத்தேமியா போன்ற ஆதி நாகரீகங்களில் வானியில் ஆய்வுகள் முக்கியம் பெற்றிருந்த போதும் அவை முறைப்படுத்தப்பட்ட ஆய்வுகளாக இருக்கவில்லை. கிரேக்கர்களே இயற்கைத் தோற்றப்பாடுகள் பற்றிய முறைப்படுத்திய ஆய்வுகளை ஆரம்பித்தனர். ஆதிகிரேக்க மெய்யியல் அறிஞர்கள் உலகின் தோற்றம் பற்றிக் கூறிய கருத்துக்கள் பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானத்தில் ஏற்கப்பட்டது.

தேலீஸ் (கி.மு. 535-475) என்பவர் இயற்கையின் பன்மைத் தன்மையை ஆய்வு செய்தார். 'நீர்' தான் உலகின் தோற்றத்துக்கு அடிப்படைக் காரணம் எனக் கூறினார். பௌதீகப் பொருளைக் கொண்டு ஏனையவற்றை ஆக்கமுடியும் என்ற வகையில் இக்கருத்து ஏற்கக்கூடியதே. அனெக்சி மாந்தர் (கி.மு. 611-547) புவியியல், வானியல் பற்றிய கருத்துக்களை வெளியிட்டதுடன் பரிணாமக் கோட்பாட்டின் சில முக்கிய கருத்துக்களையும் வெளியிட்டர். அதாவது நீரிலிருந்தே உயிரினங்கள் தோன்றின எனவும், நீர் வற்றியபின் அவை நிலத்தில் வாழத் தொடங்கும்போது சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றி நிலப்பிராணிகளாக வாழத் தொடங்கின எனவும் கூறினார். அனெக்சிமினில் என்பவர் உலகின் தோற்றத்துக்குக் காரணம் காற்று எனக் கூறினார். ஹெக்காட்டஸ் என்பவர், மாற்றம் ஒன்றே உண்மையானது உலகின் தோற்றத்துக்கு அடிப்படைக் காரணம் நெருப்பு எனக் கூறினார். லூயிசிப்ஸ் என்பவரே சடப்பொருட்களின் அணுக்கொள்கையின் ஆரம்பகர்த்தாவாகும். இவரின் மாணவனான 'டெமோ கிரட்ஸ்' (கி.மு. 470-400) என்பவரை தற்கால அணுக்கொள்கையின் முன்னோடியாவர். பைதகரஸ் என்பவர் தனது பாடசாலையில் எண் சார்ந்த அறிவைப் போதித்தார். அட்சர கணிதம், கேத்திர கணிதம் என்பவை இவராலேயே முதன் முதலில் உருவாக்கப்பட்டது. 'அல்மியன்' என்பவர் உயிர் உள்ள பொருட்களை விஞ்ஞான ரீதியாக வெட்டிச் சோதித்து மூளையிலிருந்து கண், வாய், காது போன்ற உறுப்புகளுக்கு நரம்புகள் செல்லுகின்றன என்பதை அவதானித்தார். 'எம்பிடோக்கிளஸ்' (கி.மு. 500-430) உடல் சூட்டிற்குக் காரணம் இரத்தம் எனவும் இருதயமே குருதித் தொகுதியின் மையம் எனவும் கூறியுள்ளார். அனெக் சோகிறஸ் (கி.மு. 488 - 428) வானியியல் செய்த ஆய்வுகள் கிரேக்கத்தின் புதிய அறிவு வளர்ச்சிக்கு வழி வகுத்தது. 'ஹிப்போகிரட்டீஸ்'  வைத்தியத்துறையில் பல ஆய்வுகளைச் செய்தார். இவர் மருத்துவத்தில் அனுபவப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தினார். நோய்களுக்குக் காரணம் இறைவனுடைய நிகழ்வுகளே என்பதை மறுத்து மனிதன் வாழும் சூழலே நோய்களுக்குக் காரணம் எனக் கூறினார். இவருடைய காலத்திலேயே கலைக் கூடங்கள், மருத்துவபீடம், கணிதபீடம் என இரு துறைகளாகப் பிரிக்கப்பட்டுப் போதனைகள் நடாத்தப்பட்டன. 'பிளேட்டோ (கி.மு. 427-347) தனது கலாசாலையில் விஞ்ஞானம், தத்துவம், இறையியல், கேத்திர கணிதம், வானியல் போன்ற அறிவுத்துறைகளைக் கற்பித்தார். இவர் விஞ்ஞான சிந்தனைக்கும் சமய தத்துவத் துறைகளுக்குமிடையே உள்ள தொடர்புகள் அறியப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார். கணிதம் பற்றிக் கூறும் போது கணிதம் என்பது அளவையியல் ரீதியில் பயிற்சிதரும் ஒரு கருவியாகும் எனவும் கணிதம் தத்துவத்தின் நுழைவாயில் எனவும் குறிப்பிட்டார். ஒரு பிரச்சினைக்குத் தீர்வுகாண முற்படும்போது முடிவுபெறும் வரை தொழிற்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தியுள்ளார்.



மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள் 






விஞ்ஞானிகள் - Scientist



கிரேக்க நாட்டு விஞ்ஞானிகள்

1. பைதகரஸ்
கி.மு 580
மெய்யியல், கணிதம், வானியல்
  • கேத்திர கணிதத்தில் உள்ள பைதகரசின் தேற்றம் இவரால் முன்வைக்கப்பட்டது.
  • எண்களின் முக்கியத்துவம், குணாதிசயம் பற்றி கூறியுள்ளார்
  • சங்கீதத்திற்கும் கணிதத்திற்கும் இடையிலான தொடர்பைக் காட்டியுள்ளார்
  • இரவு பகல் ஏற்படுவதற்குக் காரணம் தீக்கோளம் ஒன்றை பூமி சுற்றி வருவதாகும் எனக்கருதினார்

2. ஹிப்போகிரட்டிஸ்
கி.மு 460 - 377
மருத்துவம்
  • மருத்துவ விஞ்ஞானத்தின் தந்தை 
  • மருத்துவர்கள் எடுக்கவேண்டிய ஒழுக்க சத்தியப்பிரமானத்தை அமைத்தார். இது ஹிப்போகிரட்டிஸ் சத்தியப்பிரமானம் எனப்படுகிறது  
  • மருத்துவ நூல் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார்

3. பிளேட்டோ
கி.மு 427 - 347
தத்துவம்
  • சோக்கிரட்டீஸின் முதல் மாணவன் 
  • அரிஸ்டோட்டிலின் குரு 
  • நீதி, சட்டம், கல்வி முறைகள், அரசியல் பற்றிய கருத்துக்களை வெளியிட்டார் 
  • தத்துவம், கணிதம் என்பனவற்றை கற்பித்தார்.

4. அரிஸ்டோட்டில்
கி.மு 384 - 322
மெய்யியல்
  • அளவையியலின் தந்தை 
  • உய்த்தறி அளவையியல் முறையை முன்வைத்தார், தொகுத்தறி முறையை ஏற்றார் 
  • உளவியல், ஒழுக்கவியல், அரசியல், பௌதீகம், பௌதீகவதீதம் போன்ற துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டார் 
  • விஞ்ஞானமனிதன்'
  • உயிரியல் விஞ்ஞானத்தின் தோற்றத்திற்கும் வழிவகுத்தார் 
  • இவரது 'தர்க்க நூல்' பிரபலமானது 

5. இயூக்கிளிட்
கி.மு 330 - 226
கணிதம்
  • கேத்திர கணிதத்தின் தந்தை 
  • இந்த கேத்திர கணிதம் உய்த்தறி தர்க்கமுறையை அடிப்படையாகக் கொண்டது.  
  • பகுபடா என்களை முடிவிலி என்றார் நிறுவியவர்
  • The element என்ற கேத்திர கணித நூலை எழுதினார்  

6. ஆக்கிமிடிஸ்
கி.மு 287 - 212
பௌதீகம், கணிதம்
  • விஞ்ஞான பரிசோதனை முறையின் தந்தை 
  • ஆக்கிமிடிசின் மிதப்பு விதி 
  • கப்பித் தொகுதி, நெம்புகோல் தொகுதிகளை கண்டுபிடித்தார் 
  • பை (π) யின் பெறுமானத்தை (π=22/7) நிர்ணயித்தார் 
  • இவை வட்டம், நீள்வட்டம் என்பனவற்றின் பரப்பளவை அறியஉதவின
  • (நீர்இறைக்கும் இயந்திரத்தின்) நீர்த்திருகை கண்டுபிடித்தார்

7. தொலமி
கி.பி 100 - 170
வானியல், புவியியல்
  • புவிமையக் கொள்கையை முன்வைத்தார் 
  • முதன் முதல் தேசப் படத்தை வரைந்தார்



 மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள்

கல்வியில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்

No comments:

Post a Comment